இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > ஆதிசங்கரர் தமிழரே!
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

ஆதிசங்கரர் தமிழரே!

காலடி ஆதிசங்கரன் ஒரு தமிழனே!

ஆதிசங்கராச்சாரியார் என்பவர்கள் பதினெண்சித்தர்களின் நெறிப்படி சத்தி வழிபாடு, கன்னிப்பூசை, தாய்வழிபாடு ... முதலிய பூசைகளைச் செய்பவர்களேயாவார்கள். இவர்களில் ஞானசித்தர்களும் தோன்றுவதுண்டு. இப்படித் தோன்றும் ‘ஞானசித்தர்கள்’ உலகியலுக்காகவாவது பெயரளவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதாவது, இல்லறத்தை ஏற்றவர்களாக இருக்க வேண்டும். அல்லது ‘கூடுவிட்டுக் கூடு’ பாய்ந்து வேறு உடல்களிலிருந்து பெண்ணின்பத்தைத் துய்த்து பதினெண்சித்தர்களின் மெய்யான இந்துமதத்துக்குரிய இல்லற வாழ்வை ஏற்றவர்களாக ஆக வேண்டும். மேற்படி நெறிப்படி தோன்றி செயல்பட்ட ‘காலடி ஆதிசங்கரன்’ தென்பாண்டித் தமிழனே.

ஆதிசங்கரர் தானே எழுதிய செளந்தர்யலகரியில் தம்மை ஒரு தமிழன் என்று குறிக்கின்றார். (இலகரி = இலாகிரி = மயக்கும் பொருள்).  செளந்தர்ய லகரியில் 75வது சூத்திரத்தில் “... தவஸ்தன்யமன்யே” என்று தொடங்கி “திராவிட சிசு ராஸ்வாத்ய தவயத் கவீனால் ப்ரெளடானா மஜனி கமனீயா கவயிதா” என்று முடிகிறது.

இச்சூத்திரத்திலிருந்து நாம் உணர வேண்டிய கருத்தாவது “மலைமகளே, உன்னுடைய பால் ஹ்ருதயத்திலிருந்து உதிர்த்த அமிர்த பிரவாகமோ! சரசுவதியே, பாலாகப் பெருகி வருகிறாளோ! கருணையுடன் நீ கொடுத்த பாலைப் பருகிய திராவிடக் குழந்தை சிறந்த கவிஞர்களுக்குள் உயர்ந்த கவியாக ஆனான்...” என்பதேயாகும்.

இதனுடைய உரைநூல் ஒன்று ‘திராவிட சிசு’ என்பதை காலடி ஆதிசங்கரரையே குறிக்கின்றது என்று கூறுகின்றது. மற்றபடி பல உரைகள் அச்சொல், கருணீக்க வேளாளர் குலத்துத் தோன்றிய ஆதிசங்கரரையும், திருஞானசம்பந்தரையும், இராமலிங்க அடிகளாரையும் குறிக்கும் என்கின்றன.

காலடி ஆதிசங்கரர் தாந்தரீக சித்தியாளனாகவும், மாந்தரீக வல்லியாகவும் விளங்கியதால் தம்மை ஆதரித்துப் போற்றிய பிறாமணர்களும், சமசுக்கிருத மொழியும் கருவறைக்குள், கோயில்களுக்குள் நுழைய வேண்டும் என்பதற்காக பல கோயில் தெய்வங்களைக் கட்டி அடக்கினார். அதனால், பிறாமணர்கள் அவரைப் போற்றி மகிழ்ந்து தங்களின் தலைவனாக ஏற்றனர். இன்று அவரைப் பிறாமணராகக் கூறி வருகின்றனர். இதனைக் கண்டிப்பதற்காகத்தான் சத்தி வழிபாட்டின் சாரமாக சமசுக்கிருத மொழியில் தாம் எழுதிய செளந்தரியலகரியில் 75வது சூத்திரத்தில் சமசுக்கிருத மொழிக்கே உரிய ‘திராவிட சிசு’ என்ற சொல்லால் தன்னை ஒரு தமிழன் என்று குறித்து வெளிப் படுத்துகின்றார். இதனைவிட பெரிய சான்று என்று வேறு என்ன வேண்டும்?

 

« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

ஆதிசங்கரர் குலம்

சீர்காழித் திருஞான சம்பந்தர் தந்தையான சிவபாத இருதயரின் வழிவந்த சிவாச்சாரியாரியாரான தமிழ் அந்தணர் சிவகுருவின் மகனே ஆதிசங்கரர்.

ஆதிசங்கரர் தமிழ்ச் சைவ கருணீக்க வேளாளர் குலக் கொழுந்தாய் பிறந்தவரே. ஆதிசங்கரர் தோன்றிய அதே கருணீக்க சைவ வேளாளர் மரபில், சிவபூசையில் தேறிய சிவாச்சாரியார் குடும்பத்தில் தோன்றிய வடலூர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர், அருட்கொடை வள்ளல், அருட்பா வழங்கிய பேரருளாளர், ஞானசித்தர் இராமலிங்க அடிகளார் என்பது குறிப்பிடத் தக்கது.

 

காஞ்சி மடம்

ஆதிசங்கரர் இந்தியாவில் நான்கு மடங்களே நிறுவினார் என்பது வரலாறு. இன்றும் கூட, இந்தியாவில் உள்ள (பூரி, காலடி, காசி...) நான்கு சங்கராச்சாரியார்களும் காஞ்சி சங்கராச்சாரியாரை ஏற்பதே இல்லை. தங்களில் ஒருவராகக் கருதுவதுமில்லை.

கும்பகோணத்தில் தோன்றிய சங்கர மடச் சத்திரத்தின் தொடர்புடைய 300 ஆண்டு வரலாறு கொண்டதே இன்றைய காஞ்சி சங்கரர் மடம். ஆதிசங்கரருக்கும் காஞ்சி மடத்துக்கும் தொடர்பு இல்லை. ஆதாரங்கள் உள்ளன.

 

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |