இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > அருளுலகத்தார் ஒற்றுமை
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

அருளுலகத்தார் ஒற்றுமை

அருளுலகத்தார் ஒற்றுமைச் செழுச்சி அழைப்பு மடல்

செம்பியம்
23/5/85
சென்னை-11

அருள்மிகு அருட்சித்தர் சேலம் சாது அடிகளார் [காசித் தீர்த்தம் கிராமம், சாபராப்பேட்டை(PO), வேலூர் - 632006] அவர்கள் சமூகத்திற்கு அருளாட்சி அமைப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, அரசயோகி, குருதேவர், இ.ம.இ.யின் தலைவர், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறார் அவர்கள் 23/5/85இல் எழுதிக் கொள்ளும் அருளுலகத்தார் ஒற்றுமைச் செழிச்சி அழைப்பு மடல்.


1. ஆண்டுதோறும் அருளுலக விழிச்சிக்காகவும், எழுச்சிக்காகவும், செழுச்சிக்காகவும், மலர்ச்சிக்காகவும், ஒற்றுமைக்காகவும் வைகாசித் திங்கள் முழுநிலவு நாளில் கொண்டாடப் படும் ஞானம் வழங்கு பருவபூசைப் பெருவிழாவின் அழைப்பு அனைத்துலக அருளாளர்களுக்கும், அருள் நிலையங்களுக்கும் வேறுபாடின்றி அனுப்பப் படுகிறது. ஆனால், சாதி, மத, இன, மொழி, நாட்டு, வட்டார வேறுபாடுகளால் எமது முயற்சி சிறுகச் சிறுகத்தான் வளர்ச்சிப் பெற்று வருகிறது. பாதகமில்லை. ஆனால், நமது தமிழர்களே இன்னும் எம்மை உணரவில்லை என்ற வருத்தம் அளவுக்கு அதிகமாகி வருவதாலும் இந்த அஞ்சல் அருட் சித்தராகிய தங்களுக்கு எழுதுவதன் மூலம் அருளுலகத்தார்களுக்கு கையெழுத்துப் பிறதியாகவும், அச்சுப் பிறதியாகவும் அனுப்பும் பணி துவக்கப் படுகிறது.


2. யாம் தமிழனாகப் பிறந்து விட்ட காரணத்தால் எமக்குத் தமிழ்மொழி வெறியோ, இனவெறியோ, நாட்டு வெறியோ, பண்பாட்டு வெறியோ, மதவெறியோ ஏற்பட வில்லை! ஏற்பட வில்லை! ஏற்படவில்லை! ஏற்படவேயில்லை! இது முக்காலும் சத்தியமே! [சத்தி + இயம் = தமிழ்ச் சொல் 'இயல்' என்ற சொல் 'இயம்' என்று குறிக்கப்படுவது மரபே. பத்தி + இயல் = பத்தியியல் --> இது பத்தியம் என்று குறிக்கப்படுகிறது. இதுபோல்தான் முத்தியியல் --> முத்தியம் என்றும், சித்தியியல் --> சித்தியம் என்றும், உத்தியியல் --> உத்தியம் என்றும், எத்தியியல் --> எத்தியம் என்றும், ஏத்தியியல் --> ஏத்தியம் என்றும் ...... வழக்காற்றில் சித்தர்களின் நூல்களில் இருப்பதை இங்கு நினைவுபடுத்துகிறோம்.] ஆனால் இந்த மண்ணுலகின் முதல் மொழி, முதல் இனம், முதல் நாடு, முதல் சமுதாயம், முதல் மதம், முதல் பண்பாடு ...... என்பன எல்லாம் விண்வெளியில் இருந்து இம்மண்ணுலகிற்கு வந்த பதினெண் சித்தர்களின் வாழ்வியலையே அடிப்படையாகக் கொண்டதால்தான்; அப் பதினெண் சித்தர் பீடத்தின் நேரடியான, விந்துவழி வாரிசாக அருளாட்சி அரியணையில் அமர்ந்திருக்கும் யாம் உலக மானுட இன நலத்துக்காக, உலகச் சமத்துவத்தையும், சகோதரத் தத்துவத்தையும், பொதுவுடமையையும், கூட்டுடமையையும், ஆணவமற்ற அன்புடமையையும், எவ்வித ஏற்றத்தாழ்வுமற்ற குடும்ப வாழ்வியலையும்...... உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இப்பணிக்கு கருத்துத் தத்துவமாகவும், செயல் சித்தாந்தமாகவும், வரலாற்று முதுகெலும்பாகவும், இலக்கிய உயிர்நாடியாகவும் இருப்பவையெல்லாம் அண்டபேரண்டம் ஆளும் பதினெண் சித்தர்களின் தாய்மொழியான தெய்வீகத் தமிழ்மொழியையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. எனவேதான், தமிழ்மொழியை அருளாட்சியின் ஆயுதமாகவும், அருட்படையாகவும், போர் வியூகமாகவும் பயன்படுத்த வேண்டியவனாக இருக்கின்றேன். எனவே, எம்மிடம் மொழிவெறி என்னும் குறுகிய நோக்கும், போக்கும் இருப்பதாகக் குற்றம் சொல்லாமல், எமது பணியனைத்தும் நாற்றங்கால் பணியே! விதைப்பண்ணைப் பணியே! என்று தமிழர்களாவது புரிந்து விரும்பி எம்மை ஏற்று ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்ற கருத்தையே திருத்தமாக; உரைநடையில் அஞ்சல்களாகவும், கட்டுரைகளாகவும், சிறுசிறு நூல்களாகவும், சொற்பொழிவுகளாகவும் வெளியிட்டு வருகின்றோம் யாம். அவசர அவசியமாக தங்களைப் போன்று உலகியல் உணர்ந்த அருளாளர்களாவது எம்மோடு இணைதல் விரும்பத் தக்கது.


3. பெரியீர்! தமிழ் மொழிக்காக, இனத்துக்காக, நாட்டுக்காக, உருவான அரசுகள் அனைத்தும் தோற்றுப் போய்விட்டன. இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. அதேபோல், பிற்காலச் சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு (கி.பி.1279) தமிழ்மொழி, இனம், நாடு காக்க தமிழரின் மதமான உண்மையான இந்துமதம் [சிவ வழிபாட்டைக் கொண்ட சைவநெறி => இது மரக்கறி உணவு மட்டும் சாப்பிடுகின்ற சைவ உணவு வாதமல்ல. எந்நேரமும் குருதிப் பலியில் மகிழ்ந்து அருளாட்சி செய்யும் 48 வகையான வழிபடுநிலையினர் (கடவுள்கள்), 48 வகைச் சித்தர்கள், 48 வகைச் சித்தியாளர்கள், 48 வகைக் கருவறைகள், 48 வகை அருளாளர்கள், 48 வகை அருட்பட்டத்தார்கள் ...... முதலியவர்களைக் கொண்டு இம்மண்ணுலகில் 43,73,085 ஆண்டுகளுக்கு முன் பதினெண் சித்தர்களால் உருவாக்கப்பட்ட உண்மையான இந்துமதம். இது சீவநெறி -> சிவநெறி -> சைவ நெறி என்றழைக்கப் படுவதே மரபு] விழிச்சியும், எழுச்சியும், செழுச்சியும், மலர்ச்சியும், சமுதாய ஆட்சியும் பெற்றிட வேண்டும் என்பதற்காக இந்துமத மடங்கள், பீடங்கள், சன்னிதானங்கள், கோட்டங்கள், சாலைகள், குருகுலங்கள், தவப்பள்ளிகள், யோகமன்றுகள், ஞான இருக்கைகள், அருட்தவிசுகள் [தவுசுகள் = தவசிநிலையங்கள் = தவசிக் கருவறைகள் = இருடி, முனிவர், தரு, திரு, கரு, குரு ....... முதலியோர் அமளிகை பெறுமிடம்] ...... முதலியவை பதினெண் சித்தர்களின் விந்துவழி வாரிசுகளாலும், குருவழி வாரிசுகளாலும் உருவாக்கப்பட்டன! உருவாக்கப்பட்டன! உருவாக்கப்பட்டன! அதாவது, பதினெண்சித்தர் பீடாதிபதிகளைத் தவிர, பதினெண் சித்தர்களின் கருவழி வாரிசுகளோ, குருவழி வாரிசுகளோ, நேரடியாக அருளாட்சிப் பணியில் ஈடுபடாமல் இலைமறை காயாக இருந்துதான் செயல்பட வேண்டும் என்பதே குருபாரம்பரிய, குருவாசக, குருவாக்கிய, குருவாக்கு ஆணை.


4. பிற்காலச் சோழப் பேரரசுக்குப் பிறகு எல்லாவிதமான பொருள் வசதியோடும், ஆள் அம்புகளோடும், அருட்பணிக்காக அமர்த்தப்பட்ட பண்டார சன்னிதிகளும், தம்பிரான்களும், சன்னிதானங்களும், மடாதிபதிகளும், பீடாதிபதிகளும், நாயகங்களும் சுகபோகிகளாக, தன்னல வெறியர்களாக, சந்தர்ப்பவாதிகளாக, பெருமளவு சோம்பேறிகளாக, புதிய சிந்தனை இல்லாதவர்களாக, தேவையான ஏட்டறிவும், பட்டறிவும் தேடாதவர்களாக, அருட்பயிர் விளைவிக்கும் ஆற்றலற்றவர்களாக இலைமறைகாயாக இருக்கும் இந்துமதத்தின் உயிர்நாடியான, பதினெண் சித்தர்களின் பாரம்பரியங்களையும், படைப்புக்களையும் தேடிடும் ஆர்வமற்றவர்களாக, தங்களையே பெரிதென மதிக்கும் மாயைக்கும், அகம்பாவத்துக்கும் ஆணவத்துக்கும் இரையாகி விட்டவர்களாக உருவாகிவிட்டார்கள்! உருவாகிவிட்டார்கள்! உருவாகிவிட்டார்கள்! எனவேதான், பதினெண் சித்தர்களின் கருவழி வாரிசுகளும், குருவழி வாரிசுகளும் உருவாக்கிய இந்துமதக் காவலர்களான மடாதிபதிகளும், பீடாதிபதிகளும், மொழியையோ, இனத்தையோ, நாட்டையோ ஆணையிட்டுத் துணையாக இருந்து வழிகாட்டி விழிச்சியும், எழுச்சியும், செழிச்சியும், மலர்ச்சியும் ஆக்க முடியாமல் போய்விட்டது. இன்னும் சொல்லப் போனால், தமிழர்களின் தலைவர்களாக, குருதேவர்களாக, அரசர்களாக வாழ வேண்டிய மேற்படி மடாதிபதிகளும், பீடாதிபதிகளும் மிகச் சாதாரண அரசியல்வாதிகளிடமும், அற்பப் புலமையுடையவர்களிடமும், கலையுலகக் கோமாளிகளிடமும், முரட்டு மூடர்களிடமும் அஞ்சி, கெஞ்சி, கைகட்டி ஒளிந்து, மறைந்து, கும்பிட்டுக் கூலிகொடுத்து, காவடிதூக்கி, காணிக்கை செலுத்தி, கைகட்டிச் சேவகம் செய்யும் இழிநிலை, பழிநிலை, அழிநிலை, ஒழிநிலை உருவாகிவிட்டது! உருவாகிவிட்டது! உருவாகிவிட்டது! இது வெட்கப் படத்தக்கது, சோதனை மிக்கது. இம்மாபெரும் சிக்கல்நிலைகளை, தேக்க நிலைகளை, வீக்க நிலைகளை, ஏக்க நிலைகளை, முடக்க நிலைகளை, அடக்க நிலைகளை, ஒடுக்க நிலைகளை உடனடியாகத் தடுக்க என்னென்ன செய்வது? அவற்றை எப்படியெப்படிச் செய்வது? யார் யார் மூலம் செய்வது? எந்தெந்த துறை வழியாகச் செய்வது? என்ற எண்ணங்களால் கொந்தளிக்கும் கடலென, ஊழிப் பெருவெள்ளமென, எரிமலைச் சிதறலென....... வாழுகிறோம் யாம்! இதனைத் தங்களைப் போன்ற அருளாளர்களாவது புரிந்து கொண்டால் நல்லது. யாம், எமது 18 ஆண்டு பயிற்சிக் காலம் கழித்து 18 ஆண்டு முயற்சிக் காலத்தில் முழு நிர்வாணியாக, முக்கால் நிர்வாணியாக, அரை நிர்வாணியாக, நினைவு இறந்த நிலையிலும், நினைவு மறந்த நிலையிலும், நினைவு துறந்த நிலையிலும் வாழ்ந்த கடலோடிக் காடோடி நாடோடி வாழ்வில் இட்டும் தொட்டும் சுட்டியும் உருவாக்கிய அருளாளர்களில் தாங்களும் ஒருவர் என்பதால்தான் உரிமையோடு தங்களைக் கண்டித்துச் செயல்படுத்த முயலுகிறோம் யாம். இதைப் புரிந்தும், புரிய வைத்தும், உணர்ந்து, உணரவைத்தும் செயல்படுக! செயல்படுக! செயல்படுக!


5. பெரியீர்! யாம் விளைவித்த அருட்பயிர் தாங்கள். எனவே, தாங்கள் வேலியில்லாத பயிராகி ஆடுமாடுகளாலும், திருடர்களாலும் அழிக்கப் பட்டுவிடக் கூடாது. நீங்கள், எப்பொழுதும் செழிப்பாகவே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தங்களுக்கு விழிப்பூட்டி வருகின்றோம்! புரிந்து விரும்பி ஏற்றுச் செயல்படுக! செயல்படுக! செயல்படுக!


6. ஐயா! "கண்டது படித்தவன் பண்டிதனாவான்" என்ற மூதுரைப்படி யார் யாரோவெல்லாம் நாட்டில் மதத்தின் பெயரால் பெரும்புகழும், பொருளும், சுகசக வாழ்வும் பெற்று வாழ்கிறார்கள். தாங்களோ மிகமிகக் கடுமையாக உழைத்து அருட்சித்தராகி யிருக்கிறீர்கள். உங்களுடைய உழைப்பு ஏதோ வயிற்றுப் பிழைப்பிற்காக வாழும் சாதாரணச் சாமியாரின் வாழ்க்கை போல் ஆகிவிடக் கூடாது. அதாவது, உதிரிப் பூவாக இல்லாமல், மாலையிலோ, சரத்திலோ கட்டப்பட்டு வடிவையும், வடிவமைப்பையும், பயனையும் பெற்றிடக் கூடிய அருள்நிலையினைத் தாங்கள் பெற்றேயாக வேண்டும். தங்களுடைய அருளாற்றல் வாய்க்கால் வெட்டப்படாமல் கேணியிலிருந்து இறைத்து விடப்படும் நீர்போல் நாலாபக்கமும் சிதைந்து உரிய, பெரிய பயன்களை விளைவிக்க முடியாமல் போய்விட்டது வருந்தத் தக்கது! வருந்தத் தக்கது! வருந்தத் தக்கது! அன்புகூர்ந்து தாங்கள் தங்களுடைய அருள்வளம், பொருள்வளம், பிற வசதிவாய்ப்புக்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் முதலியனவற்றை அருளாட்சித் திட்டத்தின் நிறைவுப் பணிக்கு உரியதாக்கினால் அருளுலக வரலாற்றிலும், பொருளுலக வரலாற்றிலும், மொழி, இன, நாட்டு வீர வரலாற்றிலும் நிலைத்த பெயரும், புகழும் பெறுவீர்கள்! பெறுவீர்கள்! பெறுவீர்கள்! புரிந்தும் புரிய வைத்தும் செயல்படுக!


7. அருட்பணியாற்றும் அருட்சித்தரே! இன்றைய இந்து மதத்தில் உள்ள சித்து விளையாடல் காரர்களும், சித்தியாளர்களும், சாமியார்களும், பிற அருளாளர்களும் தனித்து தங்களுக்கென்று பேரும் புகழும் திருக்கூட்டமும் நிறுவனமும் குறிப்பிட்ட நிர்வாகமும் இருந்தால் போதும் என்றே செயல்படுகிறார்கள். ஏறத்தாழ யாருக்குமே இந்துமதத்தின் வரலாற்றைப் பற்றியோ, கருத்துத் தத்துவத்தைப் பற்றியோ, நடைமுறைக் கொள்கை பற்றியோ, செயல் சித்தாந்தம் பற்றியோ, வாழ்வியல் குறிக்கோள் பற்றியோ, சமுதாய இயல் நெறி பற்றியோ அறிவே இல்லை; அறிவைப் பெறும் அக்கறையோ, ஆக்கமோ இல்லை. எனவேதான், இன்றுள்ள மிகப்பெரிய அருளாளனால் கூட இந்துமதத்துக்கோ, இந்துக்களுக்கோ முறையான தேவையான பயனுள்ள நன்மைகள் ஏற்படவேயில்லை! ஏற்படவேயில்லை! ஏற்படவே-யில்லை! இதனை, இந்து மதத்தில் உள்ள மிகச் சிறந்த பத்தர்களும், இந்துமத மேதைகளும், இந்துமத அறிஞர்களும், இந்துமதக் கலைஞர்களும், இந்துமதத் தலைவர்களும் ...... எள்முனையளவு கூட உணரவில்லை! உணரவில்லை! உணரவில்லை! புரியவில்லை! புரியவில்லை! புரியவில்லை! இம்மாபெரும் குறைகளையும், கறைகளையும் ஓரளாவாவது குறைக்க வேண்டும் என்ற நிறைமன முயற்சியே எமது முயற்சி; ஏனெனில், இன்றைக்கு நமது மதத்திலும், சமுதாயத்திலும், இலக்கியத்திலும், கலையிலும், தொழிலிலும், அங்காடி வாணிகத்திலும், அரசியலிலும், அரசு அலுவலக அமைப்புக்களிலும் ........ தமிழ் உணர்வு, தமிழ் இன உணர்வு, தமிழ் நாட்டுணர்வு என்ற முக்கோண பீடத்தின் நாயகமாக இருக்கும் இந்துமதத்தைப் பற்றிய அறிவோ, அக்கறையோ, ஆர்வமோ, நம்பிக்கையோ, விருப்பமோ, ஈடுபாடோ ........ இல்லாத நிலையே வலிமையாக இருக்கிறது. அதாவது, எல்லாத் துறைகளிலுமே அன்னியர்கள்தான் ஆட்சி செய்கிறார்கள், மாட்சிமை பெற்று விளங்குகிறார்கள்; இவை பற்றித் தமிழர்களைச் சிந்திக்க முடியாதபடி 'குலைக்கின்ற நாய்க்கு ரொட்டித் துண்டு போடுவது போல்' தமிழர்களிலேயே கூலிகளையும், காலிகளையும், கருங்காலிகளையும் உருவாக்கித் தமிழினத்துக்கும், தமிழ்மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும் துரோகிகளாகச் செயல்படும்படி அன்னியர்கள் திறமையாகச் செயல்பட்டு வருகிறார்கள். தமிழன் தொண்டனாக இருந்தாலும் சரி, தலைவனாக இருந்தாலும் சரி, முதலாளியாக இருந்தாலும் சரி, கூலிக்காரனாக இருந்தாலும் சரி, அன்னியர்களிடம் புகழ், பட்டம், பதவி, சலுகை, உதவி, கூலி, பரிசு, கையூட்டு (இலஞ்சம்) ....... முதலியவைகளைப் பெற்றுக் கொண்டு அன்னியர்களிடம் நன்றியும், விசுவாசமும், உண்மையும், பணிவும் உடைய அடிமைகளாக, எடுபிடிகளாக, சேவகர்களாக, கங்காணிகளாக, காவடிகளாக, காவலர்களாக வாழ்ந்து இனத்தையும், மொழியையும், நாட்டையும் காட்டிக் கொடுத்தும், கூட்டிக் கொடுத்தும் செயல்படும் துரோகிகளாகத்தான் வாழுகிறார்கள்! துரோகிகளாகத்தான் வாழுகிறார்கள்! துரோகிகளாகத்தான் வாழுகிறார்கள்! அதாவது, தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அனைத்துப் பொறுப்புகளிலும் அன்னியர்களே கூட்டம் கூட்டமாக, கட்டுப்பாடாக, ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதனை அசைக்கவோ, திருத்தவோ யார் முற்பட்டாலும், மேற்படி அன்னியர்கள் தங்களுடைய ஆதிக்க மாளிகையின் வாசல்களிலே, அப்பாவித் தமிழினக் கூலிகளைக் காவலர்களாக நிறுத்தியிருக்கிறார்கள். இந்தக் காவலர்கள் தன்மான உணர்வோ, இனமான உணர்வோ, மொழி உணர்வோ, நாட்டுணர்வோ இல்லாமல் அன்னியர்களைப் பாதுகாக்கத் தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் இழித்தும் பழித்தும் அழித்து ஒழித்திடத் தயாராய் இருக்கிறார்கள். எனவே, முதலில் தமிழினத் துரோகிகளாக வாழும் அப்பாவித் தமிழர்களைத் திருத்துகின்ற மாபெரும் பணி நன்கு திட்டமிடப் பட்டு மிகமிகத் திட்பமாகவும், நுட்பமாகவும் நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும். .. .. .. அரசியல் கட்சிகளின் பெயராலும், மதங்களின் பெயராலும் பிறமண்ணினரான பிறாமணர்களின் இந்துமதத் தலைமைகளாலும், இந்துமதத்தையே சத்தியிழக்கச் செய்த சமசுக்கிருத மொழியின் அடிமைகளாலும், பிறாமண மாயையில் சிக்கிக் கிடக்கும் அப்பாவித் தமிழர்களாலும், அன்னியர்களின் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டுவிட்ட தமிழினத் துரோகிகளாலும் .. .. .. நமது தமிழினம் சிதைந்து, சின்னாபின்னப்பட்டு, பிரிந்து, வேறுபட்டு, முரண்பட்டு, ஒற்றுமை அற்ற பல்வேறு தனிக் கும்பல்களாக, கூட்டங்களாக இருக்கின்றது! இருக்கின்றது! இருக்கின்றது! இந்தப் பெரிய சீர்குலைவை, ஆபத்தான பாழ்நிலையை, வீழ்நிலையை உணராமல் தமிழினத்தைக் காக்க முயலுபவர்கள் யாராக இருந்தாலும் இடிந்து விழும் பாழடைந்த அரண்மனைக்குள் அடிபட்டு மடிபவர் போல் ஆகிவிடுவார்கள்! மடிபவர் போல் ஆகிவிடுவார்கள்! மடிபவர் போல் ஆகிவிடுவார்கள்! எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை! எனவேதான், யாம், எமது கருத்துக்களைப் பொதுவான முறையிலும், நிதானமான முறையிலும், சமாதான முறையிலும் எடுத்துக் கூறி வருகிறோம். எதிலும் வேகமோ, வெறியோ இல்லை! அதாவது, எம் காலத்தில் கருத்துப் புரட்சி ஏற்பட்டால் போதும்; அதன் பிறகு தேவைக்கேற்ப எப்பொழுதாவது செயல்புரட்சி விளையட்டும்! விளையட்டும்! விளையட்டும்! எனவேதான், எம்மோடு வந்து சேருபவர்களைப் பற்றியோ, எம்மிடமிருந்து விலகுபவர்களைப் பற்றியோ அதிகம் கவலைப் படாமல் அனைத்தும் தாத்தாக்கள், ஆத்தாக்கள் செயல் என்று பொறுமையோடு செயல்படுகிறோம், யாம்! ஆனால், வெறுமையோடு செயல்படவில்லை யாம். இவற்றைப் புரிந்தும் புரியவைத்தும் செயல்படுக.


8. ஐயா! மதவாதிகளிடையேயும், மத அருளாளர்களிடையேயும், மதத் தலைவர்களிடை யேயும், மத இயக்கத்தார்களிடையேயும் ஒற்றுமையில்லாத காரணத்தினால்தான், போலிச் சாமியார்கள், போலி மதவாதிகள் .. .. என்று அனைத்து வகையான போலிகளும், காலிகளும், கூலிகளும், கருங்காலிகளும், எள்ளி நகையாடி ஏசியும் பேசியும் எழுதி வருகிறார்கள். உண்மையிலேயே, அரசியல்வாதிகளில், கலை உலகவாதிகளில், இலக்கிய வாதிகளில், சமுதாயச் சீர்திருத்த வாதிகளில், வியாபாரிகளில், முதலாளிகளில், தொழிலாளர் தலைவர்களில், சமுதாயத் தலைவர்களில்.. .. .. எண்ணற்ற போலிகள், ஊழல் பேர்வழிகள், கள்ளச் சந்தைக்காரர்கள், திருடர்கள், கற்பழிப்புக் காரர்கள், கடத்தல் காரர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை, ஏளனம் செய்வதில்லை. ஆனால், மதவாதிகளை மட்டும் மிக எளிதாக வாய் கூசாமல், மனநடுக்கமோ, சிந்தை தடுமாற்றமோ இல்லாமல், போலிச் சாமியார் என்று குறை கூறிக் குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம், தமிழ் மொழியில் பூசை செய்யும் தமிழர்களான மடாதிபதிகளும், பீடாதிபதிகளும், தம்பிரான்களும், இந்துமதத் தலைவர்களும் மதிக்கப் படாமல் சமசுக்கிருத மொழியில் பூசையினைச் செய்யும் சங்கராச்சாரியார்களையே இந்துமதத் தலைவர்களாக நினைப்பதுதான் காரணம். பச்சையாகச் சொல்லப் போனால் எந்த மடத்துச் சங்கராச்சாரியாராவது அல்லது எந்த பிறாமணச் சாமியாராவது இதுவரைப் "போலிச் சாமியார்" என்று கிண்டல் செய்யப்பட்டதுண்டா? குறை கூறிக் குற்றம் சாட்டப் பட்டதுண்டா? இதுபற்றி எந்தத் தமிழனாவது சிந்தித்ததுண்டா?! அதாவது, எல்லாத் தமிழனுமே சுயநல வெறியில் இனமானத்தையும், மொழி உரிமையையும், நாட்டுப் பெருமையையும், அன்னியரிடம் அடகு வைப்பவர்களாகவும், காட்டிக் கொடுத்துக் கூலி பெறும் துரோகிகளாகவும் இருக்கிறார்கள். இப்படித் தன்னுணர்வற்ற, தன்மான உணர்வற்ற, தன்னம்பிக்கையற்ற, இனப்பற்றற்ற, இனஒற்றுமையற்ற, மொழிப் பற்றற்ற, மொழி விழிப்புணர்ச்சி அற்ற, நாட்டுரிமையுணர்வற்ற, மதப் பிடிப்பற்ற, தமிழர்கள்தான்; ஏராளமாக ஏமாளி நிலையில், அப்பாவி நிலையில் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம், நன்கு தர்க்க ரீதியாக, இலக்கிய ரீதியாக, வரலாற்று ரீதியாக, போதிய அளவு செய்திகளையும், விளக்கங்களையும் தெரிந்தவர்களாக்கி விழிச்சியும், எழுச்சியும், செழிச்சியும், மலர்ச்சியும், வளர்ச்சியும் அடைந்திடச் செய்ய வேண்டும். அதன்பிறகுதான், விரோதிகளை எப்படிச் சமாளிப்பது, சந்தித்துப் போராடுவது, போராட்ட முடிவில் என்னென்ன செய்வது என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். இவ்வளவு பெரிய நிதானமான, முறையான, முற்போக்கான, நாடு தழுவிய, அறிவு வளர்ச்சிக்கும், உணர்வு விழிச்சிக்கும் கருத்து வளர்ச்சிப் பணி அருளாளர்களால்தான் செய்ய முடியும். ஆன்மீகவாதிகளால்தான் செய்ய முடியும். மதவாதிகளால்தான் செய்ய முடியும். எனவே, அன்பு கூர்ந்து அருளாளர்கள், ஆன்மீகவாதிகள், மதவாதிகள் எனப்படுவோரின் ஒற்றுமைக்காக பாடுபடக் கூடிய நல்ல சூழ்நிலைகள் வளர்க்கப் பாடுபடுவோமாக! பாடுபடுவோமாக! பாடுபடுவோமாக!


9. ஐயா! இந்த நாட்டு மக்களிடம் தன்னம்பிக்கை மட்டும் குறைந்து போகவில்லை. பொருளுலக வாழ்க்கை பற்றிய புற நம்பிக்கையும் முழுக்கக் கெட்டுவிட்டது; நசித்து மெலிந்துவிட்டது. இவற்றிற்கெல்லாம் மேலாக, குடும்ப வாழ்வில் ஒருவருக்கு ஒருவர் இருந்திட வேண்டிய பற்றும், பாசமும், உறுதியும், பிடிப்பும், அன்பும், உறவும், நம்பிக்கையும், உரிமையும், உதவலும், ஒருவரையருவர் சார்ந்திருப்பதும்.. .. .. நலிந்து மெலிந்து சிதைந்து சீரழிந்து விட்டன. எனவே, ஒவ்வொரு தனி மனிதரும் தங்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி மிகுதியாகக் கவலைப்படவும், அச்சப்படவும், பேராசையால் அலைபாயவும், நிலையற்றதாக எண்ணிடவுமாக இருக்கின்றது. அதாவது, யாருமே, யாரையும் நம்பாமல் தங்களால் முடிந்தவரை, தங்களுக்கென்று சொத்துக்களையும், சொந்தங்களையும் உருவாக்கிக் கொள்ள துடிதுடிக்கிறார்கள். எவருக்குமே எதிலுமே உண்மையான நம்பிக்கையோ, விருப்பமோ, ஈடுபாடோ இல்லை! இல்லை! இல்லை! இல்லவே இல்லை! எனவேதான், நாட்டில் குற்றங்களும், குறைகளும், துரோகங்களும், விரோதங்களும், நோய்நிலைகளும், பேய்நிலைகளும் வளர்ந்து கொண்டே போகின்றன. எங்கும் எதிலும் முழுமையில்லை. பதட்டமும், அரைவேக்காட்டு நிலையுமே அதிகமாக உள்ளன. இவற்றின் விலைவாக பெரும்பாலான நடுத்தர வயதினரும், இளைஞர்களும், யார் சம்பளம் கொடுத்தாலும் சரி அல்லது கூலி கொடுத்தாலும் சரி, அல்லது பரிசு என்ற பெயரால் இலஞ்சம் கொடுத்தாலும் சரி, அதற்கு ஏற்றபடி எத்தகைய ஈனமான செயலாக இருந்தாலும் நிறைவேற்றத் தயாராகவே இருக்கின்றார்கள். இதனால், இத்திரு நாட்டைப் பொறுத்தவரை மனித வாழ்வில் புனிதத் தன்மைகளும், இனிமைகளும், கனிவுகளும், அழகுகளும், நளினமெலினங்களும், மென்மை நுண்மைகளும், திண்மை ஒண்மைகளும்.. .. .. ஏறத்தாழ முழுமையாகச் சிதைந்து காட்டு மிராண்டித்தனமான வெறிநிறைந்த பேராசை மிகுந்த மிருக வாழ்க்கைதான் தலைவிரித்தாடுகிறது. இவற்றை எண்ணிப் பார்ப்போர் யாருமேயில்லை. அனைத்துத் துறைத் தலைவர்களும், தொண்டர்களும் அன்றாடம் கிடைக்கக் கூடிய பதவிக்கும், புகழுக்கும், பொருளுக்கும் .. .. .. ஆசைப்பட்டு தன்னல வெறியில் அலைந்து திரிபவர்களாகவே இருக்கிறார்கள். இந்த, இக்கட்டான, இழிவான, சோதனையான காலக்கட்டத்தில்தான்; நாம் செயலாற்றப் புறப்பட்டிருக்கிறோம். நமக்கு, மிகமிக நன்றாகத் தெரிகிறது, மதத்துறையின் மூலம்தான்; ஆன்மீகத் கருத்துக்களின் மூலம்தான், அருட் சிந்தனைகளின் மூலம்தான் இந்தச் சமுதாயத்தைச் செப்பனிட முடியும்! செப்பனிட முடியும்! செப்பனிட முடியும்! செப்பனிட முடியும்!


