இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > அன்பு சேவுக - 8 > பதினெண்சித்தர் பீடத்தின் வாரிசுகள்
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

பதினெண்சித்தர் பீடத்தின் வாரிசுகள்

யார்வேண்டுமானாலும் பதினெண்சித்தர் பீடத்தின் வாரிசாகலாம்! பதினெண் சித்தர் பீடத்தின் வாரிசுகள் யாராகவும் மாறலாம்!

[குருதேவர் அறிக்கை 42-48இலிருந்து]

 அன்புச் சேவுக!

1. நமது இயக்க முதுபெரும் செயல்வீரர் Dr. S.R. நீலமேகம் பிள்ளை இறப்புக்கு மட்டுமே நம்மவர்கள் சென்றுள்ளார்கள். அதுவும், அனைவரும்; இவர் 'இறைமை' (இறைவன்) நிலையை எய்தியுள்ளவர்; அனைவருமே சித்தி பூசை செய்து கொள்ள வேண்டிய ஆலவாய் மாமூதூர் மதுரைச் சுடலையில் நிலையாக அருவுருவ அருளாட்சி அமைப்புப் பணியாளர்களில் ஒருவராக இருந்திடும் பேறு பெற்றவர்; இச்சுடலையின் பத்தரகாளி, பத்திரகாளி, பத்திறகாளி, ஈசுவரி, ஆண்டிச்சி எனும் அனைவராலும் மதித்து ஏற்றுக் கொள்ளப்பட்டவர்; இ.ம.இ.யின் மூலவரான கருவூறார் வழிவந்த கண்டப்ப கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமிப்பிள்ளையின் வழி வந்தவர்; நமது இயக்கத்தில் 'பெரியவர்' என்று போற்றப் பட்டவர்...... என்று தெரிந்து புரிந்திருந்தும் யாருமே மறுநாள் பால்தெளியலுக்குச் செல்லவில்லை!!!.

2. அருளுலகில் சித்திகளைப் பெறுவதறகாக மிக மிகப் பெரிய அரிய உயரிய பூசைகளையெல்லாம் செய்து கொண்டவர்கள் மிகுதியாக உள்ள அருளாட்சித் திருநகரில்; வட்டாரத்தில்; மாவட்டத்தில்..... 'ஏனோ! தானோ'' நிலைக்குரிய நிகழ்ச்சி நடந்து விட்டது!!!......

3. நம்பிக்கையும், குருவாணை எதுவானாலும் அதனை உடனே முழுமையாக நிறைவேற்றும் போக்கும்; எதையும் குருவழியே உணர்ந்து செயலாக்கும் மனமும், எவருக்கும் குருவுக்கேவுரிய மேலாண்மை இடத்தைத் தன் வாழ்வில் தராத தரமும்; எப்படியும் குருவின் திட்டங்களைச் செயலாக்கிடும் திறமும் .... ஒருசேரப் பெற்ற ஊழ்வினைத் தொடர்புத் தோழா! நண்பா! அடியானே! அன்புச் சேவுகா! .... எந்தப் பீடாதிபதிக்கும் கிடைத்திடாத அளவு மக்கள் தொடர்பு எமக்குக் கிடைத்திடுகின்றது. இதற்குக் காரணம், யாமொருவரே அனைத்து வகையான பாரம்பரியச் சட்டதிட்டக் கட்டுப்பாடுகளையும், மரபுகளையும், முறைகளையும், நெறிகளையும், விதிகளையும், ... தேவைக்கேற்ப முழுமையாக மாற்றியும், திருத்தியும், மீறியும், உடைத்தெறிந்தும் ... மானுடர்களுக்குள் பீடாதிபதியின் தொடர்பால் அருட்செல்வர்கள், அருட்சோலைகள், அருளூற்றுக்கள்,... தோன்றிடும் வண்ணம் வாழுகிறோம். இதில், எண்ணற்ற தோல்விகள், தொல்லைகள், ஏமாற்றங்கள், அவசரப் படைப்புக்கள், அரைகுறைப் படைப்புக்கள்... என்று எண்ணற்ற வகைகள் உருவாகியுள்ளன. இவை யனைத்துமே, எமது வரலாற்றுச் சின்னங்களே! எமது சாதனைகளின் வடிவங்களே! ... ஏனெனில், 'யாம், யாரையுமே எந்த எதிர்பார்ப்புடனும் உருவாக்குவதில்லை. எனவே, யார் எந்த அளவு உருவானாலும் மகிழ்ச்சியோடு அவர்களை அருளுலகப் பணிகளுக்காகத் தனித்தும், பிறரோடு பிணைத்தும், எம்மோடு இணைத்துமே செயல்படுத்துகிறோம். இதில், எம்மைப் பொறுத்தவரை எதையும் வெற்றியாகப் பெருமிதப்படவோ! அன்றி, எதையும் தோல்வியாகக் கருதி வருத்தப்படவோ இயலாது. அனைத்தும் தாத்தாக்கள் ஆத்தாக்கள் செயலே! அம்மையப்பனின் திருவிளையாடலே ... என எண்ணியே நிறைவும் அமைதியும் அடைகிறோம்!

4. அண்மைக் காலத்தில் நமது இயக்க வரலாற்றில் பிறர் மனம் நோவது பற்றிக் கவலைப் படாமல் விமர்சனம் வழங்கவும்; முடிவுகளை எடுக்கவுமாகச் செயல்படுகிறோம் யாம். இதற்குக் காரணம்; பதினெண்சித்தர் பீடத்தின் சித்தர் நெறியான சீவநெறியெனும் இந்துமதம் இந்த மண்ணுலகை விடத் தொன்மையானது; மிகமிகத் தெளிவான ஏட்டறிவையும், பட்டறிவையும் பெற்றது. ஆனால், இவையெல்லாம் பழமையானவை; காட்டுமிராண்டிக் காலத்தவை; கரடுமுரடானவை; உலகியலுக்கு அப்பாற்பட்டவை; நடைமுறைக்குச் சிரமமானவை; சாதாரண அறிவு படைத்த சராசரி மனிதரால் புரிந்து கொள்ள முடியாதவை; எல்லோரும் அநுபவத்தில் கையாள முடியாதவை ... என்ற கருத்து விளக்கங்களை அல்லது திறனாய்வுக் குற்றச்சாட்டுக்களைக் காலங்கள் தோறும் பெற்றிடுகின்றன. குறிப்பாக, 'இறைச்சியுணவு உண்ணல்', 'பலி கொடுத்தல்'; 'வழிபாட்டுக்குரிய கடவுள்களே ஆயுதப் புரட்சியையும் குருதிப் போரையும் பரிந்துரைத்தல்'; 'துறவுநிலை, உறவுநிலை, மறவுநிலை பற்றிய புரியாமைகள்'; 'பெண்ணுக்குத் தரப்படும் அருளுலக நிலைகள்'; 'சுடலை வழிபாடு, முன்னோர் வழிபாடு, உருவ வழிபாடு ..... முதலியனவற்றின் அறியாமைகள்'; ... என்று சிலவற்றைப் பட்டியலிட்டுக் காட்டலாம். -- இப்படிப் பட்டனவற்றிற்கு முறையான விளக்கங்களை நிறைவாகத் தரக்கூடிய மாவீரர்களை உருவாக்கியே தீர வேண்டிய கட்டாய நிலையிலேயே உள்ளோம் யாம். எனவேதான், மேற்படி மாவீரர்களை ஏட்டறிவாலும், பட்டறிவாலும் தயாரிப்பதுடன்; அவர்களுக்கு அருளாற்றலை இட்டும் தொட்டும் சுட்டியும் 'குருபாரம்பரிய மரபுப்படி' வழங்கியும் தயாரிக்கிறோம் யாம். இந்தத் தயாரிப்பு முறைகளில் அவரவர் நம்பிக்கைக்கும், முயற்சிக்கும், ஆர்வத்துக்கும், செயல்பக்குவத் தரத்திற்கும், திரத்திற்கும், திறத்திற்கும், தீரத்திற்கும் ஏற்ப அவரவர் குறிப்பிட்ட அளவு தேர்ச்சியோடு நின்றுவிடுகிறார்கள். ஆனால், குறிப்பிட்ட சிலராவது விடாமுயற்சியுடன் தொடர்ந்து குருவழியாகச் செயல்பட்டு 'மாவீரர்' என்ற நிலையும் கடந்து 'படைத் தளபதிகளாக', 'பட்டாள நாயகங்களாக', 'சேனாபதிகளாக', 'மாதண்டநாயகங்களாக', 'வியூகநாயகங்களாக', 'அணிவகுப்பு நாயகங்களாக', 'படைதிரட்டு நாயகங்களாக', 'பாடிவீட்டு நாயகங்களாக', 'அருளாட்சி அமைப்பு நிறுவனக் காப்பாளர்களாக', 'அருளாட்சி அமைப்பு நிர்வாகப் பொறுப்பாளர்களாக' ... முதிர்ந்த தேர்ச்சி பெற்று அருளுலகத்தாரின் வாழ்த்துதலையும் ஒப்புதலையும் பெற்று எமது பதிலிகளாகவும், வாரிசுகளாகவும் செயல்படத் தயாராகிடல் வேண்டும். அப்பொழுதுதான், புரட்சியைத் தொடர்ந்து நடத்திடவோ, புரட்சியின் வெற்றிக்குப் பிறகு அருளாட்சியை முறைப்படி முயன்று நிறைவாக அமைத்திடவோ முடியும். இவற்றிற்கெல்லாம் மேலாக, நாம் தனிமனித வாழ்வுப் புரட்சி, குடும்ப வாழ்வுப் புரட்சி, சமுதாய வாழ்வுப் புரட்சி, அரசியல் வாழ்வுப் புரட்சி முதலிய அனைத்துமே ஒரு 'முழுமையான பண்பாட்டுப் புரட்சி' யாகத் [A Total Revolution] தான் செய்யப் போகிறோம் என்பதால்; இப்புரட்சிகளை நிகழ்த்திட எமது வாரிசுகள், பதிலிகள் என்ற தகுதி பெற்றவர் சிலராவது நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் புரட்சிக்குத் தலைமை தாங்கிடல் வேண்டும். அப்பொழுதுதான், தனிமனித வன்முறைகள், தவறுகள், சர்வாதிகாரங்கள், துரோகங்கள், விரோதங்கள், ... முதலியவை யெல்லாம் உடனுக்குடன் தடுத்து நிறுத்தப் பட்டிடும். நமது புரட்சியும் அன்புவழியில், அமைதிவழியில், அறவழியில், அருள்வழியில் ... ஆக்கப் பூர்வமாக ஊக்கம் குன்றாமல் நிகழ்த்தப் பட்டிடும்! நிகழ்த்தப் பட்டிடும்!! நிகழ்த்தப் பட்டிடும்!!!

5. நமது வளர்ச்சி; ஒரு சில மாவட்டங்களில் எண்ணியே பார்க்க முடியாத அளவுக்கு மிகமிகப் பெரிய உயரிய வலிய நிலைகளைப் பெற்று விட்டது. இதே நேரத்தில்; சில மாவட்டங்களில் இலைமறை காயாகவும், அரைகுறையாகவும் வளர்ந்திருக்கிறது; சில மாவட்டங்களில் மெல்ல மெல்ல மந்தமாகவே வளருகிறது; ஒன்றிரண்டு மாவட்டங்களில் பரவலாகத் தனிமனிதர்களின் வளர்ச்சியே நமது இயக்க வளர்ச்சியாக இருக்கின்றது. இவற்றிற்கெல்லாம் மேலாக, நம்மிடையில் முன்னணிச் செயல் வீரர்களாக இருப்பவர்களுக்கிடையேயே சிலர் பிற்போக்குச் சத்திகளாகவும்; பிளவுச் சத்திகளாகவும், பிரிவினைச் சத்திகளாகவும், குழப்பவாதச் சத்திகளாகவும்; தலைமையின் கீழுள்ள வலிமையான கட்டமைப்புக்களையும், இரகசியமான நிறுவன நிர்வாகச் செயல்முறைகளையும், குருபாரம்பரியச் செயல்திட்டங்களையும் ... தங்களின் அறியாமையால் சீர்குலைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இவற்றால், வானுற வளர்ந்துவிட்ட நமது இயக்க நிறுவன நிர்வாகங்கள் ஆங்காங்கே மங்கியும், மயங்கியும், தயங்கியும், தேங்கியும் ... பல்வேறு வகையான பாதிப்புக்களைப் பெற்றுள்ளன. எனவே, இதற்காக என்னென்ன பரிகாரங்களைச் செய்ய வேண்டுமென்று சத்தி அண்டத்துத் தேவதேவியின் பரிந்துரையைக் கேட்டே; அவசர அவசிய அஞ்சல்களால் செயல் விளக்கங்களும், குருவாணைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, நம்மவர்கள் எந்தப் புதிய கருத்துக்களாலும், திருத்தங்களாலும் வருத்தமடையாமல் செயல்படல் வேண்டும்.

நம்மவர்கள், குறிப்பிட்ட காலம் வரை அவரவரின் சித்திக்காகப் பூசைகளை வீட்டிலும், அருட்கோட்டங்களிலும், ஆலயங்களிலும், கோயில்களிலும், சுடலைகளிலும், புதைகாடுகளிலும் தங்களின் குடும்பத்தாருடன் செய்தால் போதும். எனவே, எக்காரணம் பற்றியும் தலைமைப்பீடத்தின் ஒப்புதலின்றி நம்மவர்களில் யாரும் அடுத்தவருடைய வீட்டிற்குப் போகத் தேவையில்லை. மேலும், நம்மவர்கள், பொது இடங்களில் கூடித் திண்ணைப் பேச்சில் காலத்தை வீணாக்கத் தேவையில்லை. அச்சிட்ட வெளியீடுகளையும், கையெழுத்துப் பிறதிகளையும், அவ்வப்போது வரக்கூடிய அஞ்சல்களையும் மட்டும் படிப்பதற்காகவே நம்மவர்கள் கூடிடலாம். வேறு ஐயங்களுக்கு அவரவர் நேரடியாகத் தலைமைப் பீடத்துடன்தான் தொடர்பு கொள்ள வேண்டும். குருவாணை.

அன்பு,
குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்

 

 

« முந்தையது மேலே செல்ல

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

ஞானத் தேடல்

".. எல்லோருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் எளிதில் கிடைத்து விடும் என்று எதிர்பார்த்துப் பொதுநலத் தொண்டு ஆற்றிட இயலாது. தேவையில்லாமல் பிறரின் தலையீடும், காழ்ப்பும், போட்டியும், பொறாமையும், அறியாமையும் பொதுநலத் தொண்டர்களைத் திணறித் திக்குமுக்காடச் செய்திடும். அதிலும், எவரும் எளிதில் ஏட்டறிவாலோ, பட்டறிவாலோ தெரிந்து கொள்ள முடியாத பேருண்மைகள் நிறைந்த அருளுலகில் தொண்டாற்றுவது என்பது எளிதல்ல! ..."

"... எமது பணிகளுக்குரிய கொள்கை, செயல்திட்டம், குறிக்கோள் முதலியவைகளை எழுதியும், அச்சிட்டும், பேசியும், ஆயிரமாயிரம் இளைஞர் மூலம் செயலாக்கியும் கூடப் பிறரின் கேலியும், கிண்டலும், ஏளனமும், எதிர்ப்பும், ஒதுக்கலும், பதுக்கலும், நீக்கலும், இருட்டடிப்பும்தானே பரிசாகக் கிடைக்கின்றன! ..."

 

அருளோ அருள்

  "...யாம், இப்படிப்பட்ட அருளுலகில்தான் பாரம்பரியமாகப் பெற்ற அருளையும் பயிற்சிகளாலும் முயற்சிகளாலும்; கல்விக் கேள்வித் தொண்டுகளாலும், ... பெற்றிட்ட அருட்செல்வங்களையும் இப்புவிப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளுக்கு தலைமேல் தூக்கிச் சென்று கூடைக்காரி போல் 'அருளோ அருள்' என்று கூறி வாரிவாரி மலிவுவிலைக்கு வழங்கிப் பார்த்துவிட்டு; இந்தியத் துணைக் கண்டத்திலும் இதனைச் சார்ந்த நாடுகளிலும் உள்ளவர்களுக்கு தாங்கள் அறிய கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இனாமாகவே வழங்கிவிட்டோம்...."

 

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |