அருளை அநுபவப் பொருளாக வழங்கும் அருள் அணு ஊற்றுக்களே கோயில்கள். அருளைச் சினையாக்கிக் கொள்ள அருட்சினை நடைபெறும் இடமே கோயில். அருளாட்சி அரியணையை நிலைநிறுத்தும் ஆட்சிக் கோட்டங்களே, அருட் கல்விதரும் கல்விச் சாலைகளே நமது கோயில்கள். மருத்துவ மனைகளாக, மனமகிழ் மன்றங்களாகவும் பயன்படுபவையே நமது கோயில்கள். இதற்கு மேல் இவ்வினாவுக்குப் பதில் தேவையில்லை! புரிந்து கொள்ளுக.