பதில்:- வேது - பக்குவப் படுத்துதல், பதப்படுத்துதல், செம்மைப் படுத்துதல், அடிபட்ட உடலுக்கு வலியைக் குறைத்து பழையபடி நலப்படுத்துதல், ஒத்தடம் தருதல் அல்லது வேது கொடுத்தல்.
கருவறைகளுக்கு வேதித்த பொருட்கள் -> சமைத்த உணவு = வேதித்தவை.
வேதித்தவைகளை வைப்பதற்கு முன்பும் பின்பும் சித்தம், நாதம், ஓதம், போதம் எனும் நான்கையும் ஓத வேண்டும் என்பதே பூசாவிதி.
வேதங்களைக் கற்றவன் வேதியன் (பண்பட்டவன், கற்றவன்) - கருவாலும், குருவாலும், தருவாலும், திருவாலும் உரிய வண்ணம் பக்குவப் படுத்தப் பட்டவனே வேதியன். வேதிக்கப் பட்டவன் சொல்லுவது வேதம்.
மறை: மறைக்கப் பட்டது
முறை: முறைப்படுத்தப்பட்டது
நெறி: செயல் வடிவிலுள்ள செயல் திட்டங்கள்
இதற்கடுத்து வருவதே வேதம்.