வரலாற்று ஆசிரியர்களால் கி.மு. 3000க்கும் முந்தியது என்று கருதப்படும் காலப் பழமையுடையது ‘தொல்காப்பியம்’. இதுதான் இப்போதைக்குத் தமிழர்கள் அறிந்துள்ள உலகம் உணர்ந்த மிகத் தொன்மையான நூல். அதுவும் இந்த நூல், ஓர் இலக்கண நூல் [A Grammar Book]. இலக்கியங்கள் பல தோன்றிய பிறகுதான் அவற்றை ஒழுங்கு படுத்திட இலக்கண நூல்கள் தோன்றும். அப்படிப் பார்த்தால் இந்தத் தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன் சில ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளியில் பல ஆயிரம் இலக்கியங்கள் பிறந்திருக்க வேண்டும். மேலும், தொல்காப்பியத்துக்கு முன்னரே நூற்றுக் கணக்கான இலக்கண நூல்கள் இருந்திட்டன என்பதற்குரிய அகச்சான்றுகள் தொல்காப்பியத்திலேயே இருக்கின்றன. அதை நோக்கும் போது தொல்காப்பியத்துக்கு முன் சில நூறாயிரம் ஆண்டுகள் [இலட்சம்] தமிழ்மொழி வளத்தோடு வாழ்ந்திருக்க வேண்டும் என்ற பேருண்மை தெளிவாகிறது.
இப்படிப் பார்க்கும் போது, தமிழ் ஆரம்பத்திலேயே உரைநடையும், கவிதையும் செல்வாக்குப் பெற்றிருந்தன என்ற பேருண்மை தெளிவாகும். அதனால், தமிழில் உரைநடை அண்மைக் காலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்று கருதுவது தவறாகும். இக் கருத்துக்குத் தொல்காப்பியத்திலும் சான்று உள்ளது. தொல்காப்பியத்தில் “அடிவரையறை யின்றி வரும் செய்யுள்” என்ற குறிப்பு உரைநடையைத்தான் குறிக்கிறது. இதில் ஐயமே இல்லை. எனவே, பத்தாவது, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் உரைநடையில் எழுதியிருப்பது முற்கால மரபை ஒட்டியேயாகும் என்பது தெளிவாகிறது.
தமிழ்மொழியில் உரைநடை அழகும், சுவையும், இனிமையும் மிக்க செய்யுள் நடையாகவே இருப்பது பெருமைக்குரியதாகும். அதுவும், ‘இறையனார்’ என்ற தமிழ்ப் புலவர் எழுதிய ‘களவியல்’ என்ற இலக்கண நூலுக்கு நக்கீரர் என்ற புலவர் கூறிய விளக்கவுரை [notes or commentary or explanatory notes of the Grammer book namely ‘The KALAVIYAL’] ஏட்டில் எழுதப் படாமல் [unwritten] ‘எழுதாக் கிளவி’யாக ஒன்பது தலைமுறைகள் வாய்வழிச் செய்தியாகவே கூறப்பட்டு மனப்பாடம் செய்யப்பட்டு வந்தது. அதாவது, சுமார் [60 x 9 = 540 ஆண்டுகள்; ஒரு தலைமுறை என்பது அறுபது ஆண்டுகளையே குறிக்கும். பிற்காலத்தில் வழக்கில் ஒரு தலைமுறை என்பது நூறு ஆண்டுகள் என்று கருதப்படும் மரபு தோன்றி விட்டது. எப்படியாயினும் ஒன்பது தலைமுறைகள் என்பது 600 முதல் 900 ஆண்டுக் காலப் பெரிய இடைவெளியையே குறிக்கிறது] ஆறு நூற்றாண்டுக் காலம் எழுதப்படாமல் இருந்து பிறகே ‘நீலகண்டனார்’ என்பவரால் ஏட்டில் எழுதப்பட்டது. இந்தப் பெரிய இடைவெளியில் எவ்வளவோ மறக்கப்பட்டும் மாற்றப் பட்டும் இருக்கலாம். அப்படி யிருந்தும் தமிழ் மொழியில் உள்ள மிகச் சிறந்த உரைநடையாக விளங்குகிறது, நக்கீரரின் உரைநடை.
இவர் பல கவிதைகள் பாடிய மாபெரும் புலவர். எனவே, அக்காலத்துப் புலவர்கள் கவிதைகளிலும் உரைநடைகளிலும் பல நூல்கள் எழுதினர் என்பது தெளிவாகின்றது. இவர் சங்க காலத்தவர். இவரைப் போல் சங்க கால இலக்கண நூல்களுக்கு எழுதப் பட்ட உரைநடை நூல்கள் எதுவும் கிடைக்காமல் அழிந்து போய்விட்டன.
இந்தக் காலத்திலே ‘தமிழ் வாழ்க’, ‘தமிழ் வளர்க’, ‘தமிழே எங்கள் உயிர்’, ‘தமிழ் ஆட்சி பெறல் வேண்டும்’, ‘உலகத் தமிழ்மொழிக் காப்பு அமைப்புகள் பெருக வேண்டும்’ ... என்றெல்லாம் வெறிக் கூச்சல் கிளப்பும் நேரத்திலேயே பழம்பெரும் நூல்களைப் பாதுகாக்க, அச்சிட்டுப் பரப்ப, நகலெடுத்துக் காத்திட ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் பெரிய பெரிய தமிழ் மொழிச் செல்வங்கள், தமிழினப் பெருமை கூறும் வரலாறுகள், சமய தத்துவங்கள், அரசியல் கொள்கைகள், கலைகள், அறிவியல்கள்... அழிகின்றன என்கின்ற போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலக்கண நூல்களும், உரை நூல்களும் அழிய நேரிட்டது வியப்பில்லை.
சிலப்பதிகாரத்துக்கு ‘அடியார்க்கு நல்லார்’ என்பவர் எழுதிய உரை [Commentary to the Great Epic, The CILAPPATHIKAARAM written by the great scholar Adiyaarkku Nallaar] தமிழர்களின் பொறுப்புணர்ச்சி யின்மையால் பெருமளவு அழிந்து விட்டது.
தொல்காப்பியத்துக்குச் சங்க காலத்தில் எழுதப்பட்ட உரைநூல்களும்; பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் அமராவதி ஆற்றங்கரை கருவூறார் அவர்களின் முயற்சியால் [கி.மு.100 முதல் கி.பி. 900 வரை] பல உரைநடை நூல்கள் எழுந்தன. ஆனால், அவை பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் தோற்றுவித்த பன்னாட்டுப் பன்னோக்குப் பல்கலைக் கழகத்திற்குக் கிடைத்ததா' இல்லையா' என்பது தெரியவில்லை. ஆனால், இவர் தமிழ்மொழியையும், தமிழினத்தையும், தமிழ்நாட்டையும் காக்கத் தெய்வீகப் பேரரசாகப் பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கினார். [His Holiness the Siddhar Kaaviri Aatrangkarai Karuvuraar created the Later Chola Empire 785 A.D. - 1279 A.D. as the DIVINE EMPIRE or The Holy Empire to protect and to take care of the Sacred Tamils, Tamilians and Tamilnadu.] ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் இப்பேரரசு தமிழ் காக்கவும் வளர்க்கவும் பாடுபடவில்லை.*
எனவேதான், அவர் தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், பாதுகாப்புக்காகவும், செழிப்புக்காகவும் பழம்பெரும் நூல்களை நகலெடுக்கவும், தொகுத்து வைக்கவும், உரையெழுதி விளக்கம் பெறச் செய்யவும், புதிய நூல்கள் பிறந்திடவும், அனைத்துக் கலைகளையும், அறிவியல்களையும் தமிழ்மொழியில் வளர்க்கவும் திட்டமிட்டுத் தஞ்சைப் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார். அதன் பயனாகத்தான் ‘நச்சினார்க்கினியர்’ என்பவர் ‘தொல்காப்பியத்துக்கு உரை’ எழுதியதுடன் ‘பத்துப்பாட்டு’, ‘கலித்தொகை’, ‘சிந்தாமணி’ முதலிய நூல்களுக்கும் உரையெழுதினார். இவர், வேறு என்னென்ன நூல்களுக்கு உரையெழுதினார் என்பது தெரியவில்லை. இவரைப் போலவே ‘தொல்காப்பியத்துக்கு உரை’ எழுதிய ‘பேராசிரியர்’ என்பவர் ‘குறுந்தொகை’ ‘திருக்கோவையார்’ முதலியவைகளுக்கு உரையெழுதி யிருக்கிறார். இவர் எழுதிய வேறு உரை நூல்கள் பற்றித் தெரியவில்லை. இவர்களன்றி ‘இளம்பூரணர்’, ‘சேனாவரையர்’ என்ற இருவரும் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பெரும்புலவர்கள் என அறிய முடிகின்றது. மற்ற எவர் பற்றியும் தெரியாமல் போனமைக்குத் தமிழரின் மொழியைப் பேணத் தெரியாத அப்பாவித் தனம்தான் காரணம். தொல்காப்பிய உரையாசிரியர்களாகக் கல்லாடர், தெய்வச்சிலையர் என்போரும் குறிக்கப்படும் சிறப்புடையவர்களே.
தொல்காப்பியத்துக்கு அடுத்துத் தோன்றிய மிகப்பெரிய இலக்கண நூலான ‘நன்னூலுக்கு’ மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர், ஆறுமுக நாவலர், சிவஞான முனிவர் போன்றோர் எழுதிய உரைகள் தமிழ் ‘உரைநடை’ வளமாக இருந்து வந்த பேருண்மையை விளக்குகின்றன.
தமிழர் வேதம் எனப்படும் ‘திருக்குறளுக்கு’ அன்று தொட்டு இன்று வரை கணக்கற்றோர் உரை எழுதியுள்ளனர். அவையெல்லாம் ‘தமிழ்மொழியில் உரைநடை பிற்காலத்தில் மேனாட்டார் தொடர்பால்தான் தோன்றியது’ என்பது தவறான, கேலிக்குரிய, அறியாமை மிக்க, அற்பக் கருத்தை மறுத்திடப் பேருதவி புரிகின்றன.
தமிழில் வடமொழியாளர்களும் தமிழரின் சமயத் தத்துவங்களைப் புரிந்து கொள்ளும்படி ‘மணிப்பிரவாள நடை’ என்றோர் புதிய ‘தமிழும் சமசுக்கிருதமும் கலந்த உரைநடை'யைத் தோற்றுவித்து வளர்த்த பெருமை ‘திருவாய் மொழி’ எனும் நூலுக்கு ‘திருக்குகைப் பிள்ளான்’ எழுதிய 'ஆறாயிரப்படி' எனும் உரைக்கும், நம்சீயர் எழுதிய ‘ஒன்பதினாயிரப்படி’ எனும் உரைக்கும், ‘அழகிய மணவாள சீயர்’ எழுதிய ‘பன்னீராயிரப்படி’ எனும் உரைக்கும், ‘பெரியவாச்சான் பிள்ளை’ எழுதிய 'இருபத்து நாலாயிரப்படி’ எனும் உரைக்கும், வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதிய ‘முப்பதினாயிரப்படி’ எனும் உரைக்கும், சிவஞானபோதம் எனும் நூலுக்குச் சிவஞானமுனிவர் எழுதிய ‘மாபாடியம்’ என்ற உரைக்கும் உண்டு.
அதாவது, தமிழில் உரைநடை எழுதியவர்கள் பிறருக்குத் தங்களின் கருத்தை விளக்கும் பெருமுயற்சியில் ‘பலவகை நடை’யைக் [different dictions or styles] கையாண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. இதனால், தமிழ் மொழியில் உரைநடை தொன்று தொட்டு வருகிறது என்பதும், காலங்கள் தோறும் உரைநடை நூல்கள் தோன்றியிருக்கின்றன என்பதும் விளங்குகிறது, விளக்கப்படுகிறது.
எனவே, தமிழர்கள் தாழ்வு நீங்கி உரிமை மிக்க பெருமித வாழ்வு வாழ வேண்டுமென்றால் தமிழ் இலக்கியங்கள் காக்கப் படுவதும், வளர்க்கப் படுவதும், வளமூட்டப் படுவதும், சிறப்பிக்கப் படுவதும் மிகமிக இன்றியமையாததாகும். இதனைத்தான், பதினெண் சித்தர் பீடாதிபதிகள்
.... என்று “கருவாசகம்” எனும் நூலாக உருவாக்கினர். ‘கருவாக்கு’, ‘கருவாசகம்’, ‘குருவாக்கு’, ‘குருவாசகம்’, ‘அருள்வாக்கு’, ‘அருள்வாசகம்’, ‘மருள் வாக்கு’, ‘மருள்வாசகம்’ எனும் பத்து வகைப்பட்ட நூல்களிலும் தமிழரை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து தட்டியெழுப்பிடும் கருத்துக்களே விளக்கப் பட்டிருக்கின்றன. இந்த நூல்கள் எல்லாத் தமிழர்களுக்கும் கிடைத்தால் தமிழினத்தின் மிடிமை வாழ்வும், அடிமை வாழ்வும் முடிவுக்கு வரும். தமிழரின் இருண்ட வாழ்வுக்கு விடிவு ஏற்படும்.... ஆனால்!!! ... அந்தோ!!!..... பரிதாபம்..... இந்த நூல்கள் எந்நிலையில் இருக்கின்றனவோ!'!'!' ..
யாம் எழுதியுள்ள நூற்றுக் கணக்கான நூல்களையும், ஆயிரக் கணக்கான கட்டுரைகளையும், நூறாயிரக் கணக்கான அஞ்சல்களையும் விட எண்ணிடற்கரிய சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும், சித்தர் நெறி ஆய்வாளர்களும், ஆதரவாளர்களும் உருவாகி விட்டார்கள்.
எனவே, இனிமேல் நானே நினைத்தாலும் கூட சமுதாய மாற்றத்தை உண்டாக்கிட போர்க் கோலம் பூணப் போகிறவர்களைத் தடுக்கவே முடியாது. மீண்டும் அருட்சேனைகள் திரண்டு பாரதப் போரை நிகழ்த்தியே தீரும். அதன் வெற்றியால் சித்தர்கள் குறிக்கும் ‘சமத்துவத் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்’ அமைக்கப்பட்டே தீரும்.
ஓர் இலக்கண நூல் [A Grammar Book]. இலக்கியங்கள் பல தோன்றிய பிறகுதான் அவற்றை ஒழுங்கு படுத்திட இலக்கண நூல்கள் தோன்றும். அப்படிப் பார்த்தால் இந்தத் தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன் சில ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளியில் பல ஆயிரம் இலக்கியங்கள் பிறந்திருக்க வேண்டும்.
மேலும், தொல்காப்பியத்துக்கு முன்னரே நூற்றுக் கணக்கான இலக்கண நூல்கள் இருந்திட்டன என்பதற்குரிய அகச்சான்றுகள் தொல்காப்பியத்திலேயே இருக்கின்றன.
அதை நோக்கும் போது தொல்காப்பியத்துக்கு முன் சில நூறாயிரம் ஆண்டுகள் [இலட்சம்] தமிழ்மொழி வளத்தோடு வாழ்ந்திருக்க வேண்டும் என்ற பேருண்மை தெளிவாகிறது.
அனாதிக் கருவூறார் என்றும் ஆதிக் கருவூறார் என்றும்
தொன்மதுரைக் கருவூறார் என்றும் தென்மதுரைக் கருவூறார் என்றும்
ப·றுளியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
குமரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கபாடபுரத்துக் கருவூறார் என்றும்
தாமிரபரணி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
வைகையாற்றங்கரைக் கருவூறார் என்றும்
அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
காவிரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கணக்கிடு பதினோரு பீடாதிபதிகள் தோன்றினர்.