இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் >  11வது ஆணை
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

 11வது ஆணை

பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள்

11வது ஆணை

இந்தப் பக்கத்தில் உள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி மீதி ஆணைகளைப் படிக்கவும்.

 

தமிழன் ஒற்றுமைப்பட வேண்டியதின் அவசியம்

XI. தமிழகம் முழுவதுமுள்ள கோயில்களைப் பற்றிய விவரங்களும் அவற்றின் சிறப்புக்களும் ஒவ்வொரு கோயிலிலும் அறிவிக்கப் படுகின்ற ஏற்பாடுகள் பல செய்யப் பட்டாக வேண்டும். இதற்காகத் தமிழகத்திலுள்ள கருவறை ஊழியர்கள், மற்றக் கோயில் பணியாளர்கள் கட்டாயமாக அவரவரால் இயன்றளவு தமிழகத்திலுள்ள பல கோயில்களுக்கும் சென்று தங்கி அறிவை வளர்த்துக் கொள்வதோடு; கோயில் ஊழியர்களுக் கிடையிலும், கருவறை ஊழியர்களுக் கிடையிலும் நல்ல உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், எல்லாச் சாதியார்களும் அவரவர் ஊழ்வினைப் படியும், விதிப்படியும், ஆர்வப் படியும், முயற்சிப் படியும் இந்துமதத்தின் ஊழியராக, குருமார்களாக, குருக்கள்களாக, பூசாறிகளாக, பண்டாரங்களாக உயர்வதற்கு வழிவகை பிறந்திடும்.

அதாவது, எந்தவிதமான சாதி வேறுபாடுகளும் இல்லாமல் யாராக இருந்தாலும் அருளுலகில் எத்தகைய உயரிய அருள் நிலைகளையும் பெறலாம். அப்பொழுதுதான் பிறமண்ணினரான பிறாமணர் என்னும் வட ஆரியர்கள் தமிழர்களுக்கிடையில்; 'வாழுகின்ற இடங்களாலும், செய்கின்ற தொழில்களாலும் இருந்த சிறப்புப் பெயர்கள் கடுமையான ஏற்றத் தாழ்வும், தீண்டாமையும் உடைய சாதிகளாக உருவாக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட சூழ்ச்சிகளை முறியடிக்க முடியும். அதாவது தமிழர்கள் சாதி உணர்வுகளால்தான் பல்வேறு தனித்தனிப் பிரிவுகளாகப் பிரிந்து ஒருவரோடொருவர் போட்டியும், பொறாமையும், உயர்வு தாழ்வு வெறியும் வளர்த்துக் கொண்டு; இனப்பற்றையும், மொழிப் பற்றையும், நாட்டுப் பற்றையும் புறக்கணித்து விட்டார்கள்’.

இதனால்தான் அன்னியர்கள் தமிழர்களுக்குள் வேற்றுமையையும், எந்நேரமும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்ற பிரிவுகளையும் வளர்த்துத் தங்களுடைய ஊடுருவலையும், மறைமுக ஆதிக்கத்தையும், சுரண்டலையும் நிலையாக்கிக் கொண்டு விட்டார்கள்.

இந்த அன்னியர்களின் கோரப் பிடியிலிருந்து தமிழர்களை விடுவிக்க வேண்டுமென்றால் மெய்யான இந்துமதத்தை தமிழர்களாவது முழுமையாகப் புரிந்து கொள்ளும்படிச் செய்ய வேண்டும். அதற்கு மெய்யான இந்துமதத்தின் வள வளர்ச்சிக்காகவும், வலிமைச் செழிச்சிக்காகவும், மறுமலர்ச்சிக்காகவும், ஆட்சி மீட்சிக்காகவும் நேரடியாகச் செயலில் ஈடுபட வேண்டும். அதற்கு உடனடியாகத் தேவைப்படுவது அன்னிய நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் தங்களுக்குள் சாதிவெறி இல்லாமல் திருமணத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு பற்றோடும், பாசத்தோடும் ஒற்றுமையோடும் வாழ்வது போல; தமிழகத்திலுள்ள அனைத்துச் சாதியினரும் சாதிவெறிகளை முழுமையாக விட்டுவிட்டுத் திருமண உறவுகளையும், பிற உறவு முறைகளையும், உரிமைகளையும் புதுமையாகப் பத்தியின் பேரால் உருவாக்கிக் கொண்டேயாக வேண்டும்.

அதாவது, தமிழன் என்ற ஒரே சொல்லின் கீழ் தமிழகத்து மக்கள் அனைவரும் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் ஒருவரோடு ஒருவர் சமத்துவமாகக் கலந்து பழகிப் பற்றோடும், பாசத்தோடும் ஒற்றுமையாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில்தான் கண்கவர் விண்ணுயர்ந்த கோபுரங்களைக் கட்டும் பணியிலும், அருட்படை திரட்டுவதிலும், அருளாட்சி அமைப்புப் பணியில் ஈடுபடுவதிலும், இயக்குவதிலும், சாதிமத வேறுபாடுகள் முழுமையாகப் புறக்கணிக்கப் பட்டுள்ளன! புறக்கணிக்கப் பட்டுள்ளன! புறக்கணிக்கப் பட்டுள்ளன!

எனவே, மெய்யான இந்துமதத்தின் உயிர்நாடிக் கொள்கையான

  •     ‘மனிதனுக்கு எண்ணற்ற பிறவிகள் உண்டு’;
  •     ‘மனிதன் ஒரு பிறவியில் பிறக்கின்ற அதே நாட்டிலோ, இனத்திலோ, மதத்திலோ, சாதியிலோதான் மறுபிறவியிலும் பிறக்க வேண்டும் என்பது கட்டாயமுமில்லை! திட்டமுமில்லை!’;
  •     ‘ஒரு பிறவியில் ஆணாகப் பிறக்கின்றவன் மறு பிறவியில் ஆணாகப் பிறக்க வேண்டும் என்ற கட்டாயமுமில்லை! திட்டமுமில்லை!’ (அருளுலக நியதிப்படி அல்லது நீதிப்படி)
  •     ‘எந்தவொரு மனிதனும் குருவருளினால் பழம்பிறவித் தொடர்புகளை அறுத்துக் கொள்ளலாம், மறுபிறவிகளைத் தடுத்துக் கொள்ளலாம்’ ....

இந்தப் பல பிறவிக் கொள்கையின் அடிப்படையில் மெய்யான இந்துக்கள் அனைவரும் சாதிவெறிகளை, மதவெறிகளை, இனவெறிகளை, நாட்டு வெறிகளை முற்றிலும் அகற்றிக் கொள்ள வேண்டும். இதுவே அருளாட்சி ஆணையாகும்.

ஆனால் விசயாலயன் காலத்திலிருந்து அருட்பேரரசு உருவாகி வளர்ந்து வளம் பெற்று வலிமையுற்று உயரிய நிலையில் இருக்கும் இன்றைக்கு அருள்மொழித் தேவனான இராசராச சோழன் வட ஆரிய மாயையாலும், பிறாமணச் சூழ்ச்சியாலும், சனாதன வேதமதப் பித்தாலும், வட ஆரியக் களியாட்ட வெறியாலும் விளைந்த அடிமைப் புத்தியால் சாதிவெறிகளை, மதவெறிகளை நியாயப் படுத்தி நீதிக்குரியவையாக்கி விட்டான். இந்தத் தவறான சித்தாந்தத்தின் செயலகமாக யாமுருவாக்கிய தஞ்சைப் பெரியவுடையார் கோயில் பயன்பட்டு விடக் கூடாது. இதனை மீறுபவர்கள் நெடிதுயர்ந்த வில்லின் அம்புகளுக்கும் கூர் வேலுக்கும் பதில் சொல்லியேயாக வேண்டும்.

அரசவை முதல் ஆண்டி மடங்கள் வரை இந்த பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாணைகளை ஏற்பவர் என்றும் எதிர்ப்பவர் என்றும் இரு பிரிவினர்கள் தனித்தனியாக அணி திரண்டு போரிட்டேயாக வேண்டும். அதில் கொட்டும் குருதி அள்ளித் தெளிக்கப் பட்டோ அல்லது அருவியாக கொட்டி நீராட்டியோ மெய்யான இந்துமதத்தைப் புனிதப் படுத்தியேயாக வேண்டும். பொய்யான ஹிந்துமதத்தின் உயிர்நாடியான சமசுக்கிருதத்தை ஒவ்வொரு தமிழனும் புரிந்து புறக்கணிக்க வேண்டும் அல்லது புதைகாட்டிற்கு அனுப்ப வேண்டும். இனியும் வட ஆரிய மாயைகளையும், சனாதன வேதமதத்தின் சுரண்டல்களையும், பிறாமணச் சூழ்ச்சிகளையும் அனுமதிக்கவே முடியாது! முடியாது! முடியாது! முடியவே முடியாது!

அதாவது தமிழர்களை என்றென்றும் ஒற்றுமைப் பட முடியாமல் ஏற்றத் தாழ்வு உணர்வுகளாலும், வேற்றுமை வெறிகளாலும், தொட்டால் தீட்டு எனும் திட்டத்தாலும்.... எண்ணற்றப் பிரிவுகளாக்க முயலும் வட ஆரியச் சூழ்ச்சிகளை அழித்தொழித்தேயாக வேண்டும். இந்தச் சித்தாந்தத்தின் செயலகங்களாகத்தான் தமிழகத்திலுள்ள 48 வகையான வழிபாட்டு நிலையங்களும், 48 வகையான கருவறைகளும், சித்தியாளர்களும், முத்தியாளர்களும் செயல்பட்டாக வேண்டும்! செயல்பட்டாக வேண்டும்! செயல்பட்டாக வேண்டும்!

இந்த அருளாணையைக் குருவாணையாக ஏற்றுச் செயல்படுத்துபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்துத்தான் அருட்பேரரசின் வருங்காலமும், தமிழக மக்களின் வருங்காலமும் அமையும். எனவே, பீடாதிபதியின் அருளாணைகளைப் புரிந்தும் புரிய வைத்தும் செயல்படுக! செயல்படுக! செயல்படுக!       

குறிப்பு:-

இந்த அருளாணையில் முன்னுக்குப் பின் கருத்து வேறுபாடு இருப்பது போல் தோன்றுகிறது. சாதிவெறியை மட்டும் கண்டிக்காமல் நாட்டு வெறி, இனவெறி முதலியவைகளும் கண்டிக்கப் பட்டுள்ளன. ஆனால், தமிழர்கள் ஒன்று சேருவதற்காக, ஒற்றுமைப் படுத்துவதற்காக வட ஆரியர்களையும், பிற நாட்டவர்களையும் எதிர்த்து அல்லது புறக்கணித்துப் போராட வேண்டிய செயல் திட்டத்தையே இந்த அருளாணை வழங்குகிறது.

இந்த விளக்கத்தைக் கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ.இராமசாமிப் பிள்ளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கு விளக்கமாக குருபாரம்பரியத்தில் உள்ள பல செய்திகளின் அடிப்படையில் ஒரு தெளிவுரை இங்கு வழங்கப் படுகிறது. அதாவது தமிழர்களிலேயே பலர் பிற மொழியினர் களையும், பிற இனத்தினர்களையும், பிற நாட்டவர்களையும் மணந்து தனித்தனிக் கூட்டங்களாகத் தனித்து வாழ நேரிட்டது. அதாவது புதிய புதிய கலப்பினங்கள் தமிழ் நாட்டில் ஆங்காங்கே ஆற்றிடைத் திட்டுக்கள் போல் தனித்தனியாக இருக்கின்றன. இவற்றைத் தமிழர்கள் ஏற்கனவே தங்களுக்குள் இருக்கின்ற சாதி வேற்றுமை வெறிகளோடு சேர்த்து விட்டார்கள்.

அதாவது, தமிழர்கள், சீனர், சோனகர், யவனர் ... முதலியவர்களோடு திருமண உறவு கொண்டு உருவாக்கிய கலப்பினங்கள் தமிழர்களாக ஏற்றுக் கொள்ளப்படவே யில்லை. எனவே புதிய கலப்பினங்கள் தமிழையே தாய்மொழியாகப் பேசினாலும் கூடத் தமிழர்களால் பற்றோடும், பாசத்தோடும் ஏற்றுக் கொள்ளப் பட்டு ஒற்றுமையான வாழ்வு பெற முடிய வில்லை. இதைத் தீர்த்து வைப்பதற்காகத்தான் இந்தப் பதினோராவது அருளாணையில் தமிழர்கள் தமிழர்களுக்கிடையில் சாதி வெறி, இன வெறி, நாட்டுவெறி முதலிய வெறிகளை வளர்க்கக் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது. இதைத் தவறாக யாரும் புரிந்து கொள்ளக் கூடாது.

அதாவது பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரிய வேத இனத்தினரையும் அவர்களின் மொழியான சமசுக்கிருத மொழியையும் புறக்கணிப்பதோ, மறுப்பதோ, வெறுப்பதோ, எதிர்ப்பதோ தவறல்ல என்பதேயாகும். கட்டாயமாக அன்னியரான பிறாமணர்களையும், சமசுக்கிருத மொழியையும் புறக்கணிப்பதோ, மறுப்பதோ, வெறுப்பதோ, எதிர்ப்பதோ தவறல்ல என்பதேயாகும். கட்டாயமாக அன்னியரான பிறாமணர்களையும் சமசுக்கிருத மொழியையும் எதிர்த்துப் போரிட்டால்தான் தமிழர்களுக்குள் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் உருவாகும். தமிழர்களின் வீழ்ச்சி நிலைகளையும், தாழ்ச்சி நிலைகளையும் மாற்றிட முடியும். தனிமனிதர்களுக்குத் தன்னம்பிக்கையும், தன்மானப் பிடிப்பும், பண்பாட்டுப் பிடிப்பும், மெய்யான இந்துமதத்தில் விருப்பும், நம்பிக்கையும், இனஒற்றுமையும், ஆர்வமும், மொழியுணர்வில் வெறியும் பிறப்பிக்கப்படும்! பிறப்பிக்கப்படும்!! பிறப்பிக்கப்படும்!!!


« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |