இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > காயந்திரி - முன்னுரை
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

காயந்திரி - முன்னுரை

  • இந்துமதம் என்றால் என்ன?
  • அது, எப்போது? எங்கு? எவரால்? ஏன் தோற்றுவிக்கப்பட்டது?
  • அதன் குரு யார்? குருகுலம் எது?
  • அதன் மூலக் கோயில் எது? மூது நூல் எது?
  • முதன்மையான வழிபாடு என்ன? தத்துவம் என்ன? சித்தாந்தம் என்ன?
  • அது கூறும் மானுடவாழ்வு விளக்கம் என்ன? வாழ்க்கைப் பயன் என்ன?
  • முற்பிறவி, மறுபிறவி பற்றிய கருத்து என்ன?
  • சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம், பிறப்பு, இறப்பு, மண்ணுலக வாழ்வு....... முதலியவை பற்றிக் கூறுவதென்ன?

...என்ற வினாக்களுக்கு விடை கூறும் வல்லமையுடையவரே இந்து மதத்தின் தலைவர். மேற்கூறிய வினாக்களுக்குச் செயல் விளக்கமாக மந்திரங்கள், பூசாவிதிகள், சடங்குகள், நெறிகள், சம்பிறதாயங்கள், மரபுகள், நம்பிக்கைகள், ஒழுகலாறுகள்..... முதலியவைகளைத் தெளிவான, அழகான, எளிமையான, பயனுடைய இலக்கியங்களாகத் தரக்கூடிய மொழிதான் இந்துமதத்தின் மூலமொழி, தாய்மொழி, முதல்மொழி, பூசைமொழி, அருளாட்சி மொழி, மதப்பயிற்சி மொழி, தேவமொழி.... எனும் தகுதியைப் பெற்றிடும்.

இந்த வரையறுக்கப்பட்ட கருத்தின்படிதான் (definition) இந்துமத வரலாறும், விளக்கமும் வழங்கப்படல், விளக்கப்படல் நிகழ வேண்டும். அப்பொழுதுதான், இந்து மதத்துக்குள் உள்பூசல், போட்டி, பொறாமை, சூழ்ச்சி, சண்டை, சச்சரவு, சுரண்டல், ஏமாற்று, தவறான வழிநடத்தல், மடமை, அறியாமை, புரியாமை, மதவிரோதம், மதத்துரோகம், மதமறுப்பு, மதவெறுப்பு, (மதக் காட்டிக் கொடுப்பு) முதலியவைகளை முழுமையாக வெல்ல முடியும்.

இப்படிச் சிந்திப்பதுதான் இந்து மறுமலர்ச்சி இயக்க வளவளர்ச்சிச் சிந்தனையாக இருக்க முடியும்.

தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் நாத்திகவாதத்தைத் துவக்கி வளர்த்தபோதும்! அவர், ஓர் இந்துமத அழிவுச் சத்தியாகச் செயல்படவே இல்லை! இல்லை!! இல்லை!!! இல்லவே இல்லை! அவர், பார்ப்பன மறுப்பு! வெறுப்பு! எதிர்ப்பு! என்ற கருத்தில்தான் இந்துமதத் தலைவர்களாகப் பார்ப்பனர் இருப்பதையும், பார்ப்பனர் மொழியான சமசுக்கிருதம் இந்துமத ஆட்சிமொழியாக இருப்பதையும் கண்டித்தார்! பழித்தார்! அவரே, தமிழ்மொழி இந்துமத ஆட்சிமொழியாவதையும், தமிழர் குருக்களாவதையும், அனைவரும் கோயில் 'கருவறைக்குள்' சென்று வழிபாடு செய்வதையும் ஆதரித்தார்! வரவேற்றார்! வலியுறுத்திப் போராடினார்.

எனவே, 'பகுத்தறிவுப் பகலவன், சீர்திருத்தச் சிங்கம், தமிழினத்தந்தை, பெரியார் ஈ.வெ.ரா. இந்துமதத்தைச் சீர்திருத்தும் ஒரு மாபெரும் வீரச் சீர்திருத்தக் காரராகத்தான் வாழ்ந்தார்.....' என்ற பேருண்மையை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்துச் செயல்படலே இந்துமத மறுமலர்ச்சிப் பணியை எழுச்சியும், செழுச்சியும், உயர்ச்சியும் உடையதாக்கிடும்.

 

திட்டங்கள்:

(1) இந்துமதம், பார்ப்பனர் என்று கூறப்படும் வட ஆரியரின் வருகைக்குப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கடலுள் மறைந்த இளமுறியாக் கண்டத்தில் பதினெண் சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்டது.

(2) இந்துமதத்துக்குப் பதினெண் சித்தர்களும், நாற்பத்தெட்டு வகைச் சித்தர்களும், நாற்பத்தெட்டு வகை அருட்பட்டத்தார்களும், பதின்மூன்று வகை அருளாளர்களும்..... பிற அருட் சித்தியாளர்களும் உருவாக்கிச் சென்றுள்ள விந்துவழி வாரிசுகளும், கருவழி வாரிசுகளும், குருவழி வாரிசுகளுமே குருமார்கள், தலைவர்கள், அருட்தளபதிகள். எனவே பார்ப்பனர் யாரும் இந்துமதத்தின் குருவாகவோ! தலைவராகவோ! தளபதியாகவோ!...... இருக்கவே முடியாது! முடியாது!! முடியாது!!! முடியவே முடியாது!

(3) பதினெண் சித்தர்களின் தாய்மொழியான தமிழ்மொழிதான் இந்து மதத்தின் ஆட்சி மொழி! அருள்மொழி! பூசைமொழி! பத்திமொழி! சத்திமொழி! சித்திமொழி! முத்திமொழி!.... எனவே, சித்தர்கள் ஆரியர்களின் எழுத்தற்ற பேச்சு மொழியைத் தமிழின் அடிப்படையில் உருவாக்கிய சமசுக்கிருத மொழிக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பே இல்லை.

குறிப்பு: சித்தர்களின் சாபத்தால் செத்துப் போன ஒரு மொழியே சமசுக்கிருத மொழி. இந்த உயிரற்ற மொழியில் கூறப்படும் மந்திரம், சாத்திறம், தோத்திறம், ஆகமம், உபநிடதம், வேதம்..... முதலிய அனைத்துமே பயனற்றவை, பிணத்துக்குச் சமமானவையே.

(4) ஆரியர்களின் வேதமதத்துக்குத் தலைவராக இருக்கும் ஆச்சாரியார்களோ, பீடாதிபதிகளோ! மடாதிபதிகளோ! குருமார்களோ! சன்னிதானங்களோ!..... இந்துமதத்தின் தலைவர்களாகக் கருதப்படவே மாட்டார்கள். இப்படிக் கருதப் பட்டதால்தான் இந்துமதம் நலிந்து, மெலிந்து, தாழ்ச்சியும், வீழ்ச்சியும் அடைந்தது. எனவே, ஆரியர்களோ, ஆரியமொழியோ இந்துமதத்துக்குத் தலைமை தாங்குவதும், வழிகாட்டுவதும் தடுக்கப் பட்டேயாக வேண்டும். இதனையே இ.ம.இ.யின் இரண்டாவது தலைவரான சித்தர் காகபுசுண்டர் தமது முடிவான கருத்தாக அனைத்து இ.ம.இ. சார்புடைய அமைப்புக்களுக்கும், அடியான்களுக்கும், அடியாள்களுக்கும், அடியார்களுக்கும், ஆர்வலர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் அறிவிக்கிறேன்.

--- காக்கா வழியன் பண்ணையாடி ம. பழனிச்சாமி பிள்ளை

(5) சித்தர் ஏளனம்பட்டியார் ".....ஆரியர்களின் வேதநெறிதான் துறவறத்தைக் கூறுகிறது. ஆனால், இல்லறத்தைத் துறப்பவன், மறப்பவன், மறுப்பவன் பெரிய பாவி. அவன் பூசை செய்யக் கூடாது. அவனைப் பார்ப்பதும், அவனோடு பழகுவதும் பாவம் என்று பதினெண் சித்தர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் ஆரியத் துறவிகளை எப்படிப் புனிதர்களாக, புண்ணியவான்களாக, மதத் தலைவர்களாக, குருமார்களாக ஏற்க முடியும்' எனவே, ஆரியத் துறவிகள் இந்துமதத்தின் குருமார்களாக, தலைவர்களாக, ஆச்சாரியார்களாக, பீடாதிபதிகளாக, சன்னிதானங்களாகக் கருதப்படவே கூடாது! கூடாது!! கூடாது!!! கூடவே கூடாது!

தமிழினத்து மடாதிபதிகள், சன்னிதானங்கள், ஆச்சாரியார்கள்.... ஆரியரைப் பார்த்தே துறவியாயினர். இது தவறு. திருந்த வேண்டும். இல்லறத்தார்தான் இந்துமதத்தில் குருமார்களாக, ஆச்சாரியார்களாக, தலைவர்களாக, வழிகாட்டிகளாக, அருளாளர்களாக, பீடாதிபதிகளாக, மடாதிபதிகளாக, சன்னிதானங்களாக.... இருக்க வேண்டும்! இருக்க முடியும். இதனைச் செயலாக்கினால்தான் இந்துமதம் வளமிகு வளர்ச்சியும், வலிவும் பொலிவும் பெற்றிடும்......" என்று எழுதிச் சென்றிருப்பதை இ.ம.இ.யின் இரண்டாவது தலைவர் என்று யாமும் அப்படியே அறிவிக்கிறோம்.

சித்தர் காகபுசுண்டர் காக்காவழியன் பண்ணையாடி ம.பழனிச்சாமி பிள்ளை

(6) சித்தர்களில் மண்ணை, பொன்னை, பெண்ணை மறுத்தும் வெறுத்தும் வாழ்பவர் உண்டு. இவர்கள் 'ஞானசித்தர்' எனப்படுவர். இவர்கள் ஆக்கப் பூர்வமாக எந்த ஒரு வகையான வழிபாட்டு நிலையத்தையும் உருவாக்க முடியாது. இவர்கள் தங்களுடைய பூசைகளுக்கு மற்றோர் குருக்கள், பூசாறி,.... தேடிட நேரிடும். இவர்கள் தத்துவ விளக்க நாயகர்களாக வாழ்ந்திடுவர். தங்களுடைய வாரிசுகளாக அருளுலகில் எவரையும் உருவாக்க முடியாதவர்களாகி விடுவார்கள்.

குறிப்பு:
(அ) பெண்ணை வெறுப்பதும், மறுப்பதும், இறைச்சியுணவை மறுப்பதும், வெறுப்பதும் ஒன்றே. எனவே, இவர்கள் பலியும், படையலும் இல்லாமலே பூசை செய்வர்.

(ஆ) இப்படிப் பட்டவர்கள் மோனத்தால் ஞானசித்தி பெற்றுத் தத்துவ வளத்துக்கும் வளர்ச்சிக்கும் பாடுபடுவார்கள். ஆனால், பதினெண் சித்தர்கள் படைத்த இந்துமதத்துக்குத் தலைவர்களாகவோ, வழிகாட்டிகளாகவோ செயல்பட இயலாது. இவர்கள், பதினெண் சித்தர்கள் படைத்த கருவறைகளுக்குள் சென்று வழிபட இயலாதவர்கள்.

(7) காயந்திரி மந்தரம் பலியோ, படையலோ இல்லாமல் கூட ஓதிப் பூசையினை முடிக்கும் சிறப்பினை உடையது. எனவே, இதனை ஞானசித்தர்கள் அன்றாடம் ஆறுகாலம் ஓதியே அனைத்துப் பூசைகளையும் நிறைவு செய்து கொள்கின்றனர்.

(8) காயந்திரி மந்தரம் பெரியவர், சிறியவர், ஆண், பெண்...... என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஓதிப் பதினெட்டாண்டுகளில் மனித வாழ்வுக்குத் தேவையான சத்திகளைப் போதுமான அளவு பெற்றுக் கொள்ள உதவுகிறது.

குறிப்பு:

(அ) காயந்திரி மந்தரத்தைப் பதினெட்டாண்டுகளுக்குப் பிறகும் முறையாக ஓதும் போதுதான் மானுட வாழ்வு கடந்த மிகப் பெரிய சத்திகள் சித்தியாகின்றன.

(ஆ) பதினெட்டாண்டுகள் காயந்திரி மந்தரம் ஓதிய பிறகுதான்
        காயந்திரி மாந்தரம்
        காயந்திரி மாந்தரீகம்
        காயந்திரி மந்திரம்
        காயந்திரி மந்திறம்
எனும் நான்கைக் குருவழியாக முறையாக அவரவர் பக்குவத்துக்கும், தேவைக்கும், ஆர்வத்துக்கும் ஏற்ப ஒன்றன்பின் ஒன்றாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

(இ) பெரும்பாலும் 18 ஆண்டுகள் காயந்திரி மந்தரம் சொன்னவர்கள் அகம்பாவம், ஆணவம், பேராசை, சொந்தபந்தப் பாசம்.... முதலியவைகளை யெல்லாம் வென்று இல்லறத் துறவியாக 'அந்தணர்' ஆகிடுகின்றனர். எனவே, இவர்கள் குருக்களாக, ஆச்சாரியாராக, ஆதீனமாக, சன்னிதானமாக, மடாதிபதியாக, பீடாதிபதியாகச் செயல்படலாம். இவர்கள் தொடர்ந்து ஆண்பெண் இன்பம் துய்த்துத்தான் வாழவேண்டும் என்பதுதான் இந்துமதம்.

(9) காயந்திரி மந்தரத்தைச் சொல்லுகின்ற பெண் தன் மனதில் எந்தக் கடவுளை நினைக்கிறாளோ அந்தக் கடவுளாகவே மாறிவிடுகிறாள்.

கடவுள் - பொதுச்சொல். 48 வகை வழிபடு நிலையினரையும் குறிக்கும். அதனால், பதினெண் சித்தர்கள் காயந்திரி மந்தரம் ஓதிக் கொண்டிருக்கும் பெண்ணைப் பூசை செய்வது, வணங்குவது, கும்பிடுவது, வழிபடுவது.... மிகச் சிறந்த பயன்களைக் குறுகிய கால அளவில் விரைந்து தரும் என்று வலியுறுத்துகின்றனர்.

குறிப்பு:

(அ) குருவழி ஏந்தரீக, தாந்தரீக, மாந்தரீகப் பூசைகளை முழுமையாக இட்டும் தொட்டும் சுட்டியும் வழங்கப் பெற்றுச் சித்தி பெற்றவர்கள், எந்தப் பரிகாரத்தையும் குருவாணை பெற்றுப் பாதிப்புள்ளவர்களை ஒரு மண்டலம் (48 நாட்கள்) காயந்திரி மந்தரம் ஓதச் சொல்லி மேற்படிப் பூசைகளில் எதைச் செய்தாலும் முழுமையான நலம் விளையும்.

(ஆ) ஆரியர்கள் பெண்கள் மந்தரம் சொல்லுவதைத் தடுத்துள்ளார்கள். ஆனால், சித்தர்களின் இந்துமதம் பெண்களை எல்லாப் பூசைகளிலும் கலந்து கொள்ள அனுமதிப்பதால் அதைத் தடை செய்யவில்லை அவர்கள். இருப்பினும் விதவை, தீட்டு, மலடி.... என்று பெண்களில் ஒரு பகுதியினரைப் பூசைகளில் பங்கு பெறாமல் தடுக்கும் சட்டதிட்டக் கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளனர் ஆரியர். இதுவே, இந்துமதத்துக்குக் கணிசமான அளவு நலிவுகளையும் சிக்கல்களையும் வழங்கியுள்ளது.

எனவே காயந்திரி மந்தரத்தை இனிவரும் பதினெண் சித்தர் பீடாதிபதிகளாவது தாராளமாக எல்லோரும் தெரிந்து, அறிந்து, பயின்று, பயன்படுத்தி, அநுபவித்துப் புரிந்து நன்மையடையும்படிச் செய்ய வேண்டும். அதுதான், இந்துமதத்தை மறுமலர்ச்சி பெறச்செய்யும்; பதினெண் சித்தர்கள் படைத்த இந்து மதமே உலக மதங்களனைத்துக்கும் மூலமதம், தாய்மதம்,... என்ற பேருண்மையை உலகம் உணரச் செய்யும்; உலக மதங்களை ஒன்றிணைக்கும்; உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உருவாக்கும். தனிமனிதர்களைப் பக்குவப்படுத்திக் குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு.... முதலிய அனைத்தையும் வளப்படுத்தி, வலிமைப்படுத்திப் பொலிவு பெறச் செய்யும் ஆற்றல் 'காயந்திரி மந்தரத்துக்கே' உண்டு.

என்னால் காயந்திரி மந்தரத்தை உலகுக்கு வழங்க முடிய வில்லையே என்று வருந்துகிறேன். இருந்தாலும் இ.ம.இ., அ.வி.தி., க.வ.க., அ.ஆ.க.,.... முதலிய பல அமைப்புக்களைக் காயந்திரி மந்தரம் பயிர் செய்யப்படப் போகும் நிலத்துக்கு வேலியாக அமைக்கிறேன். ஏனெனில், வேலியில்லாப் பயிராக இந்துமதம் இருந்ததால்தான் போலியானவற்றால் இந்துமதம் நலிந்தது, செயல் தடுமாறித் தோல்வி பெற்றிட நேரிட்டது......

இனியாவது தமிழர் உலகுக்கு இந்துமதத்தை அமுதமாக, காயகல்பமாக, கற்பகத் தருவாக வழங்கட்டும்.

-- கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமிப் பிள்ளை

 

யாம், பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி இராசிவட்ட நிறைவுடையார், ஆத்தாள் அமளிகை, கொற்றவை இருக்கை, பராசத்தி திருவடி..... என்று அறுபத்துநான்கு நிலைகளையும் பாரம்பரிய உரிமையாகப் பெற்று இந்துமதம் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எமக்குரிய பதினெட்டாண்டு காலப் பயிற்சிகளையும், பதினெட்டாண்டு கால முயற்சிகளையும் முறையாக நிறைவேற்றி முடித்த கால எல்லைக்குள்ளேயே அரசயோகம் செய்து முடித்தோம். உலக அருளாளர்களும், கருக்களும், குருக்களும், தருக்களும், திருக்களும், தாத்தாக்களும், ஆத்தாக்களும்,.... பலபடப் புகழ்ந்து விதந்து பேசும் அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம் என்ற நிலையையும் சித்தி செய்தோம். இவற்றின் பிறகும் யாம் இலைமறை காயாகவே இருந்து செயல்பட்டுக் 'குருகுலங்கள்', 'பத்திப் பாட்டைகள்', 'சத்திச் சாலைகள்', 'சித்திச் சோலைகள்', 'அருட்கோட்டங்கள்', 'தவச்சாலைகள்', 'வேள்விப் பள்ளிகள்', 'யாகசாலைகள்'.... அமைத்து அருளுலகப் பயிற்சி வழங்கி நாற்பத்தெட்டு வகையான அருளாளர்களையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டோம். இப்படி உருவானவர்கள் மூலம் நாற்பத்தெட்டு வகையான வழிபாட்டு நிலையங்களையும் புத்துயிர்ப்புச் செய்யும் பணிகளைத் துவக்கினோம். "வாருங்கள் மானுடரே! உங்களைக் கடவுளாக்குகிறோம்!" என்று அழைப்புக் கொடுத்தே அருட்பணி விரிவாக்கத் திட்டத்தைச் செயலாக்கி அருளை அநுபவப் பொருளாக வழங்க ஆரம்பித்தோம். கி.பி. 1772 இல் எம் தாய்வழித் தாத்தா கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமிப் பிள்ளை தோற்றுவித்த இ.ம.இ.யை (இந்து மறுமலர்ச்சி இயக்கம்) அரசுப் பதிவுக்குள்ளாக்கி நாடெங்கும் கிளைகளைத் தோற்றுவித்து இந்துமத வளவளர்ச்சிப் பணியை விரிவு படுத்தினோம். இதற்குத் துணையாக ஏளனம்பட்டியார் உருவாக்கிய க.வ.க. (கடவுளை வழிபடுவோர் கழகம்), அ.ஆ.க. (அருளுலக ஆர்வலர் கழகம்), .... முதலியவைகளையும் நாடெங்கும் உருவாக்கினோம். ஒளிவுமறைவோ! சாதிமத வரையறையோ! ஏழைபணக்காரர் என்ற வேறுபாடோ இல்லாமல் 'பிறணவம்', 'பிறாணாயாமம் (பிறணவ யாமம்)', 'அருட்சினை மந்திறம்', 'கட்டு மந்திரம்', 'யாக மந்திரம்', .... முதலியவைகளை வழங்கினோம். இவற்றிற்கெல்லாம் மேலாக, உலகுக்கு அருளை அநுபவப் பொருளாக வழங்கிட எமது சாதனைகளின் மூலம் பலருக்கு 'ஞானக்காட்சி', 'அருட்கணிப்பு', 'அருள்வாக்கு', 'பரிகாரம் செய்யும் அருளாற்றல்', 'தவசித்தி',...... முதலிய அருட்செல்வங்களை வழங்கி அருளாளர்களாகச் செயல்படச் செய்தோம். இத்திட்டத்தில் சில தனிமனிதர்களின் தவறுகளால் பழியும், இழப்பும், தேக்கமும், குறையும்.... வந்தன. இருந்தாலும், அவற்றை உடனுக்குடன் திருத்திச் செயல்பட்டோம்.

