.... இன்றைய நிலையில், நம் தாயகத்து மக்கள் யவன மதம், சோனக மதம், சீன மதம், புத்த மதம், சமண மதம், வேத மதம், .... என்று பல மதங்களிலும் பேரார்வத்தோடு முழுமையாக மூழ்கி விட்டார்கள். இதனால், நமது தாயகத்து மக்களுக்குத் தாங்கள் தமிழர்கள், தங்களுடைய மொழி தமிழ் மொழி, தங்களுடைய நாடு தமிழ் நாடு, தங்களுடைய அகப் பண்பாடும், புற நாகரிகமும் தமிழினத்திற்கே உரியது ... என்ற நம்பிக்கையோ, பற்றோ, பாசமோ, பெருமித உணர்வோ, உரிமையுணர்வோ ஏறத்தாழ இல்லாமலேயே போய்விட்டது.
எனவேதான், அன்னியர்கள் பலர் நமது கடவுளர் வாழும் தமிழ் நாட்டுக்குள்ளேயே அவரவர் திறமைக்கேற்ப மாளிகைகளையும், கோட்டை கொத்தளங்களையும் அமைத்துக் கொண்டு தனித்தனி அரசுகளை நிகழ்த்துகிறார்கள். நம் தாயகத்து மக்களில் யார் யார் எந்தெந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்களோ! அதற்கேற்ப அந்த மதத்துக்குரிய நாட்டையும் மொழியையும் இனத்தையும் பண்பாட்டையும் நாகரீகத்தையும் அப்படியே தங்களுடையவைகளாக ஏற்றுக் கொண்டிட்டார்கள். அதனால்தான், தமிழர்கள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து அன்னியர்களிடம் அடிமைகளாக ஆகி விட்டார்கள்.
இன்னும் சொல்லப் போனால், அன்னியர்களிடம் அடிமைகளாகி விட்ட நம் மக்கள் அந்த அன்னியர்களுக்காக சண்டை சச்சரவுகளைச் செய்யவும், போர்க்களம் போகவும் ஆரம்பித்து விட்டார்கள். எனவேதான், தமிழின மொழி மத விடுதலையையும், பதினெண்சித்தர்களின் சித்தர் நெறி எனும் சீவ நெறியான இந்து மதத்தையும் இம்மண்ணுலகு முழுதும் காத்து வந்த அருட்பேரரசான பாண்டியப் பேரரசு தமிழ்ச் சங்கத்தோடும், சங்கம் வளர்த்த புலவர்களோடும், புரவலர்களோடும், மதுரை மாநகரோடு அழித்து எரித்துச் சாம்பலாக்கி விட்ட பிறகு பல நூற்றாண்டுகளாகியும் மீண்டும் தமிழர்களைக் காக்கக் கூடிய அருட்பேரரசு உருவாகவே இல்லை. தமிழர்களையும் ஒன்று திரட்டி ஒற்றுமைப் படுத்தி அருட்பேரரசு உருவாக்க நாயன்மார்களும் ஆழ்வார்களும் எடுத்த முயற்சி வெற்றி பெறவேயில்லை. அதனால்தான், தமிழர்களும் இவர்களுக்குரிய அனைத்தும் அன்னியர்களின் வேட்டைப் பொருள்களாகி விட்டன. தமிழ்நாடும் பிணக்காடாக சுடுகாடாக இருக்கக் கூடிய அவலநிலை உருவாகி விட்டது.
இந்தச் சிதைவுகளையும், சீரழிவுகளையும் சரி செய்வதற்காக ஞானாச்சாரியார் பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் அவர்கள் தோற்றுவித்த இந்து மறுமலர்ச்சி இயக்கத்தையும், தமிழின மொழி மத விடுதலை இயக்கத்தையும், அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் மூலம் செயலாக்கப் புறப்பட்டோம். இவற்றால்தான், இம் மண்ணுலகில் என்றென்றும் அருளாட்சியை நிலைநிறுத்தக் கூடிய "விண்ணுயர்ந்த கருவறைக் கோபுரமுடைய தஞ்சைப் பெரிய உடையார் கோயிலும்" இம்மண்ணுலகெங்கும் வெற்றிக் கொடி நாட்டி வரும் இந்துமத அருட்பேரரசான சூரிய குல சோழப் பேரரசும் உருவாக முடிந்தன.
இவற்றால், குமரி முதல் இமயம் வரை கற்கோயில்களும், சொற்கோயில்களும் கணக்கற்று உருவாக முடிந்தன. இவை அருளுலகின் மூலவர்களாகவும், காவலர்களாகவும், வாரிசுகளாகவும் தோற்றுவிக்கப் பட்டுள்ள தமிழர்களின் கண்ணுக்கும், எண்ணத்திற்கும் விருந்தாகவோ, அல்லது மருந்தாகவோ பயன்பட்டால் கூடப் போதும்! இம்மண்ணுலகு முழுதும் அருளாட்சியை உருவாக்கும் பணியை இத் தமிழர்களால் செய்திட முடியும். அதனால், இம்மண்ணுலகு முழுதும் மக்களிடையில் இன விடுதலை, மொழி விடுதலை, மத விடுதலை முதலியவைகள் மூலம் சமாதானம், நிறைவு, ஒற்றுமை, அமைதி, அன்பு, சமத்துவம், பற்று, பாசம், கனிவு, .... முதலிய பண்புகள் அனைத்தும் விழிச்சி மிக்க செழிச்சி பெற்று ஆட்சி நிலையில் இருந்திடும்.
அதுதான், உண்மையான அருளாட்சிக்குப் பயனாகும். இதுதான் அருளாட்சித் தத்துவம்; இதுதான் பதினெண் சித்தர்களுடைய இந்து மதத்தின் சீவநெறி, உயிரோட்டமான அடிப்படைத் தத்துவமும், சித்தாந்தமும் ஆகும். இத் தத்துவத்தையும், சித்தாந்தத்தையும் ஏட்டளவில் பரப்பவும், நாட்டளவில் செயலாக்கிடவும்தான் தன்னம்பிக்கையும், தன்மானப் பிடிப்பும், தமிழின மொழி மத விடுதலை உணர்வும் உடையவர்களைத் தேர்ந்தெடுத்து சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள் எனும் முத்தரத்தார்களையும் தயாரித்து அருட்பணி விரிவாக்கத் திட்டத்தைச் செயலாக்கி வருகிறோம்.
பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் இந்த அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் மூலம்தான் 48 வகையான அருட்பட்டத்தவர்களை, அருளாளர்களைத் தோற்றுவித்து மனிதரைப் பக்குவப்படுத்தி நலப்படுத்திப் படிப்படியாகக் கடவுளாக்கும் அருளூற்றுக்களைச் செப்பனிட்டுப் பாதுகாக்கும் பணியைச் செய்தார். இப்பணியே காலங்கள் தோறும் தோன்றும் ஞானாச்சாரியார்களால் பதினெண் சித்தர் மடத்தின் மூலம் ஆற்றப் படுகிறது. எனவே, தமிழர்கள் தங்களுடைய ஞானாச்சாரியாரையும், பதினெண் சித்தர் மடத்தையும் முழுமையாகப் புரிந்து செயல்பட்டிட வேண்டும். அப்பொழுதுதான், உலக அளவில் எல்லா வகையான வெறிகளும் நெறிப் படுத்தப்பட்டு மனித வாழ்வு இனிமை நிறை புனித வாழ்வாகிடும்......."
---- தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் குருபாரம்பரிய வாசகம்.
தமிழர்கள் தங்களுடைய குருபீடமான பதினெண் சித்தர் மடத்தோடு தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
ஞானாச்சாரியார், இந்து மதத் தந்தை, குவலய குருபீடம், தத்துவ நாயகம், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்.
பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும், இம் மண்ணுலகுக்கு வழங்கிய அண்டபேரண்டமாளும் இந்து மதத்தில், 'ஞானாச்சாரியார்' எனப்படுபவர்கள் பதினெண்சித்தர் பீடாதிபதிகளே. இந்த ஞானாச்சாரியார்களே இம்மண்ணுலகின் 'ஞானம்', 'அகஞானம்', 'புறஞானம்', 'விஞ்ஞானம்', 'மெய்ஞ்ஞானம்' எனும் ஐந்தினையும் மனிதரின் ஐம்புலன்களின் மருந்தாகவும், விருந்தாகவும் வழங்கியவர்கள்..... [மேலும் படிக்க...]
"... தமிழ் மொழி, இனம், நாட்டைக் காப்பதற்குத்தான் 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் கருவறைக் கோபுரமுடைய கோயிலை தஞ்சையில் கட்டினார். மிகவும் கடினமான இம்மாபெரும் செயலைச் செய்தது மட்டுமல்லாமல், கருவறைக் கோபுரத்தை உடைய கோயிலை எப்படி கட்டுவது என்ற இரகசியத்தையும், பதினெட்டு வகை அருட்கலைகளையும், ஐந்திறப் பூசை முறைகளையும், அருளுலக வாழ்வுக்குரிய சாத்தர, சாத்திற, சாத்திர, தோத்தர, தோத்திர, தோத்திறங்கள் எனப்படும் பதினெட்டு வகையான அருளுலக இலக்கியங்களையும், மற்றவற்றையும் மனந்திறந்து பலருக்கும் கற்றுக் கொடுத்தார். ..... [மேலும் படிக்க...]
"மூன்று உகங்களாகச் செழிச்சி மிக்க மதவாழ்வைத் துய்த்திட்ட நம் தமிழர்கள் தங்களுக்கென்று குரு, தங்கள் குடும்பத்திற்கென்று குருக்கல், பூசாறி, தங்களுடைய ஆன்மீக வாழ்வுக்கென்று ஆச்சாரியார், குருபீடம்,... இருந்து வருவதைத் தெரிந்திருந்தும் தேடி நாடிச் சென்று பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவேதான், இவர்களுடைய அகவாழ்விலும், புறவாழ்விலும் தன்னம்பிக்கையோ, துணிவோ, கட்டுக்கோப்போ, நிறுவன நிருவாக இணைப்போ, பிணைப்போ, அருளுலக வழிகாட்டலோ, வழித்துணையோ இல்லாமல் போய்விட்டது. எனவேதான், மாற்றாரும், வேற்றாரும் தங்கள் தங்களின் விருப்பம் போல் வேலியில்லாப் பயிரை மேயும் ஆடுமாடுகளைப் போல் செயல்படுகிறார்கள். ....."