பதில்:- சாதாரண வழிபாட்டைச் செய்பவர்கள் நீராடித் தலையைத் துவட்டி உலர்த்தி உலர்ந்த ஆடைகள் உடுத்தி, மணிகள், உருத்திராட்சம் முதலியவை அணிந்து; நெற்றிக்கு நீர் விட்டுக் குழைத்த திருநீறு பூசி சமைத்த உணவுப் பொருட்களை படையலிட்டு வழிபாடு செய்வது மரபு.
அருட்சித்தி பெறும் வழிபாட்டில் தலையோடு நீரில் மூழ்கி எழுந்து தலையைத் துவட்டாமல் ஈர உடையுடன் நின்று தண்ணீரையே படையலாகக் கொண்டு பூசை செய்வது. உலர்ந்த ஆடைகளை அணிந்திருப்பவர்கள் ஒரு செம்புத் தண்ணீரையாவது தலையில் ஊற்றி தலையையும், ஆடையையும் நனைத்துக் கொண்டுதான் பூசை செய்ய வேண்டும். குருதிப்பலி, நெருப்பிலிட்டுச் சமைக்காத பசுமையான காய்கறி, கிழங்கு, கனி, மலர், இலைகள்.... முதலியவைகளைப் படையலாகப் பயன்படுத்துதல் மரபு. நெருப்பு வளர்த்து வழிபட வேண்டும். அல்லது சுடலையின் ஈமத்தீயில் (ஏமத்தீ) அவிர்பலிகளைப் போட்டு வழிபட வேண்டும்.