இம்மண்ணுலகில் பதினெண் சித்தர்களின் மெய்யான இந்து மதம் தவிரத் தோன்றக் கூடிய மதங்கள் அனைத்துமே அம்மதத்தின் மூலவர்களுடைய அருட்செயல்களையும், வாழ்வியலில் வெளிப்பட்ட அற்புதங்களையும், அவர்களைப் புரிந்து கொள்ளாத மக்களால் அவர்கள் அடைந்த தொல்லைகளையும், துன்பங்களையும், அவர்களை முழுமையாக ஏற்றுக் கொண்ட அடியவர்களின் முயற்சி வரலாறுகளையும் அடிப்படையாகக் கொண்டவைதான்.
ஆனால், இம்மண்ணுலகின் அருளுலகுக்கும், அனைத்து வகையான தத்துவங்களுக்கும், செயல் சித்தாந்தங்களுக்கும், ஐந்து வகையான ஞானங்களுக்கும், மத வாழ்வியல்களுக்கும் தோற்றுவாயாக, மூலமாக, கருவாக, தாயாக இருக்கக் கூடிய பதினெண் சித்தர்களுடைய மெய்யான இந்துமதம் முழுக்க முழுக்கப் பூசாமொழிகளாலும், பூசாவிதிகளாலும், கருத்துக்களாலும், செய்திகளாலும், செயல் நிலை விளக்கங்களாலும் உருவான ஒன்றாகும்.
அதனால்தான், பதினெண்சித்தர்களுடைய மெய்யான இந்துமதம் தனக்கென கடவுளர் நாடாகத் தமிழர் நாட்டையும், என்றென்றும் அருளாளர்கள் தோன்றிக் கொண்டே இருக்கக் கூடிய தெய்வீக இனமான தமிழினத்தையும் எதையும் கடவுளாக மாற்றக் கூடிய வல்லமை பெற்ற அருளூறு அமுதச் செந்தமிழ் மொழியையும் பெற்றிருக்கிறது. இவற்றால்தான், பதினெண் சித்தர்களுடைய மெய்யான இந்துமதம் மட்டும் அண்ட பேரண்டங்கள் முழுதும் உள்ள அனைத்தையும் பற்றிய எல்லா விதமான வினாக்களுக்கும் விடை தரக் கூடிய ஒப்புயர்வற்ற கருத்து விளக்கத் தத்துவத்தையும், செயல்நிலை விளக்கச் சித்தாந்தத்தையும் பெற்றுத் திகழுகிறது.
எனவேதான், இந்த இந்து மதத்தின் மூலவர்களாகவும், காவலர்களாகவும் இருக்கின்ற தமிழர்கள் ஒன்றுதிரண்டு ஒற்றுமைப்பட்டு ஒருமித்த கருத்தோடு செயல்பட்டிட்டால்தான் உலகெங்குமே ‘இன விடுதலை’, ‘மொழி விடுதலை’, ‘மத விடுதலை’, ‘பண்பாட்டு விடுதலை’, ‘நாகரீக விடுதலை’, ‘தனிமனித விடுதலை’, .... முதலிய விடுதலைகளை விழிப்போடும், செழிப்போடும், கொழுமையோடும் நிலையாக இருக்குமாறு செய்ய முடியும். அதற்காகவாவது தமிழர்கள் தங்களுடைய இன மொழி மத விடுதலை முதலிய தத்துவத்தை, செயல் சித்தாந்தத்தைத் தங்களுடைய வாழ்வின் கொள்கையாகவும், குறிக்கோளாகவும் கொள்ள வேண்டும். அதற்கு ஞானாச்சாரியாரின் போதனைகளும், சாதனைகளும் பேருதவி புரிந்திடும்.
எனவே, மக்கள் ஞானாச்சாரியார்களுக்கோ அல்லது இந்து மதத்தின் செயல்நிலைகளுக்கோ, செயல் நிலையங்களுக்கோ ஆடம்பரமான மிகப் பெரிய பெரிய விழாக்களை கொண்டாடுவதில் பயனில்லை. அதற்கு நான்கு யுகங்களாக வாழ்ந்து வரும் பதினெண் சித்தர்களுடைய அண்ட பேரண்டமாளும் மெய்யான இந்து மதம் பற்றிய ஏட்டறிவுகளையும், பட்டறிவுகளையும் பரப்பிடும் பணியில் ஈடுபட வேண்டும். இம்மாபெரும் பணியில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் இன்றைய பதினெண் சித்தர் மடம், பீடம், கருகுலம் தமிழர்களுடைய ஞானப் பள்ளியாக, குருபீடமாக, ஆச்சாரிய மடமாக ஏற்றுப் போற்றிப் பேணிப் பயன்படுத்தப் படல் வேண்டும்.
இதற்காக தமிழினமே விழிச்சி பெறு, நான்கு யுகமாக இருந்து வரும் உன்னுடைய மெய்யான இந்துமதத்திற்கு அன்னியர்களால் உருவாக்கப் பட்டுவிட்ட போலிநிலைகளையும், கேலிநிலைகளையும் அகற்றி விட்டு உண்மையை உணர முயற்சி செய். பயிற்சி பெறு. ஞானாச்சாரியார்கள் வழங்கும் அருட ்செல்வங்களை இனியாவது முறையாகப் பயன்படுத்திச் செழிச்சி பெறு, உயர்ச்சி பெறு, ஞானாச்சாரியாரின் தத்துவத் தலைமை ஏற்றிடு, சித்தாந்த வழிநடத்தலைக் கடைபிடித்திடு. உலகம் உய்ய, பொருளுலக அருளுலக இருளகற்ற அருளாட்சி அமைப்புப் பணியில் ஈடுபட்டிடு.
பதினெண் சித்தர் மடம் பீடம் கருகுலம்.
பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும், இம் மண்ணுலகுக்கு வழங்கிய அண்டபேரண்டமாளும் இந்து மதத்தில், 'ஞானாச்சாரியார்' எனப்படுபவர்கள் பதினெண்சித்தர் பீடாதிபதிகளே. இந்த ஞானாச்சாரியார்களே இம்மண்ணுலகின் 'ஞானம்', 'அகஞானம்', 'புறஞானம்', 'விஞ்ஞானம்', 'மெய்ஞ்ஞானம்' எனும் ஐந்தினையும் மனிதரின் ஐம்புலன்களின் மருந்தாகவும், விருந்தாகவும் வழங்கியவர்கள்..... [மேலும் படிக்க...]
"... தமிழ் மொழி, இனம், நாட்டைக் காப்பதற்குத்தான் 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் கருவறைக் கோபுரமுடைய கோயிலை தஞ்சையில் கட்டினார். மிகவும் கடினமான இம்மாபெரும் செயலைச் செய்தது மட்டுமல்லாமல், கருவறைக் கோபுரத்தை உடைய கோயிலை எப்படி கட்டுவது என்ற இரகசியத்தையும், பதினெட்டு வகை அருட்கலைகளையும், ஐந்திறப் பூசை முறைகளையும், அருளுலக வாழ்வுக்குரிய சாத்தர, சாத்திற, சாத்திர, தோத்தர, தோத்திர, தோத்திறங்கள் எனப்படும் பதினெட்டு வகையான அருளுலக இலக்கியங்களையும், மற்றவற்றையும் மனந்திறந்து பலருக்கும் கற்றுக் கொடுத்தார். ..... [மேலும் படிக்க...]
"மூன்று உகங்களாகச் செழிச்சி மிக்க மதவாழ்வைத் துய்த்திட்ட நம் தமிழர்கள் தங்களுக்கென்று குரு, தங்கள் குடும்பத்திற்கென்று குருக்கல், பூசாறி, தங்களுடைய ஆன்மீக வாழ்வுக்கென்று ஆச்சாரியார், குருபீடம்,... இருந்து வருவதைத் தெரிந்திருந்தும் தேடி நாடிச் சென்று பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவேதான், இவர்களுடைய அகவாழ்விலும், புறவாழ்விலும் தன்னம்பிக்கையோ, துணிவோ, கட்டுக்கோப்போ, நிறுவன நிருவாக இணைப்போ, பிணைப்போ, அருளுலக வழிகாட்டலோ, வழித்துணையோ இல்லாமல் போய்விட்டது. எனவேதான், மாற்றாரும், வேற்றாரும் தங்கள் தங்களின் விருப்பம் போல் வேலியில்லாப் பயிரை மேயும் ஆடுமாடுகளைப் போல் செயல்படுகிறார்கள். ....."