இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > அருளாட்சித் தத்துவம்
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

அருளாட்சித் தத்துவம்

"அருட்பேரரசு என்ற ஓர் அமைப்பு அல்லது ஒரு நிறுவனம் உருவாக்கப் படல் வேண்டும், அதை உருவாக்குவதற்கென்று தயாராக்கப் பட்டிடும் அருட்படை என்றென்றைக்கும் அரசாங்கம் என்ற கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு தனித்து அருளாட்சி நாயகத்தின் தலைமையின் கீழ் இயங்க வேண்டும். அப்பொழுதுதான் எல்லா இனங்களும், மொழிகளும், நாடுகளும் யாருக்கும் அடிமைப்படாமல் முழுமையான விடுதலை உணர்வுடன் வாழ முடியும்:"
-- ஆதிசிவனாரின் குருபாரம்பரிய வாசகம்

இந்த ஆதிசிவனாரின் குருவாசகப்படியேதான் ஞானாச்சாரியார் பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள், கருவறைக் கோபுரம் பெரியதாகவும், மிக உயரமுடையதாகவும் அமைத்துத் தாம் உருவாக்கிய சத்தி இலிங்கம் பெரிய கோயிலைச் சுற்றி மிக வலுவான கோட்டை மதிலும், நன்கு அகன்று விரிந்த ஆழமிக்க அகழியும் உடைய 'அருட்கோட்ட நகரம்' ஒன்றை உருவாக்கி  அருளாட்சி அமைப்புப் பணியில் ஈடுபட்டார்.

அவர், அருளாட்சியைக் குமரி முதல் இமயம் வரை வளமும், வலிமையும் உடையதாக விரிவாக்குவதற்காகத்தான் முதல் விசயாலயன் மூலம் பொதிகை மலையிலிருந்து கொண்டு வரப்பட்ட சத்தி இலிங்கத்தைத் தஞ்சையிலும், சிவ இலிங்கத்தைக் 'கங்கை முடிகொண்டான் புரத்திலும்'  [கங்கையை முடியில் கொண்ட சிவபெருமானின் கோட்டைக் கோயிலை உடைய ஊர்]  நிறுவிக் கருவறைகளை அமைத்தார். ஆனால், இவையிரண்டுக்கும் சேர்த்து (1008) ஆயிரத்தெட்டு சிவாலயங்களையும், (243) இருநூற்று நாற்பத்து மூன்று சத்தி .பீடங்களையும், (108) நூற்றெட்டுத் திருப்பதிகளையும் உயிர்ப்பு செய்வதற்காக இவர் பொதிகை மலைக் குகையிலிருந்து வெளிப்பட்ட போது 'தானே வெளிக் கொண்டு வந்த இலிங்கத்தைத்' தாரமங்கலத்தில் 'வெட்டவெளிக் கருவறையிலும்'; பிறகு 'வழிபாட்டு நிலையக் கருவறை'யிலுமாகத் தேற்றி, மாற்றிக் கட்டியமையால்தான் அருளாட்சிக்கென ஒரு சோழ அரச பரம்பரையைத் தோற்றுவிக்க முடிந்தது.  அச்சோழ பரம்பரையும், இளமுறியாக் கண்டத்துச் சித்தர் காக்கையர் எனும் காகபுசுண்டரின் வழித் தோன்றலான சூரிய குலத்துக்கு உரியதாகத் தோற்றுவிக்கப் பட்டது. [இந்த 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி கருவூறார், இளமுறியாக் கண்டத்துச் சித்தர் கருவூறாரின் சந்திர குலத்தைச்  சேர்ந்தவராக இருந்தும்; தன் குலத்துப் பாண்டிய அரச பரம்பரையைப் பயன்படுத்தி அருளாட்சி அமைக்க முடியாமல் போய்விட்ட செய்தி மிக விரிவான வரலாற்று நூலாக எழுதப் பட்டிருக்கிறது.]

