இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > அன்பு சேவுக - 5 > இ.ம.இ. ஒரு விடுதலை இயக்கமே - பகுதி 2
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

இ.ம.இ. ஒரு விடுதலை இயக்கமே - பகுதி 2

[குருதேவர் அறிக்கை 28இலிருந்து]

எனவே, நாம் இதுவரை மதத்துறையை இழித்தும் பழித்தும், சிதைத்தும் சீரழித்தும் வளவளர்ச்சியும் ஆட்சியும் பெற்றுச் சுகவாழ்வு வாழ்ந்து வந்த அனைத்துத் துறைகளையும் நேர்மையோடு நேரடியாக விமர்சித்து மதவிடுதலைக்கான போராட்டத்தைத் துவக்கியேயாக வேண்டும். இது ஓர் உலகந் தழுவிய போராட்டமாகவே வளர்ச்சி பெறும்! வளர்ச்சி பெறும்! வளர்ச்சி பெறும்! எனவே, உலக மதங்களனைத்துக்கும் மூலமாகவும், முதலாகவும், தாயாகவும், தலைமையாகவும், வழியாகவும், வழிகாட்டியாகவும், வழித்துணையாகவும், கருவூலமாகவும் இருப்பதுதான் சித்தர் நெறியெனும் நமது மெய்யான இந்து மதம் (The True Induism is the Mother of all the Religions on this hemisphere). எனவேதான் ஒரு தாய் தன்னுடைய சேய்களைக் காப்பற்றுவதுபோல் நாம்தான் உலக மதங்களனைத்தையும் நாத்திகர்களிடமிருந்தும் மத விரோத துரோகச் சத்திகளிடமிருந்தும் தன்னல வெறிபிடித்த மதப் போலிகளிடமிருந்தும், கூலிகளிடமிருந்தும், காலிகளிடமிருந்தும் காப்பாற்ற வேண்டும்! காப்பாற்ற வேண்டும்! காப்பாற்றவேண்டும்!

நண்ப! மத விரோத துரோகச் சத்திகளின் ஈனச் செயல்களால்தான் நாத்திகர்கள், பகுத்தறிவு வாதிகள், சீர்திருத்த வாதிகள் என்பவர்கள்; 'மதம் ஒரு மடமை'; 'மதம் ஒரு கற்பனை'; 'மதம் ஒரு கனவு'; 'மதம் முன்னேற்றத்துக் தடை'; 'மதம் பயனற்றது'; 'மதம் தேவையற்றது'; 'மதம் அறிவுக்குப் புறம்பானது'; 'மதம் புரியாத ஒன்று'; 'மதம்தான் முதலாளித்துவத்தை வளர்க்கின்றது'; 'மதம்தான் ஏழைகளை அடங்கியடுங்கி ஏழைகளாகவே இருக்கச் செய்கிறது'; 'மதம்தான் அடிமையுணர்வை வளர்க்கிறது'; 'மதம் மனநோயாளிகளை உருவாக்குகிறது'; 'மதம் கோழைகளை வளர்க்கிறது'; 'மதம் ஆபாசங்களை வளர்க்கிறது'; 'மதம் காட்டுமிராண்டித் தனங்களைக் காப்பாற்றுகிறது'; 'மதம் மக்களை மயக்கும் ஒரு மயக்கப் பொருள்'; 'மதம் சமுதாய விழிச்சிக்கும் எழிச்சிக்கும் தடையாக இருக்கிறது'; 'மதம் உருவாக்கும் மதவெறிகளால்தான் அரசியலிலும், சமுதாயத்திலும் அமைதியின்மை விளைகின்றன'; என்பன போன்ற எண்ணற்ற குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து மதத்தின் மீது சுமத்த முடிகிறது. இதனை நன்கு தெரிந்தும், ஆராய்ந்தறிந்தும்; முழுமையாக புரிந்தும், முறையாக உணர்ந்துமே ..... செயல்படப் புறப்பட்டிருப்பவர்கள் நாம் என்ற விழிப்புணர்வும், நம்பிக்கையுணர்வும் நம்மிடையே எப்போதும் பசுமையாக இருக்க வேண்டும். இருக்க வேண்டும், இருக்க வேண்டும். இப்பேருண்மைக்கேற்பவே நமது கருகுலத்திலும், குருகுலத்திலும், அருட்பணி விரிவாக்கத் திட்ட நிலையங்களிலும் ஆய்வுக் கூட்டங்களிலும்...... முறையான பயிற்சிகள் முழுமையாக வழங்கப் படுகின்றன, வழங்கப் படுகின்றன, வழங்கப் படுகின்றன, என்பதனை நம்மவர்களாவது நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, குருதேவராகிய யாம், நம்மவர்களையெல்லாம் மத விடுதலைப் போராட்டத்திற்காக மாவீரர்களாகத் தயாரிக்கிறோம் என்பதைப் புரிந்து கொல்ள வேண்டும். அப்பொழுதுதான் நமது நிறுவன நிருவாகக் கட்டமைப்புக்களிலும் நடவடிக்கைகளிலும் எமது நோக்கும் போக்கும் ஊக்கும் கண்டிப்பு மிக்கவைகளாக கடுகடுப்பும் சிடுசிடுப்பும் உடையவைகளாக ஈவு இரக்கமற்ற விமர்சனங்களை வழங்குபவைகளாக நெருப்பாறு ஓடுவது போல் இருப்பதனை அனைவரும் புரிந்து கொள்ள முடியும். இதற்கு தங்களைப் போன்ற முன்னணித் தளபதிகளும் வீரர்களும் (ஆண், பெண் இருபாலரும்) எமக்குதவி செய்ய வேண்டும். உற்ற துணையாக இருக்க வேண்டும்.

நண்ப! மதத்துறையில் வாழும் ஒரு சில தனிமனிதர்கள் சுயநலத்தாலோ, உலகியலினாலோ தவறுகளைச் செய்கிறார்கள். ஆனால், அரசியல், கலை, சமுதாயம், முதலிய துறைகளைச் சார்ந்தவர்கள் தவறுகளையும், குற்றங்களையும் செய்வதற்காகவே வாழுகிறார்கள். அதாவது, மதத்துறையில் நூற்றுக்கு ஒருவர் அல்லது இருவர்தான் தவறு செய்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அரசியல், கலை, சமுதாயம் முதலிய துறைகளில் தவறு செய்யாதவர்கள்தான் நூற்றுக்கு ஒருவர் இருவர் என்றிருக்கிறார்கள். இந்தப் பேருண்மையை ஆபாசப்படுத்தாமல், பிறர் மனம் புண்படாமல், தேவையற்ற ஆரவாரம் இல்லாமல்.... மிகமிக நயமாகவும், நாகரீகமாகவும் அனைவருக்கும் எடுத்துக் கூறியே நமது மத விடுதலைப் போராட்டப் படையை உருவாக்க வேண்டும், உருவாக்க வேண்டும், உருவாக்க வேண்டும். இதுவே எமது நிலை! நமது நிலை!

அன்பு
ஞாலகுரு சித்தர் கருவூறார்

 

« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

ஞானத் தேடல்

".. எல்லோருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் எளிதில் கிடைத்து விடும் என்று எதிர்பார்த்துப் பொதுநலத் தொண்டு ஆற்றிட இயலாது. தேவையில்லாமல் பிறரின் தலையீடும், காழ்ப்பும், போட்டியும், பொறாமையும், அறியாமையும் பொதுநலத் தொண்டர்களைத் திணறித் திக்குமுக்காடச் செய்திடும். அதிலும், எவரும் எளிதில் ஏட்டறிவாலோ, பட்டறிவாலோ தெரிந்து கொள்ள முடியாத பேருண்மைகள் நிறைந்த அருளுலகில் தொண்டாற்றுவது என்பது எளிதல்ல! ..."

"... எமது பணிகளுக்குரிய கொள்கை, செயல்திட்டம், குறிக்கோள் முதலியவைகளை எழுதியும், அச்சிட்டும், பேசியும், ஆயிரமாயிரம் இளைஞர் மூலம் செயலாக்கியும் கூடப் பிறரின் கேலியும், கிண்டலும், ஏளனமும், எதிர்ப்பும், ஒதுக்கலும், பதுக்கலும், நீக்கலும், இருட்டடிப்பும்தானே பரிசாகக் கிடைக்கின்றன! ..."

 

அருளோ அருள்

  "...யாம், இப்படிப்பட்ட அருளுலகில்தான் பாரம்பரியமாகப் பெற்ற அருளையும் பயிற்சிகளாலும் முயற்சிகளாலும்; கல்விக் கேள்வித் தொண்டுகளாலும், ... பெற்றிட்ட அருட்செல்வங்களையும் இப்புவிப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளுக்கு தலைமேல் தூக்கிச் சென்று கூடைக்காரி போல் 'அருளோ அருள்' என்று கூறி வாரிவாரி மலிவுவிலைக்கு வழங்கிப் பார்த்துவிட்டு; இந்தியத் துணைக் கண்டத்திலும் இதனைச் சார்ந்த நாடுகளிலும் உள்ளவர்களுக்கு தாங்கள் அறிய கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இனாமாகவே வழங்கிவிட்டோம்...."

 

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |