தமிழ் உரைநடை வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றது. பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தமிழ் உரைநடையை வளர்த்ததன் மூலமே சமய, சமுதாய, அரசியல், கலை, இலக்கியத் துறைகள் அனைத்துக்கும் நிலையான வடிவும், வாழ்வும், வளமும், வலிவும், பொலிவும் ஊட்டினார்கள். அவர்கள் வழியிலே எல்லா வகையான சித்தர்களும் தமிழ் மொழிக்குத் தொண்டாற்றி யுள்ளனர். சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் ஆக வாழ்ந்த சித்தர் ஏளனம்பட்டியார் இலக்கியப் பணியாற்றினார். இவரது சம காலத்தவராகத் தமிழ்ப் பணியாற்றியவர்கள் வடலூர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருட்கொடை வள்ளல் இராமலிங்க அடிகளார் அவர்கள், யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர், திரு சி.வை. தாமோதரம் பிள்ளை, திரு உ.வே. சாமிநாத ஐயரவர்கள், மறைமலையடிகள், திரு வி. க. முதலியாரவர்கள்.
இவர்களேயன்றி இலைமறை காயாக இருந்து தமிழ் காத்தும் வளர்த்தும் செயல்பட்டவர்கள் முடிகண்ட சோழபுரத்து காகபுசுண்டர் பாரம்பரியத்தினரும், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் பரம்பரையினருமாவார்கள். குறிப்பாக எம் தந்தை ஆங்கிலமும் தமிழும் கைவந்தவர் என்பதால் இருமொழிப் புலமையில் மிகச் சிறந்த தமிழ் காப்புப் பணி, வளர்ப்புப் பணி, செழிப்புப் பணி.... முதலியவைகளைச் செய்திட்டார். அவரைத் தொடர்ந்து செயலாற்றிடவே எம்மைப் பகுத்தறிவுப் போக்கும், பொதுவுடமைத் தத்துவப் பிடிப்பும் மாறாது செயல்படும் தமிழ்த் தொண்டனாக உருவாக்கினார்.
யாம் கற்றவை, நோற்றவை, உற்றவை, பெற்றவை, ... முதலியவை அனைத்தும் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் நாடு எனும் மூன்றையும் வரலாற்றுப் பின்னணியோடு வடிவப் படுத்தி வலிமைப் படுத்தி வளப்படுத்தி வளர்த்துக் காக்கவே பயன்படுத்தப் படுகின்றன. யாம் ஒரு மாபெரும் உண்மையான உலக வரலாறாக வாழ்ந்து வளர்ந்து செயல்பட்டு வருகிறோம். எமது ஒவ்வொரு சொல்லும், எழுத்தும் ஓர் அடியானை உருவாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றது. அதனால், யாம் எழுதியுள்ள நூற்றுக் கணக்கான நூல்களையும், ஆயிரக் கணக்கான கட்டுரைகளையும், நூறாயிரக் கணக்கான அஞ்சல்களையும் விட எண்ணிடற்கரிய சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும், சித்தர் நெறி ஆய்வாளர்களும், ஆதரவாளர்களும் உருவாகி விட்டார்கள்.
எனவே, இனிமேல் நானே நினைத்தாலும் கூட சமுதாய மாற்றத்தை உண்டாக்கிட போர்க் கோலம் பூணப் போகிறவர்களைத் தடுக்கவே முடியாது. மீண்டும் அருட்சேனைகள் திரண்டு பாரதப் போரை நிகழ்த்தியே தீரும். அதன் வெற்றியால் சித்தர்கள் குறிக்கும் ‘சமத்துவத் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்’ அமைக்கப்பட்டே தீரும். யாம் பசித்திருந்தும், தனித்திருந்தும், விழித்திருந்தும், சிந்தித்திருந்தும், பொறுத்திருந்தும் தெரிந்து கொண்டவை ஏராளம்! ஏராளம்!! ஏராளம்!!! ஆனால், அவை எம்மால் அறிய, ஆராய, புரிய, உணர, தெளிய, ஒப்புக் கொள்ளப் படக் காலதாமதம் ஆகிவிட்டது.
எனவேதான், யாம், எம்மால் உருவாக்கப் பட்டவர்களை அதிகம் கட்டுப் படுத்தாமல்; அவரவர் ஆர்வத்துக்கும், ஆற்றலுக்கும் ஏற்பச் சிந்தித்துப் பலருடன் கலந்து முடிவெடுத்துச் செயல்பட அனுமதித்துள்ளோம். அனைவருமே அன்பு, அமைதி, நிம்மதி, உறவு, நட்பு, மகிழ்வு, மானுட உணர்வு, ஒற்றுமை, .... முதலிய சொற்களுக்குரிய பொருளை விரும்புகிறவர்களாக, நம்புகிறவர்களாக, போற்றிப் பேணி வளர்ப்பவர்களாக உருவாக்கப் பட்டுள்ளார்கள் எம்மால். எனவே, எந்தப் புரட்சி நடந்தாலும் அது பண்பாடும், நாகரீகமும் கெடாமல் பாதுகாப்பதாகவே நிகழும் என்று உறுதியைக் கூறி என்னுடைய இந்த முன்னுரையை நிறைவு செய்கிறோம் யாம். அச்சேறாமல் கையெழுத்துப் பிறதிகளாக எமது இலக்கியங்கள் வாழ்ந்தாலும் அவை விரைந்தும், விரிந்தும் சுற்றுலா வருகின்றன என்ற நிறைவிலேயே தொடர்ந்து எழுத்துப் பணியாற்றுகிறோம் யாம்.
யாம் எழுதியுள்ள நூற்றுக் கணக்கான நூல்களையும், ஆயிரக் கணக்கான கட்டுரைகளையும், நூறாயிரக் கணக்கான அஞ்சல்களையும் விட எண்ணிடற்கரிய சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும், சித்தர் நெறி ஆய்வாளர்களும், ஆதரவாளர்களும் உருவாகி விட்டார்கள்.
எனவே, இனிமேல் நானே நினைத்தாலும் கூட சமுதாய மாற்றத்தை உண்டாக்கிட போர்க் கோலம் பூணப் போகிறவர்களைத் தடுக்கவே முடியாது. மீண்டும் அருட்சேனைகள் திரண்டு பாரதப் போரை நிகழ்த்தியே தீரும். அதன் வெற்றியால் சித்தர்கள் குறிக்கும் ‘சமத்துவத் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்’ அமைக்கப்பட்டே தீரும்.
ஓர் இலக்கண நூல் [A Grammar Book]. இலக்கியங்கள் பல தோன்றிய பிறகுதான் அவற்றை ஒழுங்கு படுத்திட இலக்கண நூல்கள் தோன்றும். அப்படிப் பார்த்தால் இந்தத் தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன் சில ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளியில் பல ஆயிரம் இலக்கியங்கள் பிறந்திருக்க வேண்டும்.
மேலும், தொல்காப்பியத்துக்கு முன்னரே நூற்றுக் கணக்கான இலக்கண நூல்கள் இருந்திட்டன என்பதற்குரிய அகச்சான்றுகள் தொல்காப்பியத்திலேயே இருக்கின்றன.
அதை நோக்கும் போது தொல்காப்பியத்துக்கு முன் சில நூறாயிரம் ஆண்டுகள் [இலட்சம்] தமிழ்மொழி வளத்தோடு வாழ்ந்திருக்க வேண்டும் என்ற பேருண்மை தெளிவாகிறது.
அனாதிக் கருவூறார் என்றும் ஆதிக் கருவூறார் என்றும்
தொன்மதுரைக் கருவூறார் என்றும் தென்மதுரைக் கருவூறார் என்றும்
ப·றுளியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
குமரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கபாடபுரத்துக் கருவூறார் என்றும்
தாமிரபரணி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
வைகையாற்றங்கரைக் கருவூறார் என்றும்
அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
காவிரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கணக்கிடு பதினோரு பீடாதிபதிகள் தோன்றினர்.