XII. கோயில் கலைஞர், கூத்தர், மருத்துவர், இசை வேளாளர், ஆசாறியார், ஆசிரியர், பண்டாரம், பூசாறி, குருமார், குருக்கள்.... முதலியவர்களுக்கு அன்றாட உணவும், ஆண்டுக்கு இருமுறை உடையும், ஊதியமும் வழங்கப் படல் வேண்டும். அதாவது உரியவர்களின் உழைப்பு ஆய்வு செய்யப்பட்டு அவ்வப்போது ஊதிய உயர்வும், கூடுதலான ஊதியமும், நன்கொடையும், பரிசும் வழங்கப் படல் வேண்டும். அப்பொழுதுதான் சமுதாயத்திற்கும், அரசியலுக்கும் தேவையானவர்களை உருவாக்குகின்ற ஒரு சாதனமாகச் சமயம் பயன்பட்டிடும். இல்லாவிட்டால், சமயம் சத்திரம் சாவடிகளால் சோம்பேறிகளையும், பிச்சைக்காரர்களையும், கருத்துக் குருடர்களையும், பொருள் திருடர்களையும், மூடப் போக்குடையவர்களையும் அதிகமாக உருவாக்குகின்ற ஒன்றாகிடும்.
அதாவது, சமயத்தின் கல்வியும், கலையும், பயிற்சியும், முயற்சியும், தேர்ச்சி முதிர்ச்சியும் சமுதாயத்தின் நடைமுறை வாழ்க்கைக்கும், அரசியலின் ஆட்சிநிலைகளுக்கும் தொடர்பே இல்லாமல் போய்விடும்! தொடர்பே இல்லாமல் போய்விடும்! தொடர்பே இல்லாமல் போய்விடும்! இதனால், காலப் போக்கில் அரசுக்குரியவர்களும், சமுதாயத்திற்குரியவர்களும் சமயத்தைத் தேவையற்றதாக, பயனற்றதாக, உண்மையற்றதாக, சமுதாயத்திற்கும் அரசியலுக்கும் கேடு விளைவிப்பதாகக் கருத நேரிட்டு விடும்.
அதனால், மெய்யான இந்துமதத்திற்காகக் கருகுலங்கள், குருகுலங்கள், தருகுலங்கள், திருகுலங்கள் நாடெங்கும் தேவைக்கேற்ப அமைக்கப் பட்டு (i) இந்திரிய ஒழுக்கம், (ii) செயல் ஒழுக்கம் (பயிற்சிநிலை), (iii) சீவ ஒழுக்கம், (iv) ஆன்ம நேய ஒழுக்கம்...... முதலியவைகளை ஏட்டறிவாகவும், பட்டறிவாகவும் வழங்கி மெய்யான இந்துமதக் காவலர்களை உருவாக்கிட முடியும். இவற்றோடு தனிமனிதத் தற்காப்புக்கும் போருக்கும் பயன்படக் கூடிய சேவலோன் கலைகள் (போர்க்கலைகள்) பயிற்றுவிக்கப்பட்டு
.... இப்படிப்பட்ட மெய்யான இந்துமதத்தின் அடிப்படைக் கருத்துக்கள் அநுபவப் பூர்வமானவைகளாக ஆக்கப் படல் வேண்டும். அப்பொழுதுதான் மெய்யான இந்துமதம் தமிழினத்திற்குத் தலைமை தாங்குவதாகவும், வழி காட்டுவதாகவும், வழித்துணையாக வாழ்வதாகவும், உயிர்த் துடிப்போடு உயரிய பெரிய பெரிய பயன்களை நல்குவதாகிடும்! நல்குவதாகிடும்! நல்குவதாகிடும்!
குறிப்பு:-
(i) இந்திரிய ஒழுக்கம்:- உடல் தூய்மை, உடைத் தூய்மை, உள்ளத் தூய்மை, சிந்தைத் தூய்மை, செயல் தூய்மை, உடல்நல வளம்.... முதலியவைகளைப் பேணல் இந்திரிய ஒழுக்கம் எனப்படும்.
(ii) செயல் ஒழுக்கம் அல்லது பயிற்சி ஒழுக்கம்:- பத்தி, சத்தி, சித்தி, முத்தி முதலியவைகளுக்காகத் தனித்திருத்தல், பசித்திருத்தல், விழித்திருத்தல், சிந்தித்திருத்தல் அல்லது தத்துவங்களை ஆராய்தல், பொறுத்திருத்தல், உரிய சூழல் உருவாகாமல் எதனையும் வெளியிடாமல் அடக்கமாயிருத்தல் முதலியவை காரண ஒழுக்கம், செயல் ஒழுக்கம், பயிற்சி ஒழுக்கம் என்ற பெயர்களால் குறிக்கப் படுகின்றது.
(iii) சீவ ஒழுக்கம்:- பயிரினங்களும் உயிரினங்களும் சமமானவையே. இவற்றிற்கிடையே எந்த வித உயர்வு தாழ்வும் பாராட்டாமல் இருத்தல். உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டை விரும்புதல், உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் அமைக்கப் பாடுபடுதல்; ...... முதலியவைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதே சீவ ஒழுக்கம்.
(iv) ஆன்ம ஒழுக்கம்:-
.... முதலியவையே ஆன்ம ஒழுக்கம் எனப்படும்.
மேற்கூறிய இந்நான்கு ஒழுக்கங்களையும் செயல் படுத்துவதற்காக
(அ) தன்னையறிதல் = ஏமசித்தி,
(ஆ) தலைவனையறிதல் = கடவுளோடு இரண்டறக் கலத்தல்
(இ) குருட்டுத் தனமாக எதனையும் ஏற்றுக் கொள்ளாமல் தத்துவ விசாரணை செய்தல்
(ஈ) மெய்யான இந்துமதத்திற்குரிய சாகாக் கல்வி, வேகாத் தழை, போகாப் புனல்
.... முதலியவற்றைக் குருவழி கற்றல் அல்லது திருவழி உணருதல். இந்த நான்கினையும் கருவழியாகவோ அன்றித் திருவழியாகவோ அடைதல் வேண்டும்.
[* தத்துவாதி நிலை => தத்துவ விசாரணை = தத்துவ ஞானம்;
கடவுளாதல் => சீவான்மா பரமான்வோடு கலத்தல், => இறையோடு இரண்டறக் கலத்தல்]