10. அருட்சித்தர் அவர்களே! இந்த நாட்டில் உள்ள கல்வியின் நிலைதான் இன்றுள்ள அனைத்துக் குறைகளுக்கும், கறைகளுக்கும் காரணம். அதாவது, கல்வி நிலையங்கள் அனைத்தும் ஏறத்தாழ அன்னியர்களின் கைகளிலே இருக்கின்றன. கல்வித் திட்டத்திலும், அன்னிய மொழிகளின் ஆதிக்கங்களே மிகுதியாக இருக்கின்றன. பாடத்திட்டங்களும், மாணவர்களின் வயதுக்கு மீறிய பெருஞ்சுமையாக இருக்கின்றன. இவற்றால், மாணவர்கள் சிந்தனை ஆற்றல் அற்றவர்களாக, சொன்னதைச் செய்யும் எடுபிடிகளாக, கூலிவேலை தேடித் திரியும் அடிமைமனம் படைத்தவர்களாக, எந்தவித உரிமை உணர்வோ, பெருமை உணர்வோ, தன்னம்பிக்கை உணர்வோ, துணிச்சலோ, வீரமோ .. .. .. இல்லாத அப்பாவிகளாக, கோழைகளாக, அடிமைகளாக வாழத்தகுதி படைத்தவர்களாகத்தான் உருவாகுகிறார்கள். எனவே, வருங்காலம் கோழைகளின் தாயகமாகவே, நம் நாடு மாற நேரிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. நம் நாட்டின், அனைத்துத் துறைகளிலும், அன்னியர்களே ஆட்சி புரிகிறார்கள். நம்மவர்கள் அவர்களிடம் கைகட்டிச் சேவகம் செய்பவர்களாகவே இருந்திடுவார்கள்! இருந்திடுவார்கள்! இருந்திடுவார்கள்! அதாவது, கல்விச் சாலையில் பயின்ற அனைவருமே கூலிகளாக, காலிகளாக, போலிகளாக, அன்னியருக்கு வேலிகளாக வாழ்ந்திடுவார்களே தவிர தன்மானமோ, தன்னுரிமையோ, தன்னம்பிக்கையோ, இனமானமோ, இன ஒற்றுமையோ, இன உரிமையோ, பண்பாட்டுப் பிடிப்போ, பாரம்பரியப் பெருமையோ, வரலாற்றுப் பெருமிதமோ, நாட்டுப் பற்றோ, நாட்டுணர்வோ முழுக்க முழுக்க இல்லாத.. .. கூலிக்கார மனம் படைத்தவர்களாகத்தான் இருப்பார்கள். எனவே, அஞ்சி அஞ்சிச் சாகும் கோழைகளையும், கெஞ்சிக் கெஞ்சிப் பிச்சை எடுக்கும் பிச்சைக் காரர்களையும்; அடங்கி ஒடுங்கி அடிமைகளாகவே வாழும் கோழைகளையுமே உருவாக்கும் இன்றைய கல்வித் திட்டங்களையும், கல்விச் சாலைகளையும் முழுமையாக அடியோடு மாற்றித் திருத்தி அமைத்தே ஆக வேண்டும். அதாவது, மெய்ஞ்ஞானச் சூழலில், விஞ்ஞானக் கல்வியைப் போதிக்க வேண்டும். 18 வயது வரை தூய உயர்தனிச் செம்மொழியில்தான் அனைத்து வகையான கல்விகளும் கற்பிக்கப்பட வேண்டும் என்ற குருபாரம்பரியச் செய்தியை செயலாக்க வேண்டும். எனவே, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் பிற மொழியைக் கற்பதோ, பிறமொழி வழியில் பிற கலைகளைக் கற்பதோ அனுமதிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழ் நாகரீகம், தமிழ் வரலாறு, தமிழ் வாழ்வியல், தமிழ் மதம், தமிழினம், தமிழ்க்கலை, தமிழ்நாடு.. .. .. என்ற சொற்களையெல்லாம் பொருளுடையவைகளாகவும், பொருத்தமானவையாகவும் இருந்திடும்! இருந்திடும்! இருந்திடும்! அப்பொழுதுதான் தமிழர்கள் உலக மதங்களுக்கு மூலமாகவும், முதலாகவும், ஆரம்பமாகவும், கருவாகவும், தாயாகவும் இருக்கின்ற இந்து மதத்தின் மூலவர்கள் ஆவார்கள். கருவறை நாயகங்களாவார்கள், காவலர்களாவார்கள். அத்தகைய பொற்காலத்தையும் நற்காலத்தையும் உருவாக்க இந்து மறுமலர்ச்சி இயக்கம் செயலாக்கப் புறப்பட்டு விட்டது! இதனைப் புரிந்தும், புரியவைத்தும் தங்களைப் போன்றவர்கள் எங்களோடு ஒத்துழைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து எமது அஞ்சலை நிறைவு செய்கிறோம் யாம். இந்த அஞ்சல் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு விடுக்கப் படும் அருளார்ந்த அறிவுரை, அறிவார்ந்த அருளுரை, அறிவுரை, அருளுரை என்ற நான்கு வகையான இலக்கியத் தகுதிகளையும் பெறுகிறது. தங்களின் பொருட்டு இந்த நெடிய அஞ்சல் பிறந்திருப்பதால், தாங்கள் வரலாற்றுப் புகழைப் பெறுகிறீர்கள். இந்த அஞ்சலை விரைவில் அச்சிட்டுச் சிறிய நூலாக நாடெங்கும் அனுப்புங்கள். உங்களுடைய வாழ்வில் இதைவிட மிகப் பெரிய சாதனை வே¦றான்றும் இருக்கவே முடியாது! முடியாது! முடியாது! முடியவே முடியாது!

 

ஓம் திருச்சிற்றம்பலம்

 

அன்பு

இந்துமதத்தந்தை, ஞானாச்சாரியார், அரசயோகி,
பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி,
குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறார்
24/5/85 
 
 
« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

திருத்தோற்றங்கள்

“.... மானுடர்களில் தேவர்கள், தேவகுமாரர்கள், தேவதூதர்கள் பிறப்பெடுத்துத் தொண்டாற்றுவது பதினெண் சித்தர்களின் அருட்பணித் திட்டமே. பதினெண் சித்தர்களின் நேரடி விந்து வழி வாரிசுகளால்தான் ‘அறிவுரை’, ‘அருளுரை’, ‘அறிவார்ந்த அருளுரை’, ‘அருளார்ந்த அறிவுரை’ வழங்க முடியும்! முடியும்!! முடியும்!!! இவற்றின் பயனாகத்தான் இந்திய மண்ணில் அருளாளர்கள் வாழையடி வாழையாகத் தோன்றிச் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.  ....

[மேலும் படிக்கவும்...]

 

இந்துமதம்

"... மிகப் பெரிய நெடிய இடைவெளிக்குப் பிறகே ‘இந்து மதம்’ என்று வெளிநாட்டாரால் அழைக்கப் படும் இந்தியாவின் பூர்வீக மதமான “சித்தர் நெறி” உண்மை வடிவில் வெளியுலகுக்கு அறிமுகமாகிடும் நிலை ஏற்பட்டுள்ளது. “பிற + மண்ணிலிருந்து வந்தவர் = பிறமண்ணினர் = பிறாமணர் ≡ அன்னியர் = வெளிநாட்டவர் - “தங்களுடைய வேதநெறிகளைச் சித்தர் நெறிகளோடு கலந்து செயல்பட்டதால்தான்; இந்துமதம் தனது பேராற்றலை இழக்க நேரிட்டது. ..."

[மேலும் படிக்க...]

இலைமறை காய் நிலை

   "... இந்தியாவின் எண்பது கோடி மக்களுக்கும் இந்துமத வழியாகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாய அமைப்புத் திட்டத்தைச் செயலளவில் அறிமுகம் செய்யும் வரையிலாவது யாம் வானம்பாடியாக வாழ்ந்தே தீர வேண்டும். இறுதி வரையில் கூட இலைமறை காயாக வாழ்ந்தால்தான் இந்நாட்டில் பல தலைமுறைகளாக இருந்து வரும் கோழை நிலைகளையும், ஏழை நிலைகளையும், மோழை நிலைகளையும் முழுமையாக அகற்ற முடியுமென்றால், அப்படியே வாழத் தயாராகவும் இருக்கிறோம், ..."

[மேலும் படிக்க...>>]

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |