(தமிழிலிருந்து சமசுக்கிருதத்தில் உருவாக்கப்பட்டது ஸ்ரீகாயத்ரீ மஹா மந்த்ரம்)
இக்காயந்திரி மந்தரம் சொல்லுவதற்கு முன்னும் பின்னும் சொல்ல வேண்டிய வேண்டுகோள் வாசகங்கள்:
ஆரியர்கள் தாங்கள் உண்டாக்கிய க்ஷத்திரியர், ஆரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வர்ணாச்சிரமப் பிரிவில் (சாதிகள்) முதல் மூவரும் மட்டுமே மேட்டுக்குடியினர், உயர்ந்தவர். எனவே, இவர்கள் மட்டும்தான் காயத்ரீ மந்த்ரம் சொல்ல வேண்டும், சூத்திரர் சொல்லக் கூடாது என்றனர்.
குறிப்பு:
1. ஆரியர், சூத்திரர் என்றது இந்தியாவின் பூர்வீகக் குடிகளான தமிழர்களைத்தான். ஏனெனில், தமிழர்கள் எற்கனவே, காயந்திரி மந்தரம், மாந்தரம், மாந்தரீகம், மந்திரம், மந்திறம் என்று ஐந்துவகை அருள் வாசகங்களை ஆறு வேளைத் தொழுகைகளில் பயன்படுத்தினர். காயந்திரி மந்தரம் மட்டும் காலை மாலை இரு வேளைகளிலும் சொல்லப்படலாம். மற்ற நான்கும் நான்கு வேளைகளில் சொல்லப்படல் வேண்டும். மதியம், நள்ளிரவு, முழுஇரவு, முழுப்பகல்.
மேலும், தமிழர், தங்களின் காயந்திரி மந்தரம்தான் ஆரியரால் சமசுக்கிருதத்தில் காயத்ரீ மந்த்ரம் என்று உருவாக்கப்பட்டதைக் கண்டுபிடித்திடுவர் என்பதால்தான்; தமிழர்கள் இதை அறியாமல் சூழ்ச்சியாகக் காத்தனர் ஆரியர்.
2. சாதாரண மானுட வாழ்வில் கடவுளின் அருளைத் தேவையான அளவு பெற்று நிம்மதியும், நிறைவும், அமைதியும், அன்பும் உடைய வாழ்வு வாழ்ந்திடக் காயந்திரி மந்தரம்தான் பேருதவி புரியும். அன்றாடம் 108 முறை ஓதினால் போதும். எல்லா நலங்களும், விழிச்சிகளும், எழுச்சிகளும், செழுச்சிகளும் ஏற்பட்டிடும்.
3. ஆரியர்கள் தங்களின் காயத்ரீ மகாமந்த்ரத்தையே ப்றம்மோபதேசம் என்று பரப்புகிறார்கள். பூணூல் போட்டவர்கள் இதைக் கட்டாயம் பயிற்சி செய்ய வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்துவிட்டனர்.
குறிப்பு: குருபாரம்பரியத்தில் இறை, கடவுள், தெய்வம் எனப்படும் 48 பேர்களும் சிவன், திருமால், பிறமண் முதலிய திருக்களும், தன்வந்திரி, பரசுராமர், கலைக்கோட்டு முனி, பிருங்கி, கன்வர், விசும்பாத்திரர், வசிட்டர், பரத்துவாசர், கச்சியப்பர், காசிபர், ஆங்கிரசர், கௌதமர், அத்திரி, ...... முதலிய தருக்களும் (தரு = முனிவர்) ஆறுகாலத் தொழுகைகள் செய்ததால்தான் அருட்சத்தியோடு விளங்கினர். காயந்திரி மந்தரம் குருகுலம், தவச்சாலை, வேள்விச்சாலை, பத்திச்சாலை, அருட்கோட்டம், ஞானப்பள்ளி ...... மாணாக்கரால் ஆறுகாலம் அன்றாடம் ஓதப்பட்டது.
4. சூரியனை முழுமுதலாகக் கொண்டு அவனிருக்கும் திசை நோக்கித் தொழுவதுதான் காயந்திரி மந்தரம்.
குறிப்பு:
1.கருவறைகளில் கூறிடல்
2.வெட்டவெளித் தவத்தில் கூறிடல்
3.ஐந்தீ வேட்டலில் கூறல்
4.முத்தீ ஓம்பலில் கூறல்
5.மாயைகளை வென்றிடப் பூசையில் கூறல்
6.நீள்தவத்தில் + ஆழ் பூசையில் + குருவோடு கலப்பதில் ஆவி + ஆன்மா + உயிர் ஒன்றிடக் குகைக்குள் (அறைக்குள் = வீட்டுக்குள் மேலும் கீழும் நான்கு பக்கமும் மூடிய இடத்தில்) கூறல்
என்று ஆறு இடங்களில் கூறிடக் காயந்திரி மந்தரம், மாந்தரம், மாந்தரீகம், மந்திரம், மந்திறம் எனும் ஐந்து படைக்கப்பட்டன. இவற்றில் எதெதை எவ்வப்பொழுது பயன்படுத்தல் என்பதனைக் குருவழிக் காண்க. குருவால் இட்டும் தொட்டும் சுட்டியும் அருளப் பெற்றால்தான் அனைவருக்கும் பத்திநிலை, சத்திநிலை, சித்திநிலை, முத்திநிலை எனும் நான்கிலும் முழுமை கிடைக்கும்; நிறை வெற்றி முழுமையாகக் கிடைக்கும்.
5. காயந்திரி மந்தரம் சொல்லுபவர் குருவழி அருளுரை, அறிவுரை, அருளார்ந்த அறிவுரை, அறிவார்ந்த அருளுரை பெற்றால் 108 திருப்பதிகள், 243 சத்தி பீடங்கள், 1008 சிவாலயங்கள் எனப்படும் அனைத்தையுமே சித்தி செய்யலாம்.
6. கருக்கள், குருக்கள், தருக்கள், திருக்கள், தாத்தாக்கள், ஆத்தாக்கள் எனும் ஆறு பேர்கள் வழங்கியுள்ள அருளுரை, அறிவுரை, அருளார்ந்த அறிவுரை, அறிவார்ந்த அருளுரை... முதலியவற்றை நன்கு பயன்படுத்தி இறை + உயிர் + தளை எனும் (பதி + பசு + பாசம்) மூன்றையும் இணைத்தல்; முற்பிறப்பு + மறுபிறப்பு + இப்பிறப்பு எனும் மூன்றையும் இணைத்தல் நிறைவேறத்தான் காயந்திரி மந்தரம், மாந்தரம், மாந்தரீகம், மந்திரம், மந்திறம் எனும் ஐந்தும் நமசிவாய என்ற ஐந்தெழுத்தின் விளக்கமாகப் பதினெண் சித்தர்களால் படைக்கப்பட்டன.
இவை ஐந்துவகை; பூசைக்காலங்கள் ஆறு; ஆனால், காலை + மாலை ஒரே வேளையாகக் கருதப்படல் மரபு என்பதால் பூசை வேளை ஐந்துதான். ஐந்தெழுத்து = பஞ்சாட்சரம் = நமசிவாய = ஐந்துவகையான காயந்திரி மந்திரங்கள்* (* அருள்வாசகம்)
நமசிவாய என்ற ஐந்தெழுத்தின் விளக்கமே ஐந்து வகையான காயந்திரி மந்திரங்கள்.
7. தமிழர்கள் எல்லாரும் அன்றாடம் காயந்திரி மந்தரம் 108 தடவை சொல்லியேயாக வேண்டும். இதுதான் தமிழர்களை மொழிப் பற்றும், இன ஒற்றுமையும், நாட்டுரிமையும், பண்பாட்டுப் பிடிப்பும் உள்ளவர்களாக ஆக்கிடும். தமிழர்க்கு அகவொளியும், முகவொளியும் ஏற்பட்டால்தான் இகவொளி கிடைக்கும். அதன்பிறகே அமுதத் தமிழால் தன்னுரிமை மிகு அருளாட்சி அமைக்க முடியும்.
8. கருவைப் புரியக் காயந்திரி மந்திரங்கள் தேவை. அதன் பிறகே, குருவைப் புரிய முடியும். குருவே திரு; திருவே தரு; தருவே கரு; கருவே குரு;... என்பன தமிழர்களுக்கு முழுமையாக விளக்கமானால்தான் குருவழி வாழ்ந்து விடுதலை பெறுவர். தமிழினம் மெய்ஞ்ஞானக் குருவைத் தெரிந்து, விரும்பி, ஏற்றுச் செயல்பட்டால்தான் எல்லா ஞானங்களையும் பெற்று உரிமைமிகு பெருமை வாழ்வு பெற்றிடும். குருவழி நின்று ஒழுகக் கற்றால்தான் தமிழினம் களப்பிறர், பல்லவர், சோனகர், யவனர், ஆரியர் ... முதலியோரிடம் அடிமைப்பட்டு மிடிமையுற்று, இழிந்து, சிதைந்து, சீரழிந்து, தலைகுனிந்து, சிந்தை வெந்து, நெஞ்சம் நைந்து ... வாழும் வாழ்வை மாற்றிட ஒன்று திரள முடியும். சூரிய குலத்தின் தலைமையில் அருளாட்சியை அமைக்க முடியும். இந்து மதத்தால்தான் தனிமனித மாணிக்கங்களை மாலையாக்க முடியும். ஒவ்வொருவரும் இந்து மதத்தை உணரவும், பயன்படுத்திப் பயனடையவும் அன்றாடம் காயந்திரி மந்தரம் 108 முறை ஓத வேண்டும்.
சோழப்பேரரசு அருளாட்சி நடத்த உருவாவதற்கு இவ்வாசகங்களே பேருதவி புரிந்து தமிழர்களை ஒன்று திரட்டி ஒற்றுமைப்படுத்திப் பெரும் வீரம் காட்டிப் போரிடச் செய்தன.
9. பரம்பரையாகக் காயந்திரி மந்தரம் சொல்ல வேண்டும். அது ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் வீழ்ச்சியோடு மதுரை எரிந்ததோடு, மதுரைத் தமிழ்ச்சங்கங்கள் இடிக்கப்பட்டும், ஏடுகள் எரிக்கப்பட்டும், தமிழ்ப் புலவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டும் பேரழிவு தமிழினத்துக்கு ஏற்பட்டதோடு தடைப்பட்டு விட்டது. எனவேதான், பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் பெரிய அருட்கொடை வள்ளலாக வாழ்ந்து ஆர்வம் உள்ளவர்களையெல்லாம் இட்டும், தொட்டும், சுட்டியும் அருளாளர்களாக மாற்றினார். ஐந்து வகையான காயந்திரி மந்திரங்களையும் வழங்கினார். குருவழி வாரிசுகளையும், விந்து வழி வாரிசுகளையும் உருவாக்கினார். ஆரத்தழுவி ஆர்வலர்களையும், விருப்பாளர்களையும், ஆதரவாளர்களையும் படிப்படியாக அருளாளர்களாக்கினார். அதனால், அடியான்களும், அடியார்களும், அடியாள்களும் அருட்படை நடத்தும் நாயகர்களாக, தளபதிகளாகச் செயல்பட்டுச் சோழப்பேரரசை உருவாக்கி அருளாட்சியைத் துவக்கினர். பழியோ, இழிவோ, அழிவோ, தாழ்ச்சியோ, இகழ்ச்சியோ,... அருட்சேனை திரட்டும் பணியில் ஈடுபட்டால் அது பெரு நெருப்பில் ஈரவிறகும் எரிவது போல் போரிலும், போரின் வெற்றியாலும் மறைந்திடும். பீடாதிபதியால்தான் வாழையடி வாழையாக அருளாளர்கள் இந்த வையகத்துக்குக் கிடைக்கிறார்கள்.
ஐந்து வகை நிலத்தவரும் பயனடைய ஐந்து வகைக் காயந்திரி மந்திரங்கள் ஐந்து எழுத்தான நமசிவாயத்தின் விளக்கமாகப் பிறந்தன.