தமிழரின் அறிவியல் சாதனைகள் வரலாற்றுக்கும் முந்திய காலத்திலேயே முழுமை பெற்றிட்டன. அதனால்தான், தமிழர்கள், 'மனிதன் மண்ணிலோ, விண்ணிலோ ஆட்சி செய்வதால் பயனில்லை! மனிதன் தன்னைத்தானே (உடல், உள்ளம், உணர்வு, அறிவு, உயிர் ஆகிய ஐந்தினையும்) ஆட்சி புரிவதில்தான் பயனுண்டு' என்று முடிவு கட்டினர். இம்முடிவிற் கேற்ப உண்டாக்கப் பட்டவைகளே தெய்வீகக் கலைகள், கடவுட் கலைகள், சமய வாழ்வு, சித்தர் தத்துவங்கள் ..... முதலியவைகள் .
மனிதன் நிலவை மட்டுமல்லாமல், மற்ற எல்லாக் கோள்களையும், மீன்களையும் ஆட்சி செய்யும் நிலையையும் பெற்றாலும், அவன், தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வரை, உலகில் நிலையான அமைதியோ, நிறைவோ, ஒற்றுமையோ, மகிழ்ச்சியோ ஏற்படாது. அதனால், மனிதன் கற்பனை செய்யும் பேரின்ப நிலை உருவாகவே இயலாது.
யாம் எழுதியுள்ள நூற்றுக் கணக்கான நூல்களையும், ஆயிரக் கணக்கான கட்டுரைகளையும், நூறாயிரக் கணக்கான அஞ்சல்களையும் விட எண்ணிடற்கரிய சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும், சித்தர் நெறி ஆய்வாளர்களும், ஆதரவாளர்களும் உருவாகி விட்டார்கள்.
எனவே, இனிமேல் நானே நினைத்தாலும் கூட சமுதாய மாற்றத்தை உண்டாக்கிட போர்க் கோலம் பூணப் போகிறவர்களைத் தடுக்கவே முடியாது. மீண்டும் அருட்சேனைகள் திரண்டு பாரதப் போரை நிகழ்த்தியே தீரும். அதன் வெற்றியால் சித்தர்கள் குறிக்கும் ‘சமத்துவத் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்’ அமைக்கப்பட்டே தீரும்.
ஓர் இலக்கண நூல் [A Grammar Book]. இலக்கியங்கள் பல தோன்றிய பிறகுதான் அவற்றை ஒழுங்கு படுத்திட இலக்கண நூல்கள் தோன்றும். அப்படிப் பார்த்தால் இந்தத் தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன் சில ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளியில் பல ஆயிரம் இலக்கியங்கள் பிறந்திருக்க வேண்டும்.
மேலும், தொல்காப்பியத்துக்கு முன்னரே நூற்றுக் கணக்கான இலக்கண நூல்கள் இருந்திட்டன என்பதற்குரிய அகச்சான்றுகள் தொல்காப்பியத்திலேயே இருக்கின்றன.
அதை நோக்கும் போது தொல்காப்பியத்துக்கு முன் சில நூறாயிரம் ஆண்டுகள் [இலட்சம்] தமிழ்மொழி வளத்தோடு வாழ்ந்திருக்க வேண்டும் என்ற பேருண்மை தெளிவாகிறது.
அனாதிக் கருவூறார் என்றும் ஆதிக் கருவூறார் என்றும்
தொன்மதுரைக் கருவூறார் என்றும் தென்மதுரைக் கருவூறார் என்றும்
ப·றுளியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
குமரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கபாடபுரத்துக் கருவூறார் என்றும்
தாமிரபரணி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
வைகையாற்றங்கரைக் கருவூறார் என்றும்
அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
காவிரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கணக்கிடு பதினோரு பீடாதிபதிகள் தோன்றினர்.