பதில்:- மெய்யான இந்துமதத்தின் கருத்துக்களையும் தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் செயல்நிலைகளையும் பிறமண்ணினரான பிறாமணர் எனப்படும் வட ஆரியர்கள் எண்ணற்ற சூழ்ச்சிகளைச் செய்துதான் சிதைத்து, சீரழித்து, பயனற்றதாக ஆக்கினார்கள். அதாவது பொய்யான ஹிந்து மதத்தை உண்டாக்கினார்கள். இக்கருத்தின் விளக்கமாகத்தான் அல்லது சான்றாகத்தான் தாழம்பூவைப் பூசையில் பயன்படுத்தாமல் தடுத்த செயல். எனவே, இதற்காகக் கூறப்படும் புராணம் தவறானது.
பதினெண் சித்தர்களின் பூசாவிதிகள், மரபுகள், படிகள், ஒழுகலாறுகள், ஓச்சுகள், வீச்சுகள், சாத்திரங்கள், சாத்திறங்கள், சாத்தரங்கள், நூல்கள்..... முதலிய அனைத்திலும் சித்திக்குரிய
என்று மிகத் தெளிவாகச் செய்திகள் உள்ளன. இவற்றில் சித்திக்குரிய தாழம்பூவினைப் பூசையில் பயன்படுத்த விடாமல் தடுத்துக் கெடுத்ததன் மூலமே பிறாமணர்கள் மெய்யான இந்துமதத்திற்கு மிகப் பெரிய நலிவையும், மெலிவையும், அழிவையும், செயற்குறைவையும் உருவாக்கி விட்டார்கள்! உருவாக்கி விட்டார்கள்!! உருவாக்கி விட்டார்கள்!!! எனவே, அருளை அனுபவப் பொருளாக விரைந்து அடைவதற்கும் மெய்யான இந்து மதத்தின் மறுமலர்ச்சிக்கும் அடிப்படையாக அனைவரும் தாழம்பூவைப் பூசையில் பயன்படுத்த வேண்டும்.