இப்படி, ஞானாச்சாரியாரான பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதியால் முக்கோண எல்லைகளாக கட்டப்பட்ட 'தாரமங்கலத்' தின் 'வெட்ட வெளிக் கருவறை', 'கங்கையை முடியில் கொண்ட சிவபெருமானின் கோட்டைக் கோயிலை உடைய ஊரின்' 'கருவறை', 'தஞ்சாவூரின்' 'வழிபாட்டு நிலையக் கருவறை' எனும் மூன்று வகையான கருவறைகள் உருவாக்கிய முக்கோணப் பீடத்தைப் பயன்படுத்தித்தான் அருளாட்சிக்குரிய 'இந்து மத அருட்பேரரசை' உருவாக்கினார். எனவேதான், மேற்படி மூன்று கோயில்களையும் ஆரம்பக் காலத்தில் தருப்பைப் புல் வேய்ந்த 'கூரைக் கோயில்களாக', 'குடிசைக் கோயில்களாக' உருவாக்கினார்.

இம்மூன்று கோயில்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் அருளாட்சிக்கெனத் தஞ்சைச் சத்தி இலிங்கக் கோயிலைச் சுற்றி வலிய கோட்டை மதில்களையும், பெரிய அகழிகளையும் உடைய அருளாட்சித் திருநகரான தஞ்சாவூரை உருவாக்கினார். இத் தஞ்சாவூரைச் சிறுகச் சிறுக ஏழு கோட்டை மதில்களையும், அகழிகளையும் உடைய ஏழு வட்ட வடிவ நகரப் பகுதிகளைக் கொண்ட மாபெரும் அருட்பேரரசின் தலைநகரமாக உருவாக்கும் திட்டத்தைத் தயாரித்தார்.

அதன்படி தஞ்சாவூரை உருவாக்குவதற்காக முதல் விசயாலயன் எனப்படும் 'வெற்றித் திருமகன்' எனும் சித்தர் காகபுசுண்டரின் சூரிய குல இளவரசனைச் சோழ அரசனாகத் திருச்சி உறையூரில் முடிசூட்டினார். பிறகு, அவனுக்கே முற்கால அல்லது பழங்காலச் சோழர்களின் தலைநகரமான திருவாரூரில் உள்ள வீதி விடங்கப் பெருமான் ஆலயத்தில் [திருவாரூர் தியாகேசர்] இரண்டாவது முறையாக முடிசூட்டினார். அதற்குப் பிறகு, அவனுடைய அரசியல் செல்வாக்கும் படைவலிமையும் வலிமைப் பட்டதற்கேற்பக் கும்பகோணம் பழையாறையில் மூன்றாவது முறையாக முடிசூட்டினார்.

அதன்பிறகு சோழப் பேரரசு மிகமிக விரைவில் விரிந்து வளர்க்கப் பட்டது. இந்தச் சோழப் பேரரசை ஞானாச்சாரியார் அவர்களே ஓர் இந்துமத அருட்பேரரசாக நேரடிப் போர்க்களங்களில் பங்கு பெற்று உருவாக்கினார். அதனால், ஞானாச்சாரியாரே ஒன்பதாவது அரசனான இராச இராச சோழன் எனப்பட்ட அருள்மொழித் தேவன் காலத்தில் இமயம் முதல் குமரி வரை இருந்த எல்லா அரசுகளுடனும் தொடர்பு கொண்டு 'தஞ்சையின் சத்தி இலிங்கக் கோயிலின் கோட்டை நகரை மட்டும் அருளாட்சித்  தலைநகராக' அறிவித்து அருளாட்சியை நிலை நாட்டினார். அருளாட்சித் தொடர்பான அனைத்து அலுவலகங்களும் தஞ்சைப் பெரிய கோயில் வளாகத்திலேயே இயங்குமாறு செய்தார். தாமே அருளாட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். தமது சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள் எனும் முப்பெரும் தரத்தினரையே அருளாட்சியின் அதிகாரிகளாக்கிக் குமரி முதல் இமயம் வரை பரவிக் கிடந்த இந்து மத அருளாட்சியைச் செவ்வனே நடத்தினார். 

இந்த அருளாட்சிக்குத் தேவையான உலகியல் வசதி வாய்ப்புக்களை யெல்லாம் வழங்கிட ஆறு கோட்டை அரண்களையும், ஐந்து ஆற்று நீர் அகழிகளையும் உடைய தஞ்சை மாநகரையே இந்து மத அருட்பேரரசான சோழப் பேரரசின் அரசியல் தலைநகராக அறிவித்தார். இருப்பினும், அரசியலதிகாரிகளோ, அரச குடும்பத்தினரோ இந்த அருட்பேரரசின் தலைநகருக்கு நடுவில் பெரிய கோயிலைச் சுற்றியிருந்த ஒரே கோட்டை மதிலையும், ஒரே ஓர் அகழியையும் உடைய அருளாட்சித் தலைநகருக்குள் ஞானாச்சாரியாரின் அனுமதியின்றி நுழையக் கூடாது என்ற சட்டம் செய்யப் பட்டிருந்தது.

அதாவது, இமயம் முதல் குமரி வரை நிகழ்ந்திட்ட அருளாட்சியை நிருவகிக்கும் அருளாட்சித் திருநகர் தஞ்சைப் பெரிய கோயிலைச் சுற்றியுள்ள வளாகத்தில் ஒரே ஒரு கோட்டைச் சுவரையுடைய சிறிய நகரமாக இருந்தது. இந்த அருளாட்சித் திருநகரைப் பாதுகாப்பதற்காகத்தான் சோழப் பேரரசின் தலைநகரான தஞ்சாவூர் இந்த அருளாட்சித் திருநகரைச் சுற்றி ஐந்து வட்ட வடிவப் பகுதிகளையும், அவற்றைச் சுற்றி ஐந்து ஆற்று நீர் அகழிகளையும், ஆறு அரண்களையும் உடையதாக அமைக்கப் பட்டிருந்தது.

ஏனெனில், ஏற்கனவே அருளாட்சித் திருநகரங்களாக விளங்கிய மதுரை மாநகர் மீனாட்சியம்மன் ஆலயத்தைச் சுற்றி ஏழு அகன்ற வீதிகளை உடையதாக அமைக்கப் பட்டிருந்தது. அதேபோல், சிதம்பரம் எனும் அருளாட்சித் திருநகரம் தில்லை நடராசப் பெருமானின் ஆலயத்தைச் சுற்றி ஏழு அகன்ற வீதிகளை அடுத்தடுத்து வட்ட வடிவமாக உடையதாக அமைக்கப் பட்டிருந்தது என்ற குறிப்பு ஞானாச்சாரியாரால் அவரது அரசபாரம்பரியத்திலும், குருபாரம்பரியத்திலும் குறிக்கப் பட்டிருந்தது. மேலும், அருள்மிகு ஞானாச்சாரியார் அவர்கள் உலகியலில் இந்து மத வளவளர்ச்சிக்கும், மலர்ச்சிக்கும், ஆட்சி செழிச்சிக்கும் பாடுபட்டிடவே சோழப் பேரரசை இந்து மத அருட்பேரரசாக உருவாக்கினார் என்பதனால் சோழப் பேரரசின் தலைமைச் சேனாதிபதியாகத் தமது திருமகன் கருவூர்த் தேவரை நியமித்திருந்தார். அவரே, ஞானாச்சாரியாரிடம் சேவலோன் போர்க்கலைகள் பயின்றவரில் தலைமை மாணாக்கராகவும் ஒப்பாரும் மிக்காருமில்லா பெருவீரராகவும் திகழ்ந்தார்.

அக் கருவூர்த் தேவருக்கு அடுத்த நிலையில் பெரு வீரனாகக் கருதப் பட்டவன்தான்  இராசராச சோழன் எனப்பட்ட அருள்மொழித் தேவன். இருப்பினும், வில்போர், வாட்போர், தனிப்போர் முதலியவைகளில் கருவூர்த் தேவர் தாமொரு குருபீடம், தாமொரு ஆச்சாரியார் என்ற தனித்த பெருமையை உரிமையோடு நிலைநாட்டிய மிகப் பெரிய வீரராகத் திகழ்ந்தார். இவரைப் போலவே, இவரது மகனான திருமாளிகைத் தேவரும் ஆச்சாரிய பாரம்பரியத்துக்கும், குருபீடத்தின் பாரம்பரியத்துக்கும் உரிய வீரியமிக்க மிகப் பெரிய வீரராகத் திகழ்ந்தார்.

இப்படியெல்லாம், ஞானாச்சாரியாரின் குடும்பம் தொடர்ந்து மூன்று தலைமுறையாகப் பிற்காலச் சோழப் பேரரசின் அரசியலில் நேரடியான உரிமையும், உறவும், அதிகாரமும் பெற்றுத் திகழ்ந்தது. அதனால்தான், 'தமிழர்கள்', 'தமிழினம்', 'தமிழ்மொழி', 'தமிழர் மதம்', 'தமிழ்நாடு', 'தமிழர் பண்பாடு', 'தமிழர் நாகரீகம்', 'தமிழர் கலை', 'தமிழினப் பெருமை', 'தமிழிலக்கிய அருமை', 'தமிழினப் பற்று', 'தமிழின வரலாற்றுப் பெருமிதம்', 'தமிழின மானம்', 'தமிழரின் தன்னம்பிக்கை', 'தமிழின இலக்கிய இலக்கண மரபுகளைப் பேணல்', .... முதலிய பண்புநலன்களை நன்கு முளைவிட்டுக் கிளைத்துச் செழித்து வளர்ந்து கொழுத்த பயன்களை வழங்கிக் கொண்டேயிருந்தன.

அதனால், சாதி வெறியோ, மத வெறியோ, பணவெறியோ, பதவி வெறியோ, அதிகார வெறியோ, அகம்பாவ ஆணவச் சண்டைச் சச்சரவு வெறியோ, வீணான போட்டாப் போட்டிக் கலகங்களோ, பொறாமைக் குழப்பங்களோ ..... இல்லாமல் தமிழர்களில் பெரும்பாலானவர்கள்

  • 'தாங்கள் தமிழர்கள்',
  • 'தங்களது இனம் தமிழினம்', 'தங்களது மொழி தமிழ்மொழி',
  • 'தங்களின் வாழ்வின் வளமும், வருங்கால வாழ்வும் தாய்மொழியான தமிழ்மொழியின் பெருமையிலும், உரிமை வாழ்விலும்தான் இருக்கிறது',
  • 'தமிழின ஒற்றுமையும், பற்றும், பாசமும், ஒருமைப்பாடும் தமிழரின் மதமான பதினெண் சித்தர்களின் மெய்யான இந்துமதத்தின் வளமிக்க வலிமையான ஆட்சி நிலையின் மாட்சிமையில்தான் அடங்கியிருக்கின்றன',
  • 'தமிழர்களின் விடுதலை உணர்வில்தான் அன்னியரின் ஆதிக்கங்களை முறியடிக்கும் சத்தி இருக்கிறது',
  • 'தமிழ்நாட்டின் சமய சமுதாய அரசியல் வாழ்வுகளில் தமிழரின் உரிமையும், பெருமையும், வளமும், வலிவும் வீழ்ச்சியுற்றுத் தாழ்ச்சி பெற்று அடிமையாகிடும் அவலம் வராமல் காப்பது  தமிழரின் தன்மான உணர்வு, இனப்பற்று, தமிழ்மொழிப் பாசம் எனும் முக்கோணக் கோட்டைதான்',
  • 'தமிழர்க்கே உரிய பதினெண்சித்தர்களின் சித்தர் நெறியான சீவநெறி எனப்படும் மெய்யான இந்துமதத்தின்பால் தமிழர்க்குள்ள பற்றும், பாசமும், பத்தியும், ஆழ்ந்த ஈடுபாடும்தான் தமிழ்நாட்டின் கட்டுக் கோப்பைக் கெட்டுப் போகாமலும், பட்டுப் போகாமலும் காப்பாற்றக் கூடியவை',
  • 'தமிழர் மதமான பதினெண் சித்தர்களின் மெய்யான இந்துமத நெறிப்படியே வாழும் வாழ்வுதான் தமிழருக்கிடையே தமிழினத்திற்கோ, மொழிக்கோ, நாட்டுக்கோ, துரோகியோ, விரோதியோ தோன்றாமல் தடுக்கும் ஆற்றலுடையது',
  • 'பதினெண் சித்தர்கள் வழங்கிய தமிழரின் மதமான மெய்யான இந்துமதத்தின் தத்துவங்களும், சித்தாந்தங்களும்தான் ஒவ்வொரு தமிழனையும், தன்னுடைய பொறுப்பின்மையாலோ அல்லது பேராசையாலோ அல்லது தவறாலோ தமிழின மொழி நாட்டு உரிமைக்கும், பெருமைக்கும், பீடுமிகு விடுதலை வாழ்வுக்கும் கேடு நிகழ்ந்திடக் கூடாது என்ற விழிப்புணர்வு பெற்று வாழச் செய்கின்றன'

