பதினெண் சித்தர்கள் இம்மண்ணுலகின் ஆயுளை 48 பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தோன்றி நிறைவு பெறுவதுடன் இணைத்துள்ளார்கள். முதலில் இராசிவட்டக் கருவூறார்கள் என்ற 12 பேர்களும், பிறகு முறையே விண்மீன் வட்டத்திற்கு 27 பேர்களும், கோள் வட்டத்திற்கு 9 பேர்களும் தோன்றுவார்கள் என்று குறித்துள்ளார்கள். இன்றைய சரித்திரத்திற்கு தெரிந்த காலகட்டத்தில் தோன்றியவர்களில் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் அவர்களும், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களும் இந்த உகத்தில் குறிப்பிடத் தக்க செயல்களைச் செய்தவர்கள்.
அமராவதியாற்றங்கரைக் கருவூறார் சமுதாயப் புரட்சியின் மூலம் அனைத்தையும் சாதித்து விட முடியும் என நம்பினார். இவரது காலத்தில் குமரிக் கண்டத்திலிருந்த பனி மூடிய தென் இமய மலையையும், தென் வேங்கட மலையையும் அடிப்படையாகக் கொண்ட சமய, சமுதாய, அரசியல், கலை, இலக்கிய வரலாறுகள் முறையாகவும், முழுமையாகவும் எழுதப் பட்டன. உலகம் முழுவதும் வாணிகத் தொடர்பு வைத்திருந்த தமிழினத்தின் பல்வேறு வகையான சமுதாய வீழ்ச்சிகளையும், தாழ்ச்சிகளையும் சரிக் கட்டுவதற்காக சமுதாய மாற்றப் பணிகள் நிறைவேற்றப் பட்டது.
ஆனால், அது மூன்றாவது தமிழ்ச் சங்கத்தின் முடிவையே தந்தது. தமிழின விரோதிகளும், துரோகிகளும் தாக்கியதால் தமிழ்மொழி இன நாட்டு உணர்வுக் கோட்டையாக விளங்கிய மதுரை மாநகரம் எரிக்கப் பட்டது. தமிழ்ப் புலவர்கள் வெட்டிக் கொலை செய்யப் பட்டனர். தமிழ் ஏட்டுக் குவியல்கள் அழித்தொழிக்கப் பட்டன. இம்மாபெரும் அழிவுக்குப் பிறகு தமிழினத்தின் நல்வாழ்வுக்காகத் தமிழ் இலக்கியங்கள் 'சங்க கால இலக்கியங்கள்' என்ற பெயரில் தேடித் தொகுக்கப் பட்டன.
இம்மாபெரும் பணியை நிகழ்த்திட்ட அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் எண்ணற்ற நூல்களை எழுதினார். தக்காரைக் கொண்டு எண்ணற்ற நூல்களையும் எழுதுவித்தார். அவைதான் தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழினம் எனும் முக்கோணக் கோட்டையைப் பழுது பார்த்துச் செப்பனிட்டு நினைவுச் சின்னமாகப் பாதுகாத்துக் கொடுத்தன. இந்த நினைவுச் சின்னத்தில் உண்மையான தமிழின அரசு ஒன்று தோன்றி ஆட்சி செய்யச் செய்தவரே காவிரியாற்றங் கரைக் கருவூறார்.
யாம் எழுதியுள்ள நூற்றுக் கணக்கான நூல்களையும், ஆயிரக் கணக்கான கட்டுரைகளையும், நூறாயிரக் கணக்கான அஞ்சல்களையும் விட எண்ணிடற்கரிய சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும், சித்தர் நெறி ஆய்வாளர்களும், ஆதரவாளர்களும் உருவாகி விட்டார்கள்.
எனவே, இனிமேல் நானே நினைத்தாலும் கூட சமுதாய மாற்றத்தை உண்டாக்கிட போர்க் கோலம் பூணப் போகிறவர்களைத் தடுக்கவே முடியாது. மீண்டும் அருட்சேனைகள் திரண்டு பாரதப் போரை நிகழ்த்தியே தீரும். அதன் வெற்றியால் சித்தர்கள் குறிக்கும் ‘சமத்துவத் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்’ அமைக்கப்பட்டே தீரும்.
ஓர் இலக்கண நூல் [A Grammar Book]. இலக்கியங்கள் பல தோன்றிய பிறகுதான் அவற்றை ஒழுங்கு படுத்திட இலக்கண நூல்கள் தோன்றும். அப்படிப் பார்த்தால் இந்தத் தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன் சில ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளியில் பல ஆயிரம் இலக்கியங்கள் பிறந்திருக்க வேண்டும்.
மேலும், தொல்காப்பியத்துக்கு முன்னரே நூற்றுக் கணக்கான இலக்கண நூல்கள் இருந்திட்டன என்பதற்குரிய அகச்சான்றுகள் தொல்காப்பியத்திலேயே இருக்கின்றன.
அதை நோக்கும் போது தொல்காப்பியத்துக்கு முன் சில நூறாயிரம் ஆண்டுகள் [இலட்சம்] தமிழ்மொழி வளத்தோடு வாழ்ந்திருக்க வேண்டும் என்ற பேருண்மை தெளிவாகிறது.
அனாதிக் கருவூறார் என்றும் ஆதிக் கருவூறார் என்றும்
தொன்மதுரைக் கருவூறார் என்றும் தென்மதுரைக் கருவூறார் என்றும்
ப·றுளியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
குமரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கபாடபுரத்துக் கருவூறார் என்றும்
தாமிரபரணி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
வைகையாற்றங்கரைக் கருவூறார் என்றும்
அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
காவிரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கணக்கிடு பதினோரு பீடாதிபதிகள் தோன்றினர்.