இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > இந்துமதம்
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

இந்துமதம்

இந்துமதம் பற்றிய குருபாரம்பரிய வாசகம்

 

[கி.மு 70இல் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள பசுபதி ஈசுவரர் ஆலயத்தைக் கட்டிய 10வது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் அவர்கள் பதினெண்சித்தர்களுடைய "சீவநெறி"யான "சித்தர் நெறி" எனும் இந்துமதத்தை ஏறத்தாழ நான்கு யுகங்கள் கடந்து மீண்டும் மக்களுக்குக் கருத்து விளக்கச் சுருக்க வாசகங்கள்; நீண்ட விரிவுரைகள்; கருவாக்கு, கருவாக்கியம், கருவாசகம், குருவாக்கு, குருவாக்கியம், குருவாசகம், தருவாக்கு, தருவாக்கியம், தருவாசகம், திருவாக்கு, திருவாக்கியம், திருவாசகம், அருள்வாக்கு, அருள்வாக்கியம், அருள்வாசகம், மருள்வாக்கு, மருள்வாக்கியம், மருள்வாசகம் எனும் 18 வகையான நூல்களின் மூலமும்; வாழையடி வாழயாக ஒவ்வொரு பீடாதிபதியும் மரபு வழியாகத் தொடர்ந்து எழுதும் குருபாரம்பரியம் எனும் மதவரலாற்று தொடர் நூலின் மூலமும் விளக்கங்கள் கொடுக்க ஆரம்பித்தார்]

"இந்துமதம் என்பது வெறும் வரலாறு மட்டுமல்ல! புராண இதிகாசங்கள் மட்டுமல்ல! கதைகளை மட்டும் கொண்டதல்ல! அற்புதங்களைச் செய்த சித்து விளையாடல் காரர்களால் உருவாக்கப்பட்டது அல்ல! மந்திர மாயங்களால் உருவாக்கப் பட்டது அல்ல! நரகத்தைக் காட்டி அச்சுறுத்தியும், சொர்க்கத்தைக் காட்டி இச்சுறுத்தியும் பிறந்ததல்ல! வளர்ந்ததல்ல! வாழ்ந்ததல்ல! புரியாத மொழிகளில் தெரியாதவைகளைக் கூறி மக்களைக் குருடராக்கிடும் பணியில் ஈடுபட்டதல்ல! மூடநம்பிக்கைகளையும், கண்மூடிப் பழக்கவழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டதல்ல! எந்தத் தனியொரு திருத்தோன்றலையோ (அவதாரங்கள்) அடிப்படையாகக் கொண்டதல்ல! எந்த ஒரு தனிப்பட்ட நூலாலும் அல்லது வேதத்தாலும் வாழ்வதல்ல! எந்த ஒரு தனிப்பட்ட கடவுளையோ, கோயிலையோ புகழ்ந்து வாழுவதல்ல! வளருவதல்ல! அது முழுக்க முழுக்க தத்துவ ஞானிகளையும், தத்துவங்களையும் (The philosophers and the Philosophies), சித்தாந்திகளையும், சித்தாந்தங்களையும் (The Theologists and the Theologies), வேதாந்திகளையும், வேதங்களையும், (The Vedics and the Vedas),    விஞ்ஞானிகளையும், விஞ்ஞானங்களையும் (The Scientists and the Sciences), கலைஞர்களையும், கலைகளையும் (The Artists and the Arts),  அருளாளர்களையும், அருள்துறைகளையும் (The Divinators and the Divine Fields), கோயில்களையும்,  கோயில் விஞ்ஞானங்களையும் (The Temples and the Temple Sciences), இவற்றிற் கெல்லாம் மேலாக கணக்கற்ற கோடிக் கணக்கான தேவர்கள், தேவியர்கள், தேவதைகள், கடவுள்கள், தெய்வங்கள், ஆண்டவர்கள், பட்டவர்கள், எல்லாக்கள், இயவுள்கள், இறைகள், ........ என்று பட்டியலிட முடியாத அருளுலகத்தவர்களையும் வகைவகையாகக் கொண்டு, 1359 அண்டபேரண்டங்களிலும் பரவி இருப்பதுதான் இந்துமதம்....... . அதாவது ஏட்டறிவின் மூலம் மட்டும் இந்துமதத்தை அறிந்து கொள்ள முடியாது, குருவழியாகப் பெறக்கூடிய பட்டறிவாலும், தானே பெறக் கூடிய பயிற்சிகளாலும்தான் இந்து மதத்தைப் படிப்படியாக உணர முடியும்! உணரமுடியும்!! உணரமுடியும்!!!"

இதுதான் 10வது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறாரின் குருபாரம்பரிய வாசகம்.

 

« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

திருத்தோற்றங்கள்

“.... மானுடர்களில் தேவர்கள், தேவகுமாரர்கள், தேவதூதர்கள் பிறப்பெடுத்துத் தொண்டாற்றுவது பதினெண் சித்தர்களின் அருட்பணித் திட்டமே. பதினெண் சித்தர்களின் நேரடி விந்து வழி வாரிசுகளால்தான் ‘அறிவுரை’, ‘அருளுரை’, ‘அறிவார்ந்த அருளுரை’, ‘அருளார்ந்த அறிவுரை’ வழங்க முடியும்! முடியும்!! முடியும்!!! இவற்றின் பயனாகத்தான் இந்திய மண்ணில் அருளாளர்கள் வாழையடி வாழையாகத் தோன்றிச் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.  ....

[மேலும் படிக்கவும்...]

 

இந்துமதம்

"... மிகப் பெரிய நெடிய இடைவெளிக்குப் பிறகே ‘இந்து மதம்’ என்று வெளிநாட்டாரால் அழைக்கப் படும் இந்தியாவின் பூர்வீக மதமான “சித்தர் நெறி” உண்மை வடிவில் வெளியுலகுக்கு அறிமுகமாகிடும் நிலை ஏற்பட்டுள்ளது. “பிற + மண்ணிலிருந்து வந்தவர் = பிறமண்ணினர் = பிறாமணர் ≡ அன்னியர் = வெளிநாட்டவர் - “தங்களுடைய வேதநெறிகளைச் சித்தர் நெறிகளோடு கலந்து செயல்பட்டதால்தான்; இந்துமதம் தனது பேராற்றலை இழக்க நேரிட்டது. ..."

[மேலும் படிக்க...]

இலைமறை காய் நிலை

   "... இந்தியாவின் எண்பது கோடி மக்களுக்கும் இந்துமத வழியாகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாய அமைப்புத் திட்டத்தைச் செயலளவில் அறிமுகம் செய்யும் வரையிலாவது யாம் வானம்பாடியாக வாழ்ந்தே தீர வேண்டும். இறுதி வரையில் கூட இலைமறை காயாக வாழ்ந்தால்தான் இந்நாட்டில் பல தலைமுறைகளாக இருந்து வரும் கோழை நிலைகளையும், ஏழை நிலைகளையும், மோழை நிலைகளையும் முழுமையாக அகற்ற முடியுமென்றால், அப்படியே வாழத் தயாராகவும் இருக்கிறோம், ..."

[மேலும் படிக்க...>>]

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |