XIV.
என்ற இந்தப் பேருண்மைகளால்தான் உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும். ஆனால் இதற்காக மெய்யான இந்துமதம் தனது தனித் தன்மையை இழந்து விடக் கூடாது. தன்னுடைய இலக்கிய இலக்கணச் செல்வங்களை பிறமொழிகளின் வேட்டை பொருளாக்கி விடக் கூடாது.
இதே போலத்தான் தமிழர்கள் உலக அளவில் பரந்து விரிந்துபட்ட ஒற்றுமையை உருவாக்க வேண்டுமென்பதற்காகத் தங்களின் இன வரலாறுகளின் பண்பாடுகளையும், உரிமைகளையும், பெருமைகளையும், பிற இனத்தவர்க்கு காணிக்கையாக்கி அடிமைகளாக்கி விடக் கூடாது. தமிழர்கள் ஏமாளித்தனமாகப் பிறரோடு கூடி வாழ வேண்டுமென்பதற்காக அன்னியர்களின் கூலிகளாக, வேலிகளாக, காவலர்களாக மாறி விடக் கூடாது.
அதாவது எல்லா மொழிகளும், இனங்களும், பண்பாடுகளும் தனித்தன்மை கெடாமலும், விடுதலை வாழ்வு பாதிக்கப் படாமலும், ஒன்றையொன்று ஆதிக்கம் செலுத்தாமலும், ஒன்றையொன்று சுரண்டி வாழாமலும் சமமாக நட்போடு வாழவேண்டும். அந்தந்த மொழிக்குரிய நாட்டில் அந்தந்த மொழியே அனைத்துத் துறைகளிலும் முழுமையான ஆட்சி நடத்த வேண்டும். அப்பொழுதுதான் நாட்டுப் பற்றும், இனப்பற்றும், இன ஒற்றுமையும், இன ஒருமைப்பாடும் விழிச்சி பெறும், மலர்ச்சி பெறும், வளர்ச்சி பெறும், எழிச்சி மிகு செழிச்சி பெறும்.
இப்பேருண்மையினைப் புரிந்து அருட்பேரரசின் மாமன்னன் அருள்மொழித் தேவன் அனைத்து வகை சமய சமுதாய அரசியல் ஆணைகளையும், நடவடிக்கைகளையும் தமிழ் மொழியிலேயே தமிழர்களையே அலுவலர்களாகக் கொண்டு செயலாக்க வேண்டும். இந்த அருளாணையைச் செயலாக்கத் தயங்கும் அவன் தமிழ்மொழிக்கும், இனத்துக்கும், நாட்டுக்கும் பெரும் கேடு பயப்பவனாகி விடுவான்.
இவன் திருந்தா விடில் கருவறை ஊழியர்களின் அருட்படையும், தமிழுணர்வுடைய அரசியல் படையும் கருவூர்த் தேவனின் தலைமையில் போர் புரிந்தேயாக வேண்டும். இதனை உடனடியாகத் தமிழ்மொழிப் பற்றாளர்களும், தமிழ் இனப் பற்றாளர்களும், தமிழ் நாட்டுப் பற்றாளர்களும்..... முழுமையாகப் புரிந்தும் புரிய வைத்தும் நேரடியாகச் செயல்பட வரவேண்டும்! வரவேண்டும்!! வர வேண்டும்!!!