'இந்து' என்ற சொல்லுக்குப் பின்னால் தோன்றியவர்களே பாரசீகர்களும், ஆரியர்களும், ...... பிறரும்.
அதாவது, இம்மண்ணுலகில் பயிரினங்களும் உயிரினங்களும் தோன்றிய காலத்திற்குப் பிறகு மனித இனம் தோன்றி விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த காலத்தில் மண்ணின் ஈசர்களான மணிதர்களால் (மனிதர்களால்) அருளுலக நலங்களைத் துய்ப்பதற்காக அனாதி காலக் கருவூறார் இந்து மதத்தை மணீசர்களுக்கு வழங்கினார். அப்பொழுது அவர் இந்து என்ற சொல்லுக்கு 48 பொருள்கள் கூறியதாக குருபாரம்பரியத்தில் தெளிவாகக் குறிக்கப் படுகின்றது. இந்து = விந்து, உயிரணு, உயிரின் ஆரம்பமும் முடிவும், .....