பிரம்மச்சரியம் என்பது வேறு, துறவு என்பது வேறு. குழப்பமின்றி உணர வேண்டும். பெண்ணின்பமே கூடாது என்பதுதான் பிரம்மச்சரியம். இது ஆரிய வேத நாகரிகக் கருத்து. இது தவறு, மாயம், பொய், பயனற்றது. ஆன்மீக வாழ்வில் வெற்றியைத் தராது.
குறிப்பு: "பெண்ணின்பமே பேரின்பம்!", "பெண்வழிச் சேரலே கரு, குரு, தரு, திரு எனும் நான்கையும் அடையும் வழி", "காயந்திரி மந்தரம் ஓதும் பெண்ணைக் காணல், அடிதொழல், தழுவல், இரண்டறக் கலத்தல் எனும் நான்கே நான்மறை, நான்முறை, நானெறி, நான்வேதம், நவநாதம், நவபோதம், நவஓதம், நவசித்தம், பதினெண் நாதாந்தம், பதினெண் வேதாந்தம், பதினெண் ஆகமம், பதினெண் புராணம்.... முதலியவற்றில் அருள்நெறியாக விளக்கப் படுகின்றன"
ஆனால், 'அருட்கலைகளைப் பயிற்சி செய்யும் காலம், தேர்ச்சி பெற்று அருட்கலைகளால் சித்திக்கும் முத்திக்கும் முயற்சிக்கும் காலம் தனித்திருத்தலால் மிகுந்த பயனைத்தரும்' என்ற குருபாரம்பரிய வாசகம் பிரம்மச்சரியத்தை ஆதரிப்பது போல் உள்ளது. குறிப்பிட்ட காலமே.