 

இவற்றையெல்லாம் கணக்கிட்ட உலக அருளாளர்கள் 'இந்துமதத்தால்தான் உலக ஒற்றுமை, சமத்துவம், பொதுவுடமை, அமைதி,..... முதலியவை உருவாக்க முடியும்' என்ற பேருண்மையை உணர்ந்தனர். எனவே, எம்மை 'இந்துமதத் தந்தை, 'குருமகா சன்னிதானம்', 'ஞாலகுரு சித்தர் கருவூறார்' என்று பாரம்பரிய அருட்பட்டங்களின் சுருக்க அருட்பட்டங்களால் ஏற்றுப் போற்றினர். அத்துடன் உலகம் முழுவதுமுள்ள அருளாளர்கள் எமக்கு எல்லாவித உதவிகளையும், பாதுகாப்புக்களையும் அருளாட்சி முயற்சித் துணைகளையும் வழங்கலாயினர்.

இவற்றால் துணிவு பெற்ற யாம், பருவகாலத்தே பயிர் செய்தல் வேண்டுமென உணர்ந்து அருட்பயிர் விளைவிக்கும் பணியில் முழுமையாக எம்மையும், எம்மைச் சார்ந்த பல நூறாயிரக்கணக்கான அருளாளர்களையும் பல்லாயிரக்கணக்கான அமைப்புக்களையும் ஈடுபடுத்தியுள்ளோம். இப்பணியின் முதல் கட்டமாகக் காயந்திரி மந்தரத்தைப் பதினெண் சித்தர்கள் முதன்முதல் தமிழ்மொழியில் எப்படி வெளியிட்டனரோ! அப்படியே இப்போது வெளியிடுகிறோம். இதன் முன்னுரையாக இ.ம.இ.யின் முதல் தலைவரான கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் எழுதியவைகளிலிருந்து சில வாசகங்களையும், இ.ம.இ.யின் இரண்டாவது தலைவரான எம் தந்தை சித்தர் காகபுசுண்டர் காக்காவழியன் பண்ணையாடி ம. பழனிச்சாமி பிள்ளை எழுதியவைகளிலிருந்து சில வாசகங்களையும் தேர்ந்தெடுத்துத் தொகுத்துக் கொடுத்துள்ளோம். இப்படி, எமது முன்னோர்களின் வாசகங்களைத் தொகுத்து இந்தக் காயந்திரி மந்தர வெளியீட்டுக்கு முன்னுரை தயாரிப்பதையே எமது கடமையாகக் கருதுகிறோம்.

தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு என்ற முக்கோண நிலம்தான் இந்து மதத் தத்துவ விதைப்பண்ணை, நாற்றுப்பண்ணை. இப்பேருண்மையை உணர்ந்து தமிழர்கள் இந்துமத மறுமலர்ச்சிக்காகப் பாடுபட முன்வர வேண்டும் என்று வேண்டுகிறோம் யாம். இந்துமதம் பயிராகும் நிலமே இந்தியா என்பதை இந்தியர்கள் உணரலே இந்திய ஒற்றுமையை உருவாக்கும்.

எம் கடன் பணி செய்து கிடப்பதே!

ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்!

அன்பே சிவம்!

அன்பு
இந்துமதத் தந்தை
குருமகா சன்னிதானம்
ஞாலகுரு சித்தர் கருவூறார்

 

« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |