இன்றைக்கு விஞ்ஞானிகள் சாதித்துள்ள பல சாதனைகள் நம்ப முடியாதவை போலவே இருக்கின்றன. ஆனால், அநுபவத்தால் நம்புகிறோம். அதுபோல், புராண நிகழ்ச்சிகளைக் குருவருள், திருவருள், தருவின் துணை, கருவின் ஓகம் ... முதலியவற்றை அநுபவித்தால்தான் புரிய முடியும், நம்ப முடியும். பிறகு புராணம் தேவைதானா என்ற ஐயமே எழாது.
குறிப்பு:
கற்பனைவாதிகள், மாயாவாதிகள், பாரம்பரியக் குருவைச் சேராதவர்கள், முறையான பயிற்சி இல்லாதவர்கள், வயிறு பிழைக்க புராணம் கூறுபவர், போலி மதத் தலைவர்கள் ... இவர்களால் புராணம் முறையாகவும், முழுமையாகவும் விளக்கப்படாததால்தான் இது போன்ற வினா பிறந்தது!?!?!?