இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > இந்து வேத மாநாடு
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

இந்து வேத மாநாடு

1991, செப்டம்பர் 28,29 தேதிகளில் தஞ்சை திலகர் திடலில் நடைபெறும் 'இந்து வேத மாநாடு' குறித்த சிறு விளக்கம்!
இந்து வேதம் என்றால் என்ன?


இந்து என்ற ஒரே சொல்லுக்கு நேரிடையாகப் பொருள் கொள்ள ஆயிரக் கணக்கான சொற்கள் இருக்கின்றன. வேதம் என்ற சொல்லுக்கு   வேதித்தல், அதாவது சமைத்துப் பக்குவப்படுத்துதல் என்று பொருள்.

இந்த இந்து வேதம் இம்மண்ணுலகம் தோன்றுவதற்கு முன்னரே கணக்கற்ற கோடிகோடி ஆண்டுகளாக அண்டபேரண்டங்கள் முழுவதும் பரவி, வியாபித்து, வளர்ந்து வலிமை பெற்ற ஒன்றாகும்.

கடவுள்களாலேயே காலங்கள் தோறும் மக்களுக்கு நேரடியாகவே வழங்கப் படுவது இந்து வேதம்.

கடவுள்களில் தாங்களாகவே தோன்றுகின்ற கடவுள்கள் என்றும், அருளாற்றல் மிக்கவர்களால் தோற்றுவிக்கப்படும் கடவுள்கள் என்றும் இருபெரும் வகையினர் உண்டு என்று தெளிவாக விளக்கும் வேதம் இந்து வேதம்.

மனிதர்களை அடிக்கடி நேரில் வந்து பார்த்து பாதுகாத்து வழி நடத்துபவர்களே கடவுள்கள் என்று வலியுறுத்தும் வேதம் இந்து வேதம்.

பதினெண் சித்தர்களின் நான்கு வகையான அருளுரைகளுக்குள் அடங்குபவர்கள்தான் மெய்யான கடவுள்கள் என்று கூறும் வேதம் இந்து வேதம்.

எந்தெந்த நாட்டில், எந்தெந்த இனத்தவர்க்காக எந்தெந்த மொழியில் எந்தெந்த கடவுள் வேதத்தைக் கூறுகின்றாரோ, அந்தந்த கடவுளும், வேதமும், அந்தந்த நாட்டுக்கும், இனத்திற்கும், மொழிக்கும் மட்டுமே உரியன என்பதை இந்து வேதம் தெளிவாக விளக்குகின்றது.

இந்த இந்து வேதம் நமக்காக நமது தாய்மொழியான செந்தமிழ் மொழியில் அருளப்பட்டது.

ஆவி, ஆன்மா, ஆருயிர் என்ற மூன்றும் இணைந்து உருவாகும் சீவனின் வடிவமே இலிங்கம் என்பதை தெளிவாக விளக்குவது இந்து வேதம்.

பதினெண் சித்தர்களின் அருளுலகப் படைப்புகளில் ‘நான்மறை’, ‘நான்முறை’, ‘நானெறி’, ‘நான்வேதம்’ எனும் நான்கும் மிகமிக அடிப்படையான இலக்கியங்களாகும்.

இவற்றுள் ‘நான்வேதம்’ எனப்படுபவைதான், இருடிவேதம், அசுரவேதம், யாமவேதம் அல்லது சாமவேதம், அதர்வான வேதம் எனப்படுபவையாகும்.

இந்த இந்துவேத மதமான இந்து மதம் ஒன்றே எக்காலத்திலும்  நிலையானதாக உள்ளது. இந்த இந்து வேத மதமான இந்து மதம் எனும் ஆலமரத்தின் இலைகளாகவும், கிளைகளாகவும், விழுதுகளாகவும், சில துணை வேதங்கள் தோன்றினாலும், மிக விரைவில் அவை தாய்வேதமான இந்து வேதத்திலேயே ஐக்கியமாகி விடும் என்பதுதான் இந்து வேதத்தின் தெளிவான கருத்து.

இந்து வேத மதமான இந்துமதம், மற்ற எந்த அந்நிய மதத்தோடும் போட்டி, பொறாமைகளையோ, சண்டை சச்சரவுகளையோ வளர்த்துக் கொள்ள  விரும்பாததால் இம்மதத்திற்கு நலிவும் மெலிவும் தோன்றுவது இயற்கை ஆகி  விட்டது.

ஆகவேதான், பதினெண் சித்தர்கள் நான்கு யுகங்களிலும், வாழையடி வாழையென வந்த பதினெண் சித்தர்கள் மரபில் மட்டுமே பதினெண் சித்தர்  பீடாதிபதிகள் தோன்றி, தங்கள் வாய்ப்பு வசதிக்கேற்ப தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் பதினெண் சித்தர் மடத்தைத் தோற்றுவித்து இந்து வேதமதமான இந்துமதத்தை மறுமலர்ச்சி அடையச் செய்யும் எல்லா வகையான செயல்களையும் செய்யத் திட்டம் செய்துள்ளனர்.

பதினெண் சித்தர்கள்தாம் இந்த இந்து வேதத்தை அருளுலகப் பொருளுலக வாழ்வியலுக்குத் தேவையான அனைத்து வகைப்பட்ட செய்திகளையும், தனித்தனித் துறைகளாகப் பிரித்து மிகத் தெளிவாக அருளூறு செந்தமிழ்  மொழியில் வழங்கியுள்ளனர்.

இவற்றுக்குள் அடங்காத உணர்வுகளோ, எண்ணங்களோ, கருத்துக்களோ, செயல்களோ, செய்திகளோ ஏதுமே இல்லை.

இப்படிப்பட்ட இந்து வேதமதமான இந்து மதத்தின் மறுமலர்ச்சிக்காகவே பதினெண் சித்தர் மடம் தோற்றுவிக்கப்பட்டது.

பதினெண் சித்தர் மடத்தின் பதினோராவது பீடாதிபதியாக, இந்துமதத் தந்தை, அருளாட்சி நாயகம், ஞானாச்சாரியார், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் விளங்கினார்.

இவர் கி.பி. 785ஆம் ஆண்டில் இருந்து கி.பி.1040ஆம் ஆண்டு வரை இருநூற்று ஐம்பத்தாறு ஆண்டுகள் இம்மண்ணுலகில் செயல்பட்டு, பிற்கால சோழப் பேரரசை உருவாக்கியவர்.

பதினெண் சித்தர்களின் போதனைகளையும் சாதனைகளையும் அருளுரைகளையும், பாமரர்க்கும் விளங்கும் வண்ணம் பரவச் செய்து இந்து வேத மதமான இந்து மதத்தை மறுமலர்ச்சி அடையச் செய்தவர் அவர்.

இந்து வேதத்திற்குரிய 108 பூசைமொழி நூல்கள் 48 பூசைவிதி நூல்கள், 96 தத்துவ நூல்கள், 144 செயல் சித்தாந்த நூல்கள் என்னும் 4 வகையான நூல்களை செப்பேடுகளில் எழுதி உலகின் பல பகுதிகளில் நிலையாகப் பாதுகாக்க ஏற்பாடு செய்தார். இந்து மதத்திற்குரிய ஆறுவகைப்பட்ட வாக்குகள், ஆறுவகைப்பட்ட வாக்கியங்கள், ஆறுவகைப்பட்ட வாசகங்கள் எனும் 18 வகையான நூல்களையும் ஆறுவகைப்பட்ட தரங்கள், ஆறுவகைப்பட்ட திரங்கள், ஆறுவகைப்பட்ட திறங்கள் எனும் பதினெட்டு வகையான நூல்களையும் ஆக மொத்தம் 36 வகைப்பட்ட நூல்களையும் உலகின் பல பகுதிகளில் நிலையாகப் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்தார்.

காவிரியாற்றங்கரைக் கருவூறாரைத் தொடர்ந்து அவரது பாரம்பரியத்தில் வாழையடி வாழையாகத் தோன்றிய இந்து வேத பீடம், இந்துமதத் தந்தை, இந்துமதத் தலைமை ஆச்சாரிய குருபீடம், குருமகா சன்னிதானம், ஞானாச்சாரியார், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் பன்னிரண்டாவது  பதினெண்சித்தர் பீடாதிபதியும், இன்றைய பதினெண் சித்தர் மடாதிபதியும் கருகுல ஆதீனமுமாய் விளங்குகிறார்.

இவர் பதினெட்டு ஆண்டுகள் பயிற்சியிலும், பதினெட்டு ஆண்டுகள் முயற்சியிலும், பதினெட்டு ஆண்டுகள் இல்லறத்தையும் கடந்து இன்று இவ்வுலகம் முழுமைக்கும் பதினெண் சித்தர்களின் அருட்கொடைகளை வாரி வழங்கி வருகின்றார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அருட்பணி விரிவாக்கத் திட்ட மையங்களை உருவாக்கி அருட்பணிகள் செய்து வருகின்றார்.

பதினெண் சித்தர்களின் அருளுலகப் போதனைகளையும் சாதனைகளையும் பொருளுலக அறிவியல்களையும், கலைகளையும் உலகோர் முறையாகக் கற்றறிய பள்ளிகளையும், கல்லூரிகளையும், தனிப்பட்ட ஓர் பல்கலைக் கழகத்தையும் அமைத்திட இவர் அயராது உழைத்து வருகின்றார்.

மேலும் இன்றுவரை 1500க்கும் மேற்பட்ட அச்சிட்ட அறிக்கைகளை  வெளியிட்டதோடு, சிறிய பெரிய அளவில் சுமார் 100 புத்தகங்களையும்  வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்து இலக்கியக் கழகத்தின் மூலம், பதினெண் சித்தர்களின் அருளியல் கருத்துக்களின் மூலம்தான் உலகோரைத் தட்டி எழுப்ப முடியும் என்ற நிலையில் இந்து வேதத்தையும் சிறுசிறு பகுதிகளாக வெளியிட முடிவு செய்து, இந்தத் தஞ்சை மாநாட்டில் முதற்கட்டமாக ஓர் பகுதி சிறு நூலாக வெளியிடப்படுகின்றது.

அத்துடன் இதுபோன்று மாநாடுகளை தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடத்துவதன் மூலம் சாதி, மதம், மொழி, இனம், நாடு என்ற அடிப்படையில் உள்ள சகல சண்டை சச்சரவுகளையும் சகோதரத்துவ அடிப்படையில் தீர்க்க முயன்று வருகின்றார்.

பதினெண் சித்தர்களின் வழிபாட்டு முறையில், மனிதனும் கடவுள் நிலையை அடையலாம் என்று இந்து வேதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதால், சாதாரண மனிதனுக்கு உகந்தவை அனைத்தும் கடவுளுக்கும் உகந்தவைகளாகக் கருதப்படுகிறது.

சென்னை செங்குன்றம் அடுத்த காரணோடை எனும் கிராமத்தில் இவர் ஓர் கவின்மிகு கருகுலம் அமைத்துள்ளார். ஏற்கனவே, குருகுலம், திருகுலம், தருகுலம் என்று மூன்று அமைப்புக்களையும் உருவாக்கிய இவர் இந்த வழிபாட்டுத் தலத்தை கருகுலம் என்று அமைத்திருக்கிறார்.

பெரிய தோப்பு போன்ற அமைப்பில் உள்ள இவ்வாலயத்தில், உள்ளே நுழைந்தவுடன் சிவனும் சத்தியும் இணைந்த சத்தி வடிவம் இலிங்கமும் சூலமுமாகிய அம்மையப்பராக காட்சி அளிக்கிறது.

உள்ளே அற்புத மந்திர சத்தி படைத்த தாமரைக்குளமும், பிள்ளையார் வடிவமும் பல்வேறு யந்திர சத்திகள் பொறிக்கப்பட்ட 18 பீடங்களும் அமைந்துள்ளன.

இங்கு செல்லும் அனைவரும் நற்பேறு பெற்றவராவார்.

இவ்வாலயத்தில் சென்று வழிபடும் நலிவுற்றோர், நலமுற்றோராகவும்; நலமுற்றோர் வளமுற்றோர்களாகவும் மாறுவது கண்கூடு.

பொதுவாகவே இந்து வேதமதமான இந்து மதத்தில் முன்னோர் வழிபாடும் மூத்தோரை மதித்துப் போற்றிப் பணிந்து பேணிப் பாதுகாத்தலும் முதன்மையான நோக்கங்களாகும்.

இப்படி உயரிய, உலகின் அனைத்துப் பொருட்களையும் இந்துவேதத்தையும் உள்ளடக்கிய இந்துவேத மதமான இந்து மதம், அனாதி மதமான  அது இன்று அனாதை மதம் என்ற நிலையில் இருப்பதை மாற்ற வேண்டும் என்று உறுதி பூண்டும் இன்று இம்மாநாடு நடைபெறுகிறது.

இன்றைக்கு சப்பான் நாட்டில் அவர்கள் சகல கலைகளையும், வாழ்வியல் நெறிகளையும், தொழிற்கல்வி போன்ற அனைத்தையும் அவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே படித்து அறிகிறார்கள்.

ஆனால் முன்னை மிகப் பழமையான காலத்திலேயே இவை யனைத்தையும் நமது தாய்த்தமிழ் மொழியில் சித்தர்கள் நமக்கு வழங்கிச் சென்றிருந்தும் நாம் அவற்றை உணராமல் இருப்பதை மாற்றி அமைக்க வேண்டும்.

சித்தர்கள் முறையில் அனைத்துப் பொருட்களையும் செந்தமிழ் மொழியில் இவ்வுலகிற்கே எடுத்தியம்ப வேண்டும் என்பதுதான் இம்மாநாட்டின் உயரிய நோக்கமாகும்.

குறிப்பு:-

ஆலயங்களில் தொண்டு புரியும் குரு, குருக்கள், குருமார், பூசாறி, அருட்சினையாளர் போன்றோர் பதினெண் சித்தர் மடத்தை அணுகினால் தமிழிலேயே அவர்களுக்கு மந்திர, மந்தர, மந்திறப் பயிற்சிகள் அளிக்கப்படும். மந்தரிக்க கற்றுக் கொடுக்கப்படும். மந்தரிப்பதன் மூலம்தான் அருளை மருந்தாகவும் விருந்தாகவும் வழங்கி மக்களைக் காக்க முடியும். இப்படி மந்தரிக்கும் பயிற்சி அளிக்கும் இந்து வேத பாடசாலைகளை எல்லாக் கோயில்களிலும் துவங்கிடவும் பதினெண் சித்தர் மடத்தில் பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளார். அதற்காகவே இந்த இந்து வேத மாநாடு நடத்துகிறார்.

பதினெண் சித்தர் மடம், பீடம், கருகுலம்
காரணோடை, சென்னை - 600067.
« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

திருத்தோற்றங்கள்

“.... மானுடர்களில் தேவர்கள், தேவகுமாரர்கள், தேவதூதர்கள் பிறப்பெடுத்துத் தொண்டாற்றுவது பதினெண் சித்தர்களின் அருட்பணித் திட்டமே. பதினெண் சித்தர்களின் நேரடி விந்து வழி வாரிசுகளால்தான் ‘அறிவுரை’, ‘அருளுரை’, ‘அறிவார்ந்த அருளுரை’, ‘அருளார்ந்த அறிவுரை’ வழங்க முடியும்! முடியும்!! முடியும்!!! இவற்றின் பயனாகத்தான் இந்திய மண்ணில் அருளாளர்கள் வாழையடி வாழையாகத் தோன்றிச் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.  ....

[மேலும் படிக்கவும்...]

 

இந்துமதம்

"... மிகப் பெரிய நெடிய இடைவெளிக்குப் பிறகே ‘இந்து மதம்’ என்று வெளிநாட்டாரால் அழைக்கப் படும் இந்தியாவின் பூர்வீக மதமான “சித்தர் நெறி” உண்மை வடிவில் வெளியுலகுக்கு அறிமுகமாகிடும் நிலை ஏற்பட்டுள்ளது. “பிற + மண்ணிலிருந்து வந்தவர் = பிறமண்ணினர் = பிறாமணர் ≡ அன்னியர் = வெளிநாட்டவர் - “தங்களுடைய வேதநெறிகளைச் சித்தர் நெறிகளோடு கலந்து செயல்பட்டதால்தான்; இந்துமதம் தனது பேராற்றலை இழக்க நேரிட்டது. ..."

[மேலும் படிக்க...]

இலைமறை காய் நிலை

   "... இந்தியாவின் எண்பது கோடி மக்களுக்கும் இந்துமத வழியாகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாய அமைப்புத் திட்டத்தைச் செயலளவில் அறிமுகம் செய்யும் வரையிலாவது யாம் வானம்பாடியாக வாழ்ந்தே தீர வேண்டும். இறுதி வரையில் கூட இலைமறை காயாக வாழ்ந்தால்தான் இந்நாட்டில் பல தலைமுறைகளாக இருந்து வரும் கோழை நிலைகளையும், ஏழை நிலைகளையும், மோழை நிலைகளையும் முழுமையாக அகற்ற முடியுமென்றால், அப்படியே வாழத் தயாராகவும் இருக்கிறோம், ..."

[மேலும் படிக்க...>>]

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |