இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > தமிழர் மதம்
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

தமிழர் மதம்

“தமிழர் மதமே இந்துமதம்”

“இந்துமதத்தின் ஆறு சமயங்கள்” [ஆறு பதினெட்டுக்கள்]

1) இந்துமதச் சமயம் ஒவ்வொன்றும் பதினெண்சித்தர் வடிவாக, வாழ்வாக, அருளூறு இலக்கியங்கள் பதினெட்டினைப் பெற்றிருக்கிறது.

2) இந்துமதச் சமயங்களின் மொத்த இலக்கியங்களான நூற்றெட்டும் அழகிய பழகு தமிழ்ச் சொற்களால் ஆனவையே; எல்லாச் சொற்களும் பொருளாழமும் எளிமையும் இனிமையும் உடையவையே; எல்லாச் சொற்களும் இறையாற்றல் ஊற்றெடுப்பவையே.

3) இந்துமதச் சமயங்கள் ஆறுக்கும் உரிய இலக்கியங்களின் பெயர்கள் அழகான செந்தமிழ்ச் சொற்களால் ஆனவையே.

4) ‘இந்து’ என்ற சொல்லுக்கு ஆதிசிவனார் நாற்பத்தெட்டு அழகிய பைந்தமிழ்ச் சொற்களால் பொருள்விளக்கம் தருகின்றார். இந்து = விந்து, உயிரணு, உயிரின் கரு, உயிரின் ஆரம்பமும் முடிவும், அழகு, அன்பு, அமைதி, அருள், ஆதரவு, இல்லறம், இன்பம், இனிமை, இளமை, இரக்கம், இறைமை, ஈகை, உறவு, உரிமை, உய்வு, உயர்வு, உழைப்பு, ஊக்கம், எல்லா (கதிரவன், சூரியன், ஒளி), எளிமை, ஏற்றம், ஒலி, ஒளி, ஒற்றுமை, ஒருமைப்பாடு, ஓகம், ஓதி உணர்தல், பிறப்பிறப்பற்ற பெருநிலை, தவம், ஞானம், வலிமை, வளம், பற்று, பாசம், நேர்மை, வாய்மை, தூய்மை, மெய்மை, துய்ப்பு, பத்தி, சத்தி, சித்தி, நிலைப்பேறு.

5) பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் கி.மு.100 முதல் கி.பி.150 வரை செயல்பட்டவர். இவர் தமது குருபாரம்பரியத்தில்; 

“... இந்துமதம் 43,71,000ஆம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி முறையாகவும் நிறையாகவும் வாழ்ந்திருந்தும் கூடப் பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியரால் இரண்டாயிரமாண்டுக் காலக் குறுகிய எல்லைக்குள் மிகப்பெரிய சிதைவு, சீரழிவு, திருத்தம், மாற்றம், பயனற்ற பழக்க வழக்கம், அறியாமை மிகு சாத்திறச் சம்பிறதாயச் சடங்குகள், கண்மூடித்தனமான கற்பனைக் கதைகள், குழப்பவாதப் புராணங்கள், ... முதலியவற்றைப் பெற்றுவிட்டன. இன்றைக்கு எம் காலத்தில் ‘இந்து’ என்ற அமுத வண்டமிழ்ச் சொல்லுக்கு நூற்றுக்கு மேற்பட்ட அழகிய பொருள்விளக்கச் சொற்கள் அமைந்துவிட்டன. முன்பு, ஆதிசிவனாரே இந்தப் பதினெண்சித்தர்களின் ‘சித்தர்நெறி’ எனும் ‘சீவநெறி’யான (சீவநெறி --> சிவநெறி --> சைவநெறி --> சைவசமயம்) இந்துமதத்திற்கு நாற்பத்தெட்டு தீந்தமிழ்ச் சொற்களால் பொருள் வழங்கியுள்ளார்.
ஆனால், இன்றுள்ள நந்தமிழர்களே இந்துமதத்தைப் பிறாமணருடையது; சமசுக்கிருத மொழிக்குரியது என்று கருதியும் கூறியும் திரிகிறார்கள். இவற்றை மாற்றிடவே ‘இந்து மறுமலர்ச்சி இயக்கம்’ தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், ‘இந்து’ என்ற சொல்லையே தமிழர் ஏற்கத் தயங்குகின்றனர். எனவேதான், ‘தமிழின விடுதலை இயக்கம்’, ‘தமிழ்மொழி விடுதலை இயக்கம்’, ‘தமிழர் மத விடுதலை இயக்கம்’ ... முதலிய நாற்பத்தெட்டு நிறுவன நிர்வாகங்கள் தோற்றுவிக்கப் படுகின்றன ...” 

என்று எழுதுகிறார்.

6) இவற்றையெல்லாம் பல்வேறு கோணங்களில் தெளிவாக எடுத்தெடுத்து விளக்கிக் கூறி எழுதுகிறார் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் (கி.பி.785 முதல் கி.பி.1040). அப்படியவர் தமது ‘குருபாரம்பரியம்’, ‘இலக்கிய பாரம்பரியம்’, ‘அரசபாரம்பரியம்’ என்ற முப்பெரும் தொடர் வரலாற்று நூல்களால் உருவாக்கிய பிற்காலச் சோழப் பேரரசு கி.பி.785 முதல் கி.பி.1279 முடிய ‘தமிழினப் பேரரசாக’, ‘தமிழ்மொழிப் பேரரசாக’, ‘தமிழரின் இந்துமதப் பேரரசாக’ விளங்கிற்று.

7) இவற்றை எண்ணிப் பார்த்தாவது; இன்றைய தமிழர்கள் 'தங்களுடைய மதம்தான் இந்துமதம்’ என்ற பேருண்மையினை உணர்ந்து இதன் மறுமலர்ச்சிக்காகவும், வளவளர்ச்சிக்காகவும், ஆட்சிமீட்சிக்காகவும் பாடுபடல் வேண்டும். அதற்குத் தமிழின விடுதலையும், தமிழ்மொழி விடுதலையும் இருகண்ணாகிடும் என உணர்ந்து ‘தமிழினமொழி மத விடுதலை இயக்கம்’ வளரப் பாடுபடல் வேண்டும்.

8) தமிழர்கள் ‘தன்மானப் பிடிப்பு’, ‘இனமானப் பிடிப்பு’, ‘இன உணர்வுப் பிடிப்பு’, ‘இன ஒற்றுமை’, ‘இன ஒருமைப்பாடு’ ... முதலிய பண்புகளில் நலிந்து அடிமைப்பட்டுள்ள நிலைகளை மாற்றும் பகுத்தறிவுப் புரட்சிதான் (Rationalistic Revolution) ‘தமிழின விடுதலை இயக்கப் பணி’.

9) தமிழர்கள் ‘தாய்மொழிப்பற்று’, ‘தமிழ்மொழி உணர்வு’, ‘தமிழிலக்கிய ஆர்வம்’, ‘தமிழ்மொழியின் உரிமை வாழ்வு’, ‘தமிழ்மொழியின் அருமை பெருமை’ ... முதலியவைகளை மறந்தும் துறந்தும் வாழுகிறார்கள். இவர்களின் மறதியையும், துறவையும் மாற்றும் இலக்கியப் புரட்சி அல்லது கருத்துப் புரட்சிதான் (Literary Revolution or the Ideological Revolution) ‘தமிழ்மொழி விடுதலை இயக்கப் பணி’.

« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

காலடி ஆதிசங்கரர்

Adisankara wrong image
மேலே உள்ள படம் பொய்யான, தவறான, ஏமாற்றான படமே! ஆதிசங்கரர் தன் வாழ்நாளில் வெள்ளாடை அணிந்தே நீள்முடியோடும் தாடி மீசையோடும்தான் 32 வயது வரை உலகறிய வாழ்ந்தார். குருபாரம்பரியம் இவரை "வெள்ளாடை மேனியான், உச்சிக் குடுமியான், தென்பாண்டித் தமிழன், தமிழின் இந்துமதத்தைச் சமசுக்கிருத ஹிந்துமதமாக்கியோன்" என்றே குறிக்கின்றது.
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |