பதினெண்சித்தர்கள் என்று இன்று நாட்டு வழக்கில் கூறப்படும் பட்டியலைச் சேர்ந்தவர்கள் உண்மையில் 48 வகைச் சித்தர்கள் ஆவார்கள். இவர்கள் பதினெண்சித்தர்கள் அல்ல! அல்ல! அல்ல! அல்லவே அல்ல!
மூலப் பதினெண்சித்தர்கள் என்பவர்கள் இந்த மண்ணுலகத்திற்கு வேற்று அண்டங்களிலிருந்து இந்த உலகம் தோன்றிய காலத்தே வந்தவர்கள். அவர்கள் இந்த மண்ணுலக உயிரினங்களிலேயே உயர்ந்த மணீசரைப் பண்படுத்தி மனதை யுடைய மனிதர்களாக்கினார்கள். இதற்கு அவர்கள் பயன்படுத்திய மொழி இந்தப் பதினெண்சித்தர்களின் தாய்மொழியான தமிழ்மொழி. அதனாலேயே தமிழ்மொழி "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே மூத்த மொழி" என்று குறிப்பிடப் படுகின்றது.
இந்த மூலப் பதினெண்சித்தர்கள் மண்ணுலக மனிதர்களோடு உறவு பூண்டு நேரடி வாரிசுகளை உண்டாக்கினார்கள். "பதினெண்சித்தர்களின் வழிவந்தவர்களே பதினெண் வேளிர்கள்" என்றொரு முன்னோர் வாக்கு இதனையே குறிக்கின்றது.
இந்த வாரிசுகள் வழிவந்தவர்கள் காலப் போக்கில் அருளுலகப் பயிற்சி முயற்சிகளில் தேர்ச்சி பெற்று சித்தர்கள் நிலையை அடைந்திடுகின்றனர். அப்படி சித்தர் நிலையை அடைந்தவர்கள் 48 வகைச் சித்தர்களில் ஒருவராக அருளுலகத்தாரால் ஏற்றுக் கொள்ளப் பட்டனர்.
பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றிடும் பொழுதுதான் 48 வகைச் சித்தர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கேற்பக் கூறப்படும் கருத்துக்களையும் ஒருமுகப் படுத்தித் திருத்திப் பதினெண் சித்தர்களின் அண்டபேரண்டங்களை ஆளும் இந்துமதத்தின் மெய்யான, முறையான, முழுமையான வடிவமைப்புக்கள் உருவாக்கப்படும். எனவே, பதினெண் சித்தர் பீடாதிபதிகள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுடைய காலத்தில் உள்ள குறைகளுக்கும், முறைகேடுகளுக்கும், தவறுகளுக்கும், பிழைகளுக்கும், தேய்வுகளுக்கும், ஓய்வுகளுக்கும், திரிபுகளுக்கும், முறிவுகளுக்கும்.... உரிய பரிகாரங்களைச் செய்வதற்காகவே மீண்டும் குருபாரம்பரியமும், இலக்கிய பாரம்பரியமும், அரச பாரம்பரியமும், கருவாக்கியம், கருவாசகம், குருவாக்கியம், குருவாசகம், தருவாக்கியம், தருவாசகம், திருவாக்கியம், திருவாசகம், அருள்வாக்கியம், அருள்வாசகம், மருள் வாக்கியம், மருள் வாசகம்.... முதலிய பல வகைப்பட்ட இலக்கியங்களைப் படைத்து ஏட்டுலகப் புரட்சியைச் செய்கின்றனர்.
பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தங்கள் தங்கள் காலத்து மக்களுடைய அறிவு, ஆர்வம், ஆற்றல், உழுவலன்பு, உண்மை ஊக்கம், நம்பிக்கை, பத்தி, முயற்சி நிலை, பயிற்சி நிலை, .... முதலியவைகளுக்கேற்ப மக்களிடையே பலரைத் தேர்ந்தெடுத்து இட்டும், தொட்டும், சுட்டியும், அருள் வழங்கி சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், விருப்பாளர்கள், நம்பிக்கையாளர்கள், பதிலிகள், மகன்கள், மகள்கள், குருவழி வாரிசுகள், உரிமைச் சுற்றங்கள் .... எனப்படும் அருளுலக வாரிசுகளை உருவாக்கி நாட்டு நடப்பில் நாட்டுலகப் புரட்சியைச் செய்கிறார்கள்.
பதினெண் சித்தர்களின் நாட்டுலகப் புரட்சியைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், புரியாதவர்கள், நாத்திகர்கள், மதமறுப்பாளர்கள், மத வெறுப்பாளர்கள்... முதலியோர் பதினெண்சித்தர்கள் தோற்றுவித்ததுதான் இந்துமதம் என்ற பேருண்மையைத் தெரிந்து கொள்ள முடியாதவர்களாகவே ஆகி விடுகிறார்கள்.
எனவேதான், அவர்கள் பதினெண் சித்தர்களின் உண்மையான இந்துமதத்திற்குள் 48 வகைச் சித்தர்களின் கருத்துக்களை மோத விட்டு குழம்பித் தவிப்பார்கள். இந்த நிலையே இப்போது நம் நாட்டில் நிலவுகின்றது.