...... என்று இப்படிப்பட்ட கருத்துரைகளால்தான் அக்காலத்தில் தமிழர்கள் அனைவருமே நல்லுணர்வு பெற்றுத் தமிழர்களாக வாழ முடிந்தது.

ஞானாச்சாரியாரான பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள், பீடாதிபதி மரபுப்படி தன்னை அருளாட்சி நாயகமாக முழுமையாகச் செயல்படுத்திட்டார். அதன் பயனாக, உயரிய கருவறைக் கோபுரமுடைய தஞ்சைப் பெரியகோயில் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பெரிய கோயில் வளாகத்தில் அருளாட்சித் திருநகர் உருவாக்கப் பட்டது. அந்த அருளாட்சித் திருநகரை மையமாகக் கொண்டு இந்துமத அருட்பேரரசான பிற்காலச் சோழப் பேரரசின் தலைநகரான தஞ்சை மாநகரை உருவாக்கும் பணி பெருமளவில் நிறைவு பெற்றுக் கொண்டிருந்தது.

அத்தகைய தமிழின மொழி மத வளர்ச்சியின் உச்சக்கட்ட நிலையில் இந்துமத அருட்பேரரசின் மன்னனான இராசராச சோழன் என்னும் அருள்மொழித் தேவன் ஞானாச்சாரியாரின் அருளாட்சித் தத்துவத்திலும், செயல் சித்தாந்தத்திலும் மன்னன் என்ற மமதையால் கண்மூடித் தனமாகத் தலையிட்டுத் தொல்லை கொடுத்தான். அதன் விளைவாக, உலகியலாக அரசனாக இருந்த இராசராச சோழன் பெயரிலும், அருளியலாக அருட்பேரரசராக விளங்கிய ஞானாச்சாரியாரின் பெயரிலுமாக மக்கள் இருபெரும் பிரிவுகளாகப் பிரிந்து போரிட்டுக் கொள்ளும் விபரீத நிலை விளைந்தது. அந்த விபரீத நிலையை அப்படியே வளரவிட்டால் ஞானாச்சாரியார் அரும்பாடு பட்டு இமயம் முதல் குமரி வரை உருவாக்கிய அருளாட்சியின் நிறுவன நிருவாகங்கள் பெருமளவில் சிதைவுற நேரிடும்;

அது மட்டுமல்லாமல், ஞானாச்சாரியாரே தமது அருளாட்சியைப் பாதுகாப்பதற்காக உருவாக்கிய சூரிய குல இந்துமதப் பேரரசு [பிற்காலச் சோழப் பேரரசு] மிகப் பெரிய அளவில் கடுமையான அழிவுகளைப் பெற நேரிட்டு விடும். அவற்றை யெல்லாம் எண்ணிப் பார்த்து ஞானாச்சாரியார் தமக்கும் இராசராச சோழனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு  தமிழின மொழி மத விடுதலையைப் பாதித்து விடாத வண்ணம் தாமே தம்மைத் தனிமைப் படுத்திக் கொண்டு நிலவறைக்குள் சென்று நீள் தவத்தில் ஆழ்ந்திட்டார். அதாவது தம்முடைய சார்பாக உள்ள மக்கள், இராசராச சோழனின் சார்பாக உள்ள மக்களோடு போரிடாமல் தடுத்து விட்டார். [இந்த மாபெரும் வரலாற்று நிகழ்ச்சி ஆயிரக் கணக்கான பக்கங்கள் கொண்ட சில தனி நூல்களாக எழுதப் பட்டிருக்கிறது. அவை அச்சாகி நூல்களாக வெளிவரத் தஞ்சைப் பெரிய கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஞானாச்சாரியார் சித்தர் கருவூறார் அவர்களை வழிபடும் பத்தர்கள்தான் உதவ வேண்டும். அத்துடன் இவரைப் பெற்றிய முழுமையான வரலாறும், இவருடைய சாதனைகளும், போதனைகளும் பல தொகுதிகளாக அச்சாகி வெளிவரத் தமிழ் மொழியுணர்வும், இனவுணர்வும், மத உணர்வும், நாட்டுணர்வும் உடைய அனைவருமே உதவி செய்ய முன்வர வேண்டும். இன்றைக்குப் பதினெண் சித்தர் மடம், G N T  சாலை, காரணோடை, சென்னை-600067  மேற்படி முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. தொடர்பு கொள்ளூங்கள்].

தஞ்சைப் பெரிய கோயிலில் எழுந்தருளும் ஞானாச்சாரியாரை யடுத்து அவரது மகன் கருவூர்த் தேவரும், பேரன் திருமாளிகைத் தேவரும் அடுத்தடுத்து ஞானாச்சாரியாரின் அருளாட்சிப் பணிகளைக் கவனித்து (142) நூற்று நாற்பத்திரண்டு ஆண்டுகள் இந்து மதப் பேரரசான பிற்காலச் சோழப் பேரரசைக் காப்பாற்றினார்கள். அவர்கள் இருவரும் தங்களுக்குப் பிறகு அருளாட்சிப் பணி நிகழ்ந்திடுவதற்காக இமயத்தின் முடி முதல் குமரி முனை வரை எண்ணற்ற இந்து மத மடங்கள், மடாலயங்கள் பீடங்கள், திருவடிகள், சன்னிதானங்கள், ஆதினங்கள், பண்டார சந்நதிகள்..... முதலியவற்றைத் தங்கள் காலத்திலேயே வளமும், வலிவும், ஆட்சிநிலையும் உடையதாக உருவாக்கினார்கள்.

ஆனால் இவர்களுக்குப் பிறகு அனைத்து வகையான நிறுவன நிருவாகங்களுக்கிடையே ஒற்றுமையும், ஒருமைப்பாடும், நட்பும், தோழமையும், இணைந்து செயல்படும் உறவும்.... இல்லாமல் போய்விட்டன. அதனால் இந்துமத அருளாட்சி சிதைந்தது, சீரழிந்தது. அதையடுத்து மிக விரைவிலேயே இந்து மதப் பேரரசான பிற்காலச் சோழப் பேரரசு வீழ்ச்சியுற்று தாழ்ச்சியுற்றது.*

[* இச்சோக வரலாற்றைக் கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் எனும் உ. இராமசாமிப் பிள்ளையும், முடிகண்ட சோழபுரத்துச் சித்தர் காகபுசுண்டர் ம.பழனிச்சாமிப் பிள்ளையும், ‘இந்துமத அருட்பேரரசின் எழிச்சியும் வீழ்ச்சியும்’, ‘தமிழின வீழ்ச்சியும், தாழ்ச்சியும்’, ‘அருளாட்சி அமைப்புப் பணியின் வளர்ச்சியும் ஆட்சி மீட்சியும்’, ‘அருளாட்சி நாயகத்தின் முடிவின் முடிவு’, ‘முதலாம் இராசராச சோழனின் தற்கொலை’, ‘தமிழினப் பேரரசின் வீழ்ச்சியும் தமிழர்களின் தாழ்ச்சியும்’ என்ற தலைப்புகளில் ஏராளமாக எழுதியிருக்கிறார்கள். இவையெல்லாம் அச்சாகி வெளிவந்தால் இன்றைய தமிழ் மொழி தமிழ் இலக்கியம், தமிழர் சமுதாயம், தமிழர் அரசியல்..... முதலிய அனைத்தும் புத்துயிர் பெறும், புத்தொளி பெறும், புதுவாழ்வு பெற்றிடும்.... இதற்காக உதவ விரும்புவோர் பதினெண் சித்தர் மடத்தோடு தொடர்பு கொள்ளலாம். - பதினெண் சித்தர் மடம், G.N.T. சாலை, காரணோடை, சென்னை - 67]

அருளாட்சித் தத்துவப் படி ‘பொருளுலக ஆட்சி நாடாளும் அரசர்களிடமும், அருளுலக ஆட்சி இந்துமதத் தந்தையான பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் வாழையடி வாழையென வரும் அருளாளர்களிடமும்தான் இருக்க வேண்டும். இப்படி எல்லா நாடுகளுக்கிடையிலும், அருளுலக ஆட்சியின் இணைப்பும், பிணைப்பும், தொடர்பும் நீடித்து நிலைத்து நிற்க வேண்டும். அப்பொழுதுதான் உலக அமைதி, சமாதானம், நட்பு, சமத்துவம், சகோதரத் தத்துவம், கூட்டுறவு, நல்வாழ்வு முதலியவை நிலைத்து நின்றிடும். அதாவது பொருளுலக வெறிகளால் மூளக்கூடிய போர்களைக் கூட அருளுலக ஆட்சியால் தடுத்திட முடியும்.’

இம்மாபெரும் அருளாட்சித் தத்துவத்துக்காகத்தான் ஞானாச்சாரியார் பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு  சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கினார். ஆனால், அப்பேரரசு அருள்மொழித் தேவன் காலத்தில்  அருளாட்சித் தத்துவத்தையும், அருட்பேரரசரான ஞானாச்சாரியாரையும், அருளாட்சிக்காகக் கட்டப்பட்ட கருவறைக் கோபுரமுடைய சத்தி இலிங்கக் கோயிலையும், அக் கோயிலைச் சுற்றியமைந்த அருளாட்சித் திருநகரையும் முழுமையாக ஏற்கவில்லை. முறையாகப் பேணவில்லை.

அக்கருத்துப் போராட்டங்களால் இந்தியா முழுதும் உருவான அருட்பேரரசே சிதைந்தது. எனவேதான், மீண்டும் இமயம் முதல் குமரி வரை உள்ள மக்களிடையே பதினெண்சித்தர்களுடைய மெய்யான இந்துமத ஆட்சி மீட்சியாலும், இந்துமத மறுமலர்ச்சியாலும் உருவாகியிருந்த ஒற்றுமை, ஒருமைப்பாடு, சகோதரத் தத்துவம், சமாதானம், அமைதி முதலான அனைத்து வகையான நல்ல பண்புகளும் மிக விரைவில் சிதைந்து சீரழிந்தன. அதன் பிறகே வேற்று மதங்களும், மாற்றார் ஆட்சிகளும், அன்னிய மொழிகளும் தங்கள் விருப்பம் போல் இந்துமத நாடான இந்தியாவிற்குள் எல்லா வகையான விளையாட்டுக்களையும் விளையாட ஆரம்பித்தனர். எனவேதான் ஞானாச்சாரியார் உருவாக்கிய இந்துமத அருட் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்திய நாட்டின் தனிமனித வாழ்வு குடும்ப வாழ்வு, அரசியல் வாழ்வு முதலிய அனைத்திலுமே தன்னம்பிக்கை, தன்மானப்  பிடிப்பு, நீதி, ஒற்றுமை, பற்று, பாசம், அன்பு முதலிய அனைத்துப் பண்புகளும் பெருமளவில் சிதைந்தன, சிதைந்தன, சிதைந்தன.

இவற்றையெல்லாம் எண்ணி இன்றைய ஞானாச்சாரியாரின் அருளாட்சி அமைப்புப் பணியில் பங்கு பெற  பதினெண் சித்தர் மடத்துடன் தொடர்பு கொள்ள வாரீர்! வாரீர்! வாரீர்!

“அருளுலகப் பொருளுலக இருளகற்றும் ஞானாச்சாரியாரின் பணியில் இரண்டறக் கலப்பதே இறைமைப் பணியாகும், அதுவே அவரவர் விரும்பும் பத்தி, சத்தி, சித்தி, முத்திகளைத் தரும்”

- குருபாரம்பரிய வாசகம்

« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

ஞானாச்சாரியார்கள்

பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும், இம் மண்ணுலகுக்கு வழங்கிய அண்டபேரண்டமாளும் இந்து மதத்தில், 'ஞானாச்சாரியார்' எனப்படுபவர்கள் பதினெண்சித்தர் பீடாதிபதிகளே. இந்த ஞானாச்சாரியார்களே இம்மண்ணுலகின் 'ஞானம்', 'அகஞானம்', 'புறஞானம்', 'விஞ்ஞானம்', 'மெய்ஞ்ஞானம்' எனும் ஐந்தினையும் மனிதரின் ஐம்புலன்களின் மருந்தாகவும், விருந்தாகவும் வழங்கியவர்கள்..... [மேலும் படிக்க...]

 

பெரிய கோயில்

   "... தமிழ் மொழி, இனம், நாட்டைக் காப்பதற்குத்தான் 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் கருவறைக் கோபுரமுடைய கோயிலை தஞ்சையில் கட்டினார். மிகவும் கடினமான இம்மாபெரும் செயலைச் செய்தது மட்டுமல்லாமல், கருவறைக் கோபுரத்தை உடைய கோயிலை எப்படி கட்டுவது என்ற இரகசியத்தையும், பதினெட்டு வகை அருட்கலைகளையும், ஐந்திறப் பூசை முறைகளையும், அருளுலக வாழ்வுக்குரிய சாத்தர, சாத்திற, சாத்திர, தோத்தர, தோத்திர, தோத்திறங்கள் எனப்படும் பதினெட்டு வகையான அருளுலக இலக்கியங்களையும், மற்றவற்றையும் மனந்திறந்து பலருக்கும் கற்றுக் கொடுத்தார். ..... [மேலும் படிக்க...]

 

ஞானாச்சாரியார் வரலாறு

    "மூன்று உகங்களாகச் செழிச்சி மிக்க மதவாழ்வைத் துய்த்திட்ட நம் தமிழர்கள் தங்களுக்கென்று குரு, தங்கள் குடும்பத்திற்கென்று குருக்கல், பூசாறி, தங்களுடைய ஆன்மீக வாழ்வுக்கென்று ஆச்சாரியார், குருபீடம்,... இருந்து வருவதைத் தெரிந்திருந்தும் தேடி நாடிச் சென்று பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவேதான், இவர்களுடைய அகவாழ்விலும், புறவாழ்விலும் தன்னம்பிக்கையோ, துணிவோ, கட்டுக்கோப்போ, நிறுவன நிருவாக இணைப்போ, பிணைப்போ, அருளுலக வழிகாட்டலோ, வழித்துணையோ இல்லாமல் போய்விட்டது. எனவேதான், மாற்றாரும், வேற்றாரும் தங்கள் தங்களின் விருப்பம் போல் வேலியில்லாப் பயிரை மேயும் ஆடுமாடுகளைப் போல் செயல்படுகிறார்கள். ....."   

[மேலும் படிக்க...]

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |