குரு பாரம்பரியத்தில், இந்து மதத்தைக் காப்பதற்காக பதினெட்டு ஊர்களில் பெரியவாள், அரியவாள், சீரியவாள், கூரியவாள் (நேரியவாள்) ........ என்று மடாதிபதிகள் உருவாக்கப்பட்டதாக செய்திகள் உள்ளன. இதேபோல் காமகோடி, ஏமகோடி, சோமகோடி, வாமகோடி ... என்று 18 ஊர்களிலும் பீடாதிபதிகள் உருவாக்கப் பட்டிருந்ததாகச் செய்திகள் இருக்கின்றன. காலப் போக்கில் இப்பீடாதிபதிகளில் பெரும்பாலானவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். இவர்களையெல்லாம் சித்தர் நெறியின் மூலம்தான் மீண்டும் உருவாக்கிச் சமயத்திற்குப் புத்துயிர்ப்பு ஊட்ட முடியும்.
குரு பாரம்பரியத்தில் பரமாச்சாரியார், பிறம்மாச்சாரியார், திருமாலாச்சாரியார், இந்திராச்சாரியார், எமனாச்சாரியார், இறையாச்சாரியார், கடவுளாச்சாரியார், தெய்வீகாச்சாரியார்,.... என்று எண்ணற்ற ஆச்சாரியார்கள் குறிக்கப் படுகின்றனர். இவர்களைப் பற்றிய முழு விளக்கங்கள் பூசாவிதிகள், குருமார் ஒழுகலாறு (குருமார் ஒழுக்கம் என்ற பாடவேறுபாடு உள்ளது) என்ற இரண்டு நூல்களில் நிறைய உள்ளன. அதாவது கோயிலில் பூசை செய்பவர்களுக்கே இந்தப் பட்டம் (ஆச்சாரியார்) வழங்கப